கல்வி வியாபாரம்

கவர்மெண்ட் ரெகுலேஷன்களுக்கு உட்பட்டு தனியார் ஒரு இனினிஜீரிங் கல்லூரி கட்ட 100 கோடி வேண்டும்; மருத்துவ கல்லூரி ஆரம்பிக்க மினிமம் 500 கோடி ரூபாய் வேண்டியிருக்குமாம்..! அதை கவர்மெண்டே செய்தால் 10 மற்றும் 50 கோடிக்குள் முடித்து விடலாம்..! ஏனென்றால், நிலம், மருத்துவமனை போன்ற பல விஷயங்கள் கவர்மெண்ட்டுக்கு இன்வெஸ்ட்மெண்ட் இல்லாமலேயே கிடைக்கும்..!

இருந்தும், தனியாரை கல்லூரிகள் அமைக்க அனுமதித்தார்கள்..! ஒரு குறிப்பிட்ட அளவு சீட்கள் management quotaவிற்கு கொடுத்து, மிச்சம் கவர்மெண்ட் கட்டுப்பாட்டிலேயே வழங்கப்படும் என்று முதலில் ரூல்..! அப்புறம் ஒருத்தன் யோசிச்சான்- இதை எப்படி மீறுவது? ஒரு வழி கண்டு புடிச்சான்: நிகர் நிலை பல்கலைக்கழகமாக இருந்தால் (Deemed University) இந்த கட்டுப்பாடு கிடையாது என்று..! என்ன லாஜிக்..? ஒரு எழவும் கிடையாது..! எல்லோரும் சேர்ந்து பணம் பண்ணுவது மட்டுமே லாஜிக்..!

கேப்பிடேஷன் ஃபீஸ் கிடையாது என்று சொல்லிவிட்டு இஞ்சினீரிங் சீட்டுகளுக்கு 10 லட்சம் வரையிலும் மெடிக்கல் சீட்டுக்கு 1 கோடி வரையிலும் 'கேஷாய்' வாங்கப் படுகிறது என்பதை பிறந்த குழந்தைகள் கூட சொல்லும் இங்கே..! 20 வருடங்களாக போலீஸ் என்ன செய்தது? இன்கம்டாக்ஸ் டிபார்ட்மெண்ட் என்ன செய்தது? மெடிக்கல் கவுன்ஸில் MCI என்ன செய்தது? AICTE என்ன செய்தது..? ஒன்றுமே இல்லை...! எல்லோருமே பணத்தில் மிதக்கின்றனர்..! ஆனால், இதெல்லாம் கிரிமினம் குற்றமே இல்லை..!

இப்போது பச்சமுத்து கேப்பிடேஷன் ஃபீஸ் என்று 75 கோடி வாங்கிக் கொண்டு (கேஷாகத்தான்), சீட்டும் கொடுக்காததுதான் கிரிமினல் குற்றம் ஆக சொல்லப்படுகிறது..! அந்தமட்டிலாவது இந்தியாவில் law & order இருக்கிறது என்று நாம் சந்தோஷப் பட்டுக் கொள்ள வேண்டும்..!

இந்த ப்ரேவேட் இஞ்சினீரினிங் மற்றும் ப்ரேவேட் மெடிக்கல் காலேஜ் விவகாரங்கள் ரொம்ப காலமாகவே நாற்றம் அடித்துக் கொண்டிருக்கின்றன..! இதுவரை, ஸோனா, முத்துகுமரன், மகாத்மா காந்தி (பாண்டிச்சேரி), இப்போது SRM... இன்னும் இருக்கும் - ராமச்சந்திரா, செட்டினாடு, கற்பவினாயகா, மாதா, etc.. எல்லாமும், பல தனியார் இனிஜீனீரிங் காலேஜிகளும் நாற்றம் எடுப்பவைதான்..! பெரும் கறுப்புப் பண நாற்றம்..! சில காலேஜிகள் தவிர, பாக்கி எல்லாவற்றிலும் கல்வியின் தரம் மிக மோசம் என்பதும் வெட்ட வெளிச்சம்..!

வெளிமாநில ஜெயின்களும், மார்வாடிகளும் இங்கே தம் சொந்த பணத்தை போட்டு காலேஜ் கட்டி அதை கவர்மெண்ட்டுக்கு இலவசமாய் கொடுத்தார்கள் அப்போது..! நம் தமிழக பச்சைமுத்துகளுக்கோ பல்லாயிரம் கோடி வந்தும் ஆசை அடங்கவில்லை..! சே..! பக்கா திருடர்கள் கையில் கல்வி..! ஒரு நாடு குட்டிச்சுவராக இதை விட ஒரு பெரிய காரணம் வேண்டுமா..?

எண்ணிலடங்கா கறுப்புப் பணம் விளையாடும் இந்தக் கல்வி வியாபாரம் மாணவர்களை மட்டுமல்ல, நாட்டையே சீரழித்துக் கொண்டிருகிறது..!

சென்ட்ரல் கவர்மெண்ட்டே..! ஸ்டேட் கவர்மெண்ட்டே..! AICTEயே..! MCIயே..! போதும்..! இந்தக் கருமத்தை இப்போதாவது நிறுத்துங்கள்..! எல்லா கல்லூரிகளின் (Deemed Universityயாக இருந்தாலும்) 'எல்லா' சீட்டுகளும், ஃபீஸும், கவர்மெண்ட்டால் நிர்ணயிக்கபட்டு transparentடாகவே இருக்கும் என்று ரூல் மாற்றுங்கள்..! கிஞ்சித்தாவது நாட்டையும், மக்களையும் பற்றி நினையுங்கள் அய்யா..!


நன்றி: முகநூலில் - Shankar Rajarathnam

எழுதியவர் : செல்வமணி (பகிர்வு) (31-Aug-16, 10:18 am)
சேர்த்தது : செல்வமணி
Tanglish : kalvi vyapaaram
பார்வை : 295

மேலே