என்னதான் செய்வாள் இவள் - நேரிசை வெண்பாக்கள்

இரு விகற்ப நேரிசை வெண்பாக்கள்

தலைநிறைய மல்லிகைப் பூவைத்த மங்கை
நிலைகுலைந் தாள்கண வன்தற் – கொலையாலே;
சின்னவீடாய் வைத்திட செல்வந்தர் கூப்பிட்டால்
என்னதான் செய்வாள் இவள்? 1

மதிப்பெண் பெரும்பான்மை மாலாபெற் றாலும்
விதிதானோ ஏழ்மையில் வாழ்தல் – கதியதுவோ?
என்றும் ’நமதம்மா’ நற்றுணை யல்லாலோ
என்னதான் செய்வாள் இவள்? 2

மதிப்பெண் பெரும்பான்மை மாலாபெற் றாலும்
விதிதானோ ஏழ்மையில் வாழ்தல் – கதியதுவோ?
என்றும் ’நமதம்மா’ நற்றுணை யல்லால்வே(று)
என்னதான் செய்வாள் இவள்? 3

மதிப்பெண் பெரும்பான்மை மாலாபெற் றாலும்
விதிதானோ ஏழ்மையில் வாழ்தல் – கதிதானோ;
என்றும் ’நமதம்மா’ இன்துணை ஈண்டின்றி
என்னதான் செய்வாள் இவள்? 4

மாண்புமிகு நம்முதல மைச்சர்தான் கைதூக்கி
ஈண்டிங்கே மாலா வினுக்குதவி - பூண்டதனால்
என்றும் ’நமதம்மா’ நற்றுணை யல்லால்வே(று)
என்னதான் செய்வாள் இவள்? 5

கணவனோ நாளெல்லாம் ’டாஸ்மாக்’ குடியன்;
குணவதியோ நல்லில்லாள்; உண்ண - உணவின்றி
இன்னும் குழந்தையுடன் பட்டினியால் வாழவே
என்னதான் செய்வாள் இவள்? 6

இவற்றில் மூன்று பாடல்களை தனித்தனி அஞ்சலட்டையில் அனுப்பினேன். ஆறாவதாக உள்ள பாடல் செப்டம்பர் இதழில் வெளியாகியுள்ளது.

அமுதசுரபி அக்டோபர் மாத வெண்பாப் போட்டிக்கான ஈற்றடி:

'காந்தியே நம்தலைவர் காண்'.

செப்டம்பர் 15 தேதிக்குள் சேரவேண்டும்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (8-Sep-16, 8:03 pm)
பார்வை : 140

மேலே