சுகமறியா சுமைதாங்கி

ஏழையே ஆனாலும் எத்தாய்க்கும்
என்றும் மகிழ்வர் மழலைகளால் !
பிழைத்து வாழ்ந்திட உழைத்திடுவர்
தழைத்து வளர்ந்திட பிள்ளைகளை
இமையாய் காத்திடுவர் இவ்வுலகில்
சுமையாய் நினையாமல் சுமந்திடுவர் !

ஒருவேளை சோற்றுக்கே ஓயாமல்
மறுநாளைப் பற்றியும் எண்ணாமல்
உள்ளவரை உண்பதற்கு வழிதேடி
உடனுள்ள குழந்தைக்கு பாலூட்டி
பசியறியா மழலையும் அழாதிருக்க
பசியுடனே உழைப்பாள் தாயானவள் !

பொன்னகையே காணாத பெண்ணரசி
புன்னகையே புரிந்திடும் மங்கையவள்
சுகமறியா சுமைதாங்கி சிரிக்கின்றாள்
மாதர்குல மாணிக்கமாய் திரிகின்றாள் !

பழனி குமார்

எழுதியவர் : பழனி குமார் (2-Sep-16, 7:40 am)
பார்வை : 337

மேலே