சாபம்

சிரிக்காமல் இருந்துவிடுவேன்
சிரிப்பதுபோல் நடிப்பதுதான் சாபம்!
ஆறுதல் இல்லாமல் இருந்துவிடுவேன்
அழக்கூட முடியாமல் தவிப்பதுதான் சாபம்!
பேசாமல் இருந்துவிடுவேன்
கூசாமல் பொய் சொல்வதுதான் சாபம்!
உன்னை பார்க்காமல் இருந்துவிடுவேன்
உன் பார்வையையும் நான் எதிர்பார்க்கவில்லை
என்று பாசாங்கு செய்வதுதான் சாபம்!
வலிக்கிறது என்று சொல்லாமல் இருந்துவிடுவேன்
வலிக்கவில்லை என்று சொல்வதுதான் சாபம்!
உன் நெருக்கம் இல்லாமல் இருந்துவிடுவேன்
ஆனால் வேறு பெண்ணுடன் நீ நெருக்கமாய்
இருப்பதை பார்ப்பதுதான் சாபம்!
நீ எனதில்லை என்பதை ஏற்றுக்கொள்கிறேன்
ஆனால் அதை நீயே உரைப்பதை விடவும் வேறெது கொடிய சாபம்!!

எழுதியவர் : நிவேதா சுப்பிரமணியம் (31-Aug-16, 1:36 pm)
Tanglish : saabam
பார்வை : 399

மேலே