தரணியேகணபதியே

தரணியே..கணபதியே..!!

அகிலத்தின் முதல் பொருளே
அன்னையின் முதல் பெயரே
ஆனையின் முகனே..
விநாயனே..

இலையில் தழையில்
சித்தி பித்தி ஒளியே..

யாகத்தின் ஆரம்பத்தின்
அருள் நீயே
அகத்தியின் ஆணவத்தை
அழித்த அருள் நீயே..

மலைகோட்டையிலே அமர்ந்து மனதை கொள்ளை கொள்ளும் மயூரேசனே..

கைகட்டி நின்றால்
கைகாட்டி வழிதரும்
வாழ்வில் வரம் தரும்
வரதன் நீ தானே..

ஏழுபட்டி
எட்டு்ப்பட்டி எல்லாம் பிள்ளையார்பட்டியாய் வந்தவனே..

பூஜையின்
முதல்வரிசையில் நீஇருந்தால்
பூதங்கள்
பின் வருமா..

சதுர்த்தி வரும்
வாரங்கள் காத்திருந்தால்
சங்கடங்கள் உன்னை காத்திருக்குமா..

மண்ணை எடுத்து
உருவம் கொடுத்து
உன்னை அழைத்தோம்

ஊரை பார்த்தாய்
உலகத்தை பார்த்தாய்
கடைசியில்
ஊரணியில் உருகிவிட்டாய்

ஏன்
கணபதி..!!

எந்த காரியத்திலும்
துணை வருவாயே..
எங்கள் கடிதங்களை
படிப்பாயே..

பூமியே
ஆபரணமாக அணிந்த
தரணியே - உன் கழுத்தில்
காவேரியையும் அணிந்து கொள்வாயே..
வரிகளுடன்,
ஐிவி விஐய்..

எழுதியவர் : (5-Sep-16, 11:23 am)
பார்வை : 118

மேலே