இச்சையும் பிச்சையும்

ஏன் பிறந்தோம் ஏழையாய் !
எதற்கும் வழி இல்லாத கோழையாய் !!

நாங்கள் உடுத்துவது கந்தல் சேலை !!
கை ஏந்துவது தான் எங்கள் வேலை !!

உறவும் அதிகமில்லை !!
உறங்கவும் இடமும் இல்லை !!

ஆலயம் போக அனுமதி இல்லை !!
அரசு சலுகையும் இல்லை !!

நிழல்கூடை தான் எங்கள் வீடு !!
விடிந்தால் வந்துவிடுவோம் நடு ரோடு !!

பலபேர் செல்வது ஏசி காரு !!
பிச்சை போட்டால்தான் ஒரு வேலை சோறு !!

கல்விக்கு ஊக்கமில்லை !!
கவலைக்கு தீர்வில்லை !!

வலிக்கு மருந்தில்லை !!
வளர்ச்சிக்கு பாதையில்லை..!!

பிறப்புக்கு சிறப்பு இல்லை !!
இறப்புக்கு இடமும் இல்லை..!!

அனாதை இல்லமில்லை !!
ஆதரவுக்கு யாருமில்லை !!

முடிந்தால் போடு பிச்சை ....!!

எழுதியவர் : ஆ .கார்த்திகேயன் (8-Sep-16, 10:38 am)
பார்வை : 90

மேலே