ஒவ்வொரு சூரிய குடும்பத்திற்கும் ஒரு பிரம்மர் ,சந்திரன்

மோகினி என்ற அப்சரஸ் பிரம்மனை மணக்க விரும்ப, அவர் வெறுக்க, அவள் இனி பிரம்மாவைத் துதிப்பதை யாவரும் நிறுத்தி விடுமாறு சபித்தாள். பிரம்மன் நாராயணனிடம் முறையிடச் சென்றார். அங்கு நான்கு முகங்கள் கொண்ட பிரமன், பத்துத் தலைகள், நூறு தலைகள், ஆயிரம் தலைகள் கொண்ட பிரம்மன்களைக் கண்டு குழப்பமுற்று அது குறித்து நாராயணனைக் கேட்க அவர், இப்பேரண்டத்தில் உள்ள பல உலகங்களில் பல பிரம்மாக்கள் உள்ளனர் என்றார். அதுகேட்ட பிரம்மாவின் அகம்பாவம் நீங்கியது


சந்திரன்


. ஒருசமயம் இந்திரன் கர்வமடைந்து பிரகிருதி தேவியை உதாசீனப்படுத்த அதனால் சாபம் பெற்று இந்திரயோகம், லோகம் அனைத்தையும் இழந்தான். பின்னர் விசுவகர்மாவைக் கொண்டு அமராவதி நகரை புதுப்பித்தபோது திருப்தி அடையாத அவன் மேலும் மேலும் அப்பணியிலேயே விசுவகர்மாவை ஈடுபடுத்த விசுவகர்மா வேறெந்தப் பணியிலும் ஈடுபட முடியாமல் பிரம்மனிடம் முறையிட்டான். பிரம்மன் அவனை விஷ்ணுவவிடம் அழைத்துச் சென்று விவரிக்க, விஷ்ணு சிறுபாலன் வடிவம் கொண்டு இந்திரன் முன் தோன்றினார். இந்திரனை நோக்கி அந்த பாலன் எத்தனை அழகிய நகரம் இது! வேறெந்த விசுவகர்மாவும் இத்தனை சிறப்பாக அமைக்கமாட்டான். இன்னும் எத்தனை காலம் விசுவகர்மாவை வேலை வாங்கப் போகிறாய்? என்று இளைஞன் கேட்டான். இதனால் கோபம் கொண்டு இந்திரன் இளைஞனிடம், உனக்கு எத்தனை இந்திரன்களைத் தெரியும்? எத்தனை விசுவகர்மாக்களை அறிவாய்? என்று கோபத்துடன் கேட்டான்.அவ்வமயம் சாரை சாரையாக ஓர் எறும்பு வரிசை காணப்பட்டது. பையன் அந்த வரிசையைக் காட்டி சிரித்துக் கொண்டே சொன்னான்.) இவற்றை நானே படைத்தேன். இவை ஒவ்வொன்றும் முற்பிறவியில் ஒரு இந்திரன். ஆனால் இப்போது எறும்புகளாய் பிறந்திருக்கின்றன என்றான்.
மணல் துளிபோல் எண்ணற்ற இந்திரன்கள் உள்ளனர். பேரண்டத்தில் உள்ள ஒவ்வோர் உலகத்திலும் ஒவ்வோர் இந்திரன். ஒரு இந்திரனின் ஆயுள்காலம் எழுபத்தோர் யுகங்கள். பிரம்மனின் ஒரு நாள் காலத்தில் இருபத்தெட்டு இந்திரர்கள் தோன்றி மறைந்தனர் என்றான் , பின்னர் இந்திரன் தன் தவற்றை உணர்ந்தார்

எழுதியவர் : (7-Sep-16, 2:35 pm)
சேர்த்தது : விக்னேஷ்
பார்வை : 1021

மேலே