என் இதயத்தில் ஏற்பட்ட காயம் 555

ஏனடி...

என் இதயத்தின் ஓரத்தில்
சிறியதொரு காயம்...

அவ்வப்போது வந்து செல்கிறது
வலிகள் என்னில்...

அன்பினை கொடுத்து காயத்தை
வாங்கியதால் என்னவோ...

என் விழிகளின் ஓரத்தில் கோடிட்டு
காட்டும் கண்ணீரின் சுவடுகள்...

உயிருக்குயிராய்
உன்னை நேசித்தேன்...

என் காதலை
எளிதாக நீ மறந்தாய்...

நீ தந்த சோகத்தின்
வெளிப்பாடுதானோ...

என் இதயத்தில்
ஏற்பட்ட காயம்.....

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (6-Sep-16, 8:42 pm)
பார்வை : 2180

மேலே