அழகான காதல் இன்று அழுக்காக யார் காரணம்

ஆதாம் ஏவாள் காலம்
அனா ஆவென்னா காலம்.
உணர்ச்சிகளை அடையாளம்
கண்டு உயிர்கள் பெருகிய காலம்.
பின் தழைத்தது மானிடம்.!
உறவு பிரிவு பாசம் பரிவு
என்று ஏங்கி இணைந்து அணைத்து
இனம் கண்டு கொண்ட காலம்.

உறவுமுறைகள் உடன்பிறப்புகள்
அம்மா தங்கை அண்ணி அத்தை என பிரித்துப்பார்த்து
யாரை காதலிக்க கல்யாணம் செய்ய என
இனங்கண்டு குணங்கொண்டு மனங்கொண்ட காலம்.

காதல் தான் கலாச்சாரத்தின் அஸ்திவாரம்
கலாச்சாரம் தான் காமத்தை வரையறுத்தது.
மனித இனம் தழைக்க மனம் வேண்டும், மனிதம் வேண்டும்.!

காதல் சிக்கல் காலமாற்றத்தில் விஷ விதை தூவ
பொருந்தாத காதல்களில் சில நேரம் முடிவுகள்
தற்கொலைகளில்,
நேற்று வரை கண்டோம், கேட்டோம், வருந்தினோம்.

இன்றோ பட்டப்பகலில் நட்ட நடுரோட்டில்
வெட்டுவதும் குத்துவதும் கண்டு
வேடிக்கை பார்க்க முடியாமல் வெகுண்டெழுகிறோம்.

இதற்கு யார் காரணம்?
வேலி இல்லாமல் வெள்ளாடுகள்
இங்கே விளையாடுகின்றன.
பசங்களை பார்த்துக்கொள்ள முடியாத
பெற்றவர்கள் பாவிகளாகின்றனர்.

பிள்ளை வளர்ப்பு ஒன்றும் கிள்ளை வளர்ப்பல்ல,
கிளர்ந்தெழும் உணர்வுகளுக்கு கேள்விகள் கேட்காமல்
தான் தோன்றி திரியும் வேட்டை நாய்களாய் சிலர்
நீர் விட்டு வேர் விட்டு வளர்த்தால் என்ன செய்ய?

அன்பான பால் விஷமாகினால்
எல்லோருக்கும் இடைஞ்சல் என்று
தெரியாதவர்களா பையனைப்பெற்றோர்?

காதல் ஆரோக்கியமான ஹெர்பல் அன்று
கட்டாயம் செய் இல்லை காவு கொடு
என மெண்டல் ஆனது இன்று.

பெண்களைப்பெற்றோர் சிலரும் பேராசைப்படுவது ஒருபுறமிருக்கட்டும்,
உப்பு தின்றால் தண்ணி குடிக்கட்டும் அவர்கள்.
ஆனால் உப்பு போடும் பெற்றோரே
தப்பு தாளம் திடீரென்று கேட்டு விடாது.
பையன்களை மனிதனாய் வளர்க்க வேண்டும்
மிருகங்களாக அல்ல,

சினிமா ஸ்டைல் பெர்சனாலிட்டி என்பதெல்லாம்
அழகு இல்லை அசிங்கமாக மாறக்கூடியவை
கண்டிப்பை கண்களில் காட்டுங்கள்
கைகளில் அறையுங்கள்.
ஏனெனில் அடி உதவுவது போல்
அண்ணன் தம்பி உதவுவதில்லையே.

அந்த கால கலாச்சாரம் இன்று கொலைச்சாரமாக
மாறி வருவது கண்டு வருந்தாத ஜென்மமா நீங்கள்,

பையனை பெற்ற அதிர்ஷ்டசாலிகளே
உங்களால் இந்த அவமானம் தேவையா?

-

எழுதியவர் : செல்வமணி (31-Aug-16, 9:12 pm)
பார்வை : 106

மேலே