எத்தனை படிப்புகள் எத்தனை வாய்ப்புகள்

வாய்ப்பு உண்டென
நம்பும் மாணவர்கள்
பொறியியல் கல்வியில்
நாட்டம் கொண்டார்!
விண்ணப்பிக்கும்
கூட்டம் கண்டோம்!

இன்னும் குறிப்பாக
தகவல் தொழில் நுட்பம்தான் என
மோதிடக் கண்டோம்!

யதார்த்தம் என்ன?
பொறியியல் வேலையோ
தகவல் தொழில் நுட்பமோ
விழைவோர் எண்ணிக்கை மிகவே மிகவே! ---வேலையில்
நுழைவோர் எண்ணிக்கை குறைவே குறைவே!
நிலைப்போர் எண்ணிக்கை இன்னும் குறைவே!

எனின்
வேலை கிடைக்காத
பொறியியல் பட்டதாரி.........?


பொறியியல் பட்டதாரியின்
தனித் திறமைகள் யாவை?
தர்க்க ரீதியாக சிந்திக்கும் திறமை!
ஆய்ந்தறியும் வல்லமை!
தகவல் நிர்வாக வலிமை!

பின் என்ன!
திறமைகள் இவற்றை பயன்படுத்தி
மற்ற துறைகளில் ஒளிரலாமே!
தன் தன்மைக்கேற்ற
துறையில் நுழைந்தால்
செயல் திறன் வளர்ந்து
எதிர்காலம் ஒளிரும்!

உதாரணமாக --

பேச்சு வன்மையும் பொறியியல் அறிவும்
இணைந்து செயல்படும்
விற்பனைப் பொறியாளர்!

மனித வளத்துறை பதவிகளாம்
ஆள் சேர்ப்பு ஆய்வாளர்,
தொழில் பயிற்சி நிர்வாகி,
தொழில் உறவு நிர்வாகி!

இன்னும்
உற்பத்தி பிரிவில்
உற்பத்தி,தரக் கட்டுப்பாட்டு
மேற்பார்வையாளர்கள்!
வாடிக்கையாளர் சேவை பொறியாளர்!
எத்தனை வாய்ப்புகள்!
எத்தனை வாய்ப்புகள்!

இவற்றில்
பொறியியல் அறிவும்
தேவைப்படுவதால்
career திருப்தி
நன்கே உண்டு!

இந்தத் தேர்வு
பொறியியல் படித்து
பொறியாளர் வேலை
இல்லார்க்கு தீர்வு!

இனி பொறியியல் படிப்பே கிடைக்காதோர்க்கு................?

பொறியியல் பட்டதாரியின்
தனித் திறமைகள் கண்டோம்!
இவற்றை
எந்தப் பட்டதாரியும்
வளர்த்துக் கொள்ளலாம்!
விடாமுயற்சியால்!
சுய ஆராய்ச்சியால்!
சுய மேம்பாட்டால்!
எந்தத் துறையிலும் தேவைப் படும் இவை
உயரம் வரையும் வெற்றிகள் தருபவை!

பின் ஏன்.........................?
பொறியியல் துறைக்கும்
தகவல் தொழில் நுட்பத்துக்கும்
போட்டி போட்டுக்கொண்டு
மோதிட வேண்டும்?
சக்திக்கு மீறி
கடன் வாங்க வேண்டும்?
பயிர் நிலம் விற்று
நிதியாக்க வேண்டும்?

எந்தத் துறையிலும்
பட்டப் படிப்புக்குப் பின்
அந்தத் துறையின்
சிறப்புப் படிப்போ அன்றி
பட்ட மேற்படிப்போ இருப்பின்
வேலை வாய்ப்புகள் கூடும்!

தனித்தன்மைக்கேற்றதும்
பொறியியல் அல்லாததும்
எதிர்காலம் தருவதுமான
படிப்புகளைத் தேர்ந்தெடுக்க --
career ஆலோசனை
வல்லோரை நாடுங்கள்!
கிடைக்கவில்லையா?

பட்டப் படிப்பு துவங்க
ஓராண்டு முன்பிருந்தே
நூலகங்களுக்கு
அடிக்கடி சென்று
கல்வி வழிகாட்டும்
நூல்களை படியுங்கள்!
நினைப்பதைக் காட்டிலும்
வாய்ப்புகள் காண்பீர்கள்!
company secretary,
operations research,
Econometrics,
புள்ளிவிவரயியல் நிபுணர்,
உணவக நிர்வாகம்-- என
எத்தனை படிப்புகள்!
எத்தனை படிப்புகள்!

நூலகத்தில் படித்தவை சிந்தித்து
நலம் விரும்பிகளுடன் ஆலோசித்து
தகுந்த பட்டப் படிப்பை தேர்வு செய்யுங்கள்!
வெற்றிகரமான எதிர்காலம் கிட்டும்!

எழுதியவர் : ம கைலாஸ் (30-Aug-16, 8:52 pm)
பார்வை : 675

மேலே