தினம் ஒரு தத்துவ பாட்டு - 36 = 208

விடுகின்ற புகையால் வருகின்ற மாசு
இரப்பையை நிறைக்கிறதே…!
அடிக்கின்ற காற்றால் பறக்கின்ற தூசு
கருவிழியை துளைக்கிறதே..!

சூராவளி நேரம் - ஊரே கோரம்
உதவியின்றி தவிக்கிறதே
தீபாவளி நேரம் ஊரே சோகம்
உற்சாகமின்றி கிடக்கிறதே

தீராத கவலை தீர்ப்பாரின்றி
தொத்தாய் தொடர்கிறதே
ஆராத இரணம் ஆற்றுவாரின்றி
கொத்தாய் கொதிக்கிறதே

காணாத காட்சி கனவில்வந்து
கல்லாய் குத்திடுதே
வேண்டாத ஆசை நினவில்வந்து
முள்ளாய் தைக்கிறதே..!

தெரியாத வேலை கிடைக்கிறபோது
கிறுக்கு பிடிக்கிறதே..!
தெரிந்த வேலை கிடைக்காதபோது
வெறுப்பு பிறக்கிறதே..!

நினைப்பது யாவும் நடக்காதபோது
வாழ்க்கை வெறுக்கிறதே..!
நிலையான வாழ்வு அமையாதபோது
சர்ச்சை வலுக்கிறதே..!

நடப்பது யாவும் நன்மைக்கேயென்பது
நம்பிக்கையை தருகிறது…!
நம்மை நாமே நம்பாமலிருப்பது
வேடிக்கையாய் இருக்கிறது..!

போராடும் வாழ்க்கை போரடிச்சி போச்சி
போராட்டம் என்பது போர்க்களமாச்சி
செங்கொடி ஏந்திய செயல்வீரர் கூட்டம்
உண்டியேந்தியே நொந்துப்போச்சி…!

எழுதியவர் : சாய்மாறன் (30-Aug-16, 4:59 pm)
பார்வை : 168

மேலே