என்ன இளைஞரணி தலைவராக்குங்க அண்ணே

நீங்க மாவட்டத்

தலைவரா இருக்கற தேசிய கட்சில

என்ன இளைஞரணித் தலைவரா

நியமிச்சிருக்கங்கண்ணே!
@#@@###
தம்பி முத்து, நா மாவட்டத் தலைவரா இருக்கறதால நம்ம மாவட்டத்தில கட்சிய வளக்க என்ன வேணுமினாலும் செய்யலாங்கற அதிகாரத்த மேலிடம் எனக்கு குடுத்திருக்குது. நீ கட்சில சேரறதுக்கு முன்னாடி முத்துங்ற உம் பேர காவிமுத்து -ன்னு மாத்து. மூணு மாசத்துக்குள்ள ரண்டு லட்சம் உறுப்பினர்கள கட்சிலே சேத்துவிடு. அப்பறம் பாரு நீ தான் நம்ம தேசியக் கட்சியோட மாநில இளைஞரணித் தலைவர்.
@@#####
ரொம்ப நன்றி அண்ணே.
@#####
டேய் டேய் டேய் ... எங் கால்ல எல்லாம் விழுந்து வணங்காதடா. நீ ஒன்னும் கொத்தடிமை இல்லடா காவிமுத்து. நம்ம கட்சிக்கு கூலிக்கு மாரடிக்கறவங்க தேவை இல்லடா.

எழுதியவர் : மலர் (2-Sep-16, 9:20 am)
பார்வை : 232

மேலே