தமிழிசைச் சங்கத்திற்கு முதல் அங்கீகாரம்

நெடிய வரலாற்றினையுடைய தமிழிசை ஒரு சில நூற்றாண்டுகள் அருகிக் காணப்பட்ட நிலைகண்ட வள்ளல் ராஜா சர் அண்ணாமலை செட்டியார் தமிழிசை மீண்டும் ஆக்கம் பெறவேண்டும் எனக் கருதி மேற்கண்ட முயற்சியே தமிழிசைச் சங்கத்திற்கு முதல் அங்கீகாரமெனக் கொள்ளலாம்.

அக்காலத் தமிழறிஞர்கள் - ஆர்வலர்கள், டாக்டர் ஆர்.கே.சண்முகம் செட்டியார், டி.கே.சி., கல்கி, சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரி, பேரறிஞர் சி.என்.அண்ணாதுரை போன்ற பெருமக்களின் ஆர்வமும் ஆக்கமும் இச்சங்கத்தின் உயர்ந்த குறிக்கோளுக்கு உறுதுணையாக அமைந்தன.

தமிழக அமைச்சர்கள் பலருடைய பங்கேற்பு மட்டுமன்றி பாரதக் குடியரசின் முதல் தலைவர் பாபு ராஜெந்திர பிரசாத், இரண்டாவது தலைவர் எஸ்.ராதாகிருஷ்ணன் மற்றும் டாக்டர் ஜாகீர் உசேன் போன்றவர்கள் வருகை தந்துள்ளனர்.

60-ஆம் தமிழிசை விழாவினைத் தொடங்கி வைத்த டாக்டர் அப்துல்கலாம் அவர்களின் பங்கேற்பும் சங்கத்தின் பெருமைக்கும் செயல்பாட்டிற்கும் அங்கீகாரம் என்பதனை உறுதி செய்வனவாகும். அவருடைய உரையைக் கேட்க...

சங்கத்தின் செயல்பாடுகளைக் கண்காணித்து வரும் தமிழக அரசு சங்கத்தின் சார்பில் நடைபெற்றுவரும் தமிழிசைக் கல்லூரியின் பாட திட்டத்தினை ஏற்று அரசு இசைக்கல்லூரிகளிலும் செயல்படுத்தி வருவதும் கல்லூரியின் மேம்பாட்டினை வற்புறுத்துவதாகும்.

மேலும் அரசின் சார்பில் நடைபெற்றுவரும் சென்னை இயல், இசை, நாடக மன்றமும், புதுடெல்லி சங்கீத் நாடக அகெடெமி மற்றும் பண்பாட்டுத்
துறை அமைச்சகமும் ஆற்றிவரும் உதவியும் சங்கத்தின் அங்கீகாரத்திற்குச் சான்றாவன.

வருடந்தோரும் நிகழும் இசை விழாக்களுக்கும், சங்க முக்கிய நிகழ்வுகளுக்கும் வருகைத் தந்த சிறப்பு விருந்தினர்கள்

ஆண்டு
சிறப்பு விருந்தினர்

1943 - 1944 டாக்டர். ராஜா சர் அண்ணாமலை செட்டியார்
1943 - 1944 திரு. பம்மல் சம்பந்த முதலியார்
1943 - 1944 திரு. டி.கே. சிதம்பரம் முதலியார்
1944 - 1945 திவான் பகதூர் தி.மூ. நாராயணசாமிப் பிள்ளை
1944 - 1945 சர். பி.டி. இராசன்
1945 - 1946 திரு. எம். இராதாகிருஷ்ணப் பிள்ளை
1945 - 1946 திருவாரூர் திரு. வி. கலியாணசுந்தர முதலியார்
1946 - 1947 இராவ்பகதூர் டி.எம். சின்னையாப் பிள்ளை
1946 - 1947 அமைச்சர் திரு.எம். பக்தவத்சலம்
1947 - 1948 கல்கி திரு.ரா. கிருட்டிணமூர்த்தி
1947 - 1948 அமைச்சர் திரு.டி.எஸ். அவிநாசிலிங்கம் செட்டியார்
1948 - 1949 திரு.சி.எஸ். முத்துரங்க முதலியார்
1948 - 1949 முதம் அமைச்சர் ஓமந்தூர் திரு.பி.இராமசாமி ரெட்டியார்
1949 - 1950 திரு.எஸ். இராமசாமி நாயுடு
1949 - 1950 நாமக்கல் திரு.வே. இராமலிங்கம் பிள்ளை
1949 - 1950 திரு. டி. சுத்தானந்த பாரதியார்
1950 - 1951 முதல் அமைச்சர் திரு.பி.எஸ். குமாரசாமி ராஜா
1951 - 1952 திரு.எஸ். நடேசப் பிள்ளை
1952 - 1953 முதல் அமைச்சர் திரு.சி.இராசகோபலாச்சாரியார்
1953 - 1954 அமைச்சர் திரு.சி. சுப்பிரமணியம்
1954 - 1955 முதல் அமைச்சர் திரு.கு. காமராஜ்
1954 - 1955 திரு.பி.எஸ். குமாரசாமி ராஜா
1955 - 1956 தவத்திரு குன்றக்குடி அடிகளார்
1955 - 1956 பேராசிரியர் தெ.பொ. மீனாட்சி சுந்தரம் பிள்ளை
1956 - 1957 அமைச்சர் திரு.ஓ.வி. அளகேசன்
1957 - 1958 சட்டமன்றத் தலைவர் திரு.எம்.ஏ.மாணிக்கவேலு நாயகர்
1958 - 1959 அமைச்சர் திரு.எம். பக்தவத்சலம்
1959 - 1960 டாக்டர் சுப்புராயன்
1960 - 1961 அமைச்சர் திரு.எம். பக்தவத்சலம்
1961 - 1962 திருவாட்டி செளந்தரம் கைலாசம்
1962 - 1963 சட்டமன்றத் தலைவர் தி.செல்லபாண்டியன்
1963 - 1964 அமைச்சர் திரு.சி. சுப்பிரமணியம்
1964 - 1965 அமைச்சர் திரு. நல்லசேனாபதி சர்க்கரை மன்றாடியார்
1965 - 1966 அமைச்சர் திரு.சே.பூவராகவன்
1966 - 1967 அமைச்சர் திரு.வி. இராமையா
1967 - 1968 திரு.சி. இராசகோபாலாச்சாரியார்
1968 - 1969 அமைச்சர் கலைஞர் மு.கருணாநிதி
1969 - 1970 அமைச்சர் திரு.கே.ஏ. மதியலகன்
1970 - 1971 ஐ.நா. அவைத் தலைமைச் செயலர் திரு.சி.வி. நரசிம்மன்
1971 - 1972 தமிழக ஆளுநர் கே.கே. ஷா
1972 - 1973 அமைச்சர் பேராசிரியர் திரு.க. அன்பழகன்
1973 - 1974 உயர்நீதிமன்ற நடுவர் திரு.பி.ஆர். கோகுலகிருஷ்ணன்
1974 - 1975 உயர்நீதிமன்ற நடுவர் திரு.எம்.எம். இஸ்மாயில்
1975 - 1976 அமைச்சர் திரு.க. இராசாராம்
1976 - 1977 தமிழக ஆளுநர் மோகன்லால் சுகாதியா
1977 - 1978 தமிழக முதல்வர் திரு.எம்.ஜி. இராமச்சந்திரன்
1978 - 1979 சட்டமன்ற மேலவைத் தலைவர் திரு.ம்.பொ. சிவஞானம்
1979 - 1980 அமைச்சர் திரு.இராம. வீரப்பன்
1980 - 1981 டாக்டர் இரா. நெடிஞ்செழியன்
1981 - 1982 அமைச்சர் திரு.எஸ். இராமச்சந்திரன்
1982 - 1983 இணை அமைச்சர் திரு.ஆர்.வி. சாமிநாதன்
1983 - 1984 அமைச்சர் திரு.சி. அரங்கநாயகம்
1984 - 1985 தமிழக ஆளுநர் எஸ்.எஸ். குரானா
1985 - 1986 சிக்கிம் ஆளுநர் டி.வி.ராஜேஷ்வர்
1986 - 1987 திரு.ஜி.கருப்பைய மூப்பனார்
1987 - 1988 இணை அமைச்சர் ப.சிதம்பரம்
1988 - 1989 தமிழக ஆளுநர் மேதகு டாக்டர் பி.சி. அலெக்சாண்டர்
1989 - 1990 தமிழக முதல்வர் மாண்புமிகு டாக்டர் கலைஞர் மு. கருணாநிதி
1990 - 1991 தமிழக ஆளுநர் மேதகு சுர்ஜித் சிங் பர்னாலா
1991 - 1992 தமிழக ஆளுநர் மேதகு பீஷ்ம நாராயண் சிங்
1992 - 1993 மாண்புமிகு நிதி அமைச்சர் டாக்டர் இரா. நெடுஞ்செழியன்
1993 - 1994 தமிழக முதல்வர்
மாண்புமிகு புரட்சித் தலைவி டாக்டர் ஜெ. ஜெயலலிதா
1994 - 1995 டாக்டர் எம்.எஸ். சுப்புலட்சுமி
1995 - 1996 மாண்புமிகு திரு.கே.வி. தங்கபாலு
1996 - 1997 மாண்புமிகு நீதிபதி திரு.கே.எஸ். பக்தவத்சலம்
1997 - 1998 தமிழக முதல்வர் மாண்புமிகு டாக்டர் கலைஞர் மு. கருணாநிதி
1998 - 1999 பத்ம விபூஷண் டாக்டர் செவாலியர் சிவாஜி கணேசன்
1999 - 2000 மாண்புமிகு வை.கோ.
2000 - 2001 வணக்கத்திற்குறிய மாநகர மேயர் திரு.மு.க. ஸ்டாலின்
2001 - 2002 தமிழறிஞர், பேராசிரியர் டாக்டர் அ.ச. ஞானசம்பந்தன்
2002 - 2003 பாரதக் குடியரசுத் தலைவர் மேன்மைதங்கிய டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல்கலாம் துல் கலாம்
2003 - 2004 தமிழக ஆளுநர் மேதகு பெ. ராமமோன் ராவ்
2004 - 2005 ரிசர்வ் வங்கி மற்றும் ஆந்திர மாநில முன்னாள் ஆளுநர்
டாக்டர் சி. அரங்கராஜன்
2005 - 2006 தமிழக அளுநர் மேதகு திரு. சுர்ஜித் சிங் பர்னாலா
2006 - 2007 உத்தரப்பிரதேச அளுநர் மேதகு டி.வி. ராஜேஷ்வர்
2007 - 2008 பேரூர் ஆத்னம் சாந்தலிங்க இராமசாமி அடிகளார்
2008 - 2009 இராம. வீரப்பன், தலைவர், சென்னை கம்பன் கழகம்
2009 - 2010 மாண்புமிகு நீதிபதி பி.சதாசிவம், உச்சநீதிமன்றம், புதுதில்லி
குன்றக்குடி பொன்னம்பல அடிகளார்
2010 - 2011 மாண்புமிகு மத்திய இணை அமைச்சர் முனைவர் எஸ். ஜெகத்ரட்சகன்
சேக்கிழார் அடிப்பொடி முதுமுனைவர் தி.ந. ராமசந்திரன்
2011 - 2012 காவியக் கவிஞர் வாலி
2012 - 2013 உச்சநீதிமன்ற நீதியரசர் மாண்புமிகு
எஃப்எம். இப்ராஹிம் கலிஃபுல்லா
2013 - 2014 ஜார்கண்ட மாநில முன்னாள் தலைமை நீதியரசர் மாண்புமிகு
எம். கற்பகவிநாயகம்
2014 - 2015 சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி மாண்புமிகு
எஸ். நாகமுத்து
2015 - 2016 கவிப்பேரரசு வைரமுத்து

எழுதியவர் : (30-Aug-16, 10:51 am)
பார்வை : 69

மேலே