பிரபஞ்ச நடனம் காஸ்மிக் டான்ஸ்

ஆரம்பமோ முடிவோ அறியப்பட முடியாத இப்பிரபஞ்சம் தன்னகத்தே கணக்கிலடங்கா நட்சத்திரக்கூட்டங்களையும் கிரகங்களையும் ஆகாய வெளிகளையும் கொண்டுள்ளது. நட்சத்திரக் கூட்டங்கள் வெவ்வேறு வடிவங்களில் சுழன்று கொண்டிருக்கின்றன. சூரிய குடும்பத்திலே உள்ள கோள்கள் ஒரு மையப் புள்ளியைச் சுற்றிக் கொண்டிருக்கின்றன.

இப்பாரிய சமுத்திரமாகிய இப்பிரபஞ்சக் கடலிலே நாம் ஒரு சிறுதுளி. இப்பிரபஞ்சத்திலே தோன்றிய யாவும் ஆரம்ப காலம் தொட்டு நாளும் பொழுதும் இடைவிடாது மாற்றமடைந்து கொண்டிருக்கின்றன. தாவரங்களும் விலங்குகளும் எப்படித் தம்மை சூழலிற்கேற்ப மாற்றிக்கொண்டிருக்கின்றனவோ அதே போன்று மனிதனிலும் அமைதியாக மாற்றம் நடை பெற்றுக்கொண்டிருக்கிறது. இதையே ஜீவ நடனம் (Bio Dance) என அழைக்கின்றோம். எமக்குள்ளே நடைபெறும் இவ் ஜீவ நடனம் சத்தியை வெளியிடுவதோடு ஒரு ஒழுங்குபடுத்தப்பட்ட சீரான முறையிலே நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. இதில் ;உறுப்புக்களின் எல்லா மூலங்களும் பங்கு கொள்ளும்.

இரசாயன மூலங்களின் அசைவுகளை கண்டறியும் தொழில் நுட்ப அறிவு மூலம் எமது உடலின் உள்ளேயும் வெளியேயும் வந்து போய்க்கொண்டிருக்கும் இரசாயன மூலகங்களை அறியலாம். எமது உடம்பிலே உள்ள பில்லியன் கணக்கான ஜீவ அணுக்களைக் கொண்ட உறுப்புகள் ஒரு குறிப்பிட்டகால இடை வெளியில் தம்மை மாற்றியமைத்துக் கொண்டிருக்கின்றன. உதாரணமாக உன் வயிற்றுச் சுவர்த்தோல் கிழமையில் ஒருமுறையும்இ கல்லீரல் ஆறு கிழமைகட்கு ஒரு தடவையும் தம்மை புதிதாக்கிக் கொள்கின்றன.

பிரபஞ்சத்தின் தோற்றம்.
இருக்கு (சுபை ஏநனய) வேதக் கருத்துப்படி இப்பிரபஞ்சத்தின் தோற்றத்தின் முன் எல்லாவற்றையும் ஒரு முதல்வன் தாங்கிக்கொண்டிருந்தான். அவன் யாராலும் அறிந்துகொள்ள முடியாதவனாக இருந்தான். அவனே பொற் கருப்பை (Golden Womb ). அதில் இருந்தே எல்லாம் தோன்றின. பொன்நிறமே சக்தியின் நிறம். என வேத நூல் கூறுகின்றது. உலகத் தோற்றத்தின் முன் எல்லாமே சூனியமாகவே இருந்தன. ஆனால் நவீன பௌதீகம் எல்லாச் சக்திகளும் ஒரு புள்ளியிலே அடங்கி இருந்தன எனக் கூறுகின்றது.

பிராமியக் கருத்து.
பிரபஞ்சம் ஒரு முட்டை என்ற கருத்து பழைய நாகரீகங்கள் எல்லாவற்றிலும் காணப்படுகின்றது. இதற்கு மூலமாக இருந்தது இருக்;கு வேதமே. இதன்படி இப்பிரபஞ்சம் எல்லையற்றது. இதன் எல்லைகள் விரிவு ஒடுக்கம் ஆகிய இரு சக்திகளுக்கிடையேலான வலுப்போரே. நட்சத்திரங்களுக்கிடையான ஈர்ப்புவிசையும்( Attractive Force) எதிர் விசையும் (Repulsive Force) இடையேயான போட்டி பிரபஞ்சத்தின் விரிவை தடைசெய்தது. பின் ஒடுக்கு சக்தி வலுவிழந்து வரிவியக்க சத்தி வலுப்பெற்று விடவே விரிவடைந்து செல்லும் நிகழ்வு தொடர்ந்து நடைபெறுகின்றது.

ஆக்கம், அழிவு இவை இரண்டும் எங்கும் என்னேரமும் நடைபெறும் நிகழ்ச்சிகள். இதை வேத பௌதீகமும் கூறுகின்றன. இதில் பொருள் சக்தியாகவும் சத்தி பொருளாகவும் மாறி மாறி மாற்றமடைகின்றன. இiயே பல ஆண’டுகுளுக்கு பினர் கண்டுபிடிக்கப்பட்ட E = m c 2
என்ற சமன்பாடு சொல்கிறது. இத்தோற்றமும் அழிவும் றிக் வேதத்தில் முக்கிய இடம் பெறுகின்றது. பிரபஞ்சத்தின் விரிவாக்கத்தின் போது பொருட்களும் அவற்றை அழிக்கும் எதிர்ப் பொருட்களும் தோன்றுகின்றன. இரண்டின் தாக்கங்களின் போது ஒளிக் கதிர்கள் வெளியாகின்றன. இதையே உருத்திரன் (Rudran) என வேத விஞ்ஞானம் கூறுகின்றது. பிற்காலத்தில் ஏற்பட்ட புராணங்களில். இதையே சிவன் என எழுதப்பட்டுள்ளது. சிவனே அழித்தல் தொழிலைச் செய்பவர். சிவன் தனது செயற்பாடுகளின் போது கருணை வடிவினனாகவும் கோரமானவனாகவும் காட்சி கொடுப்பார். இதுவே கதிர் வீச்சின் குண இயல்புகளும் அவை மென்மையான ஆறுதலையும் தர வல்லன மட்டுமன்றி ஊடுருவித்தாக்கமும் விளைவிப்பன.

பிரபஞ்ச நடனம் புரியும் சிவன்.
படைத்தல், காத்தல், மறைத்தல், அருளல், அழித்தல் ஆகிய ஐந்தொழில்கள் மூலம் சீவராசிகளின் இறப்பு பிறப்பின் சமநிலை பேணப்படுவதை சிவநடனம் தெளிவாகக் காட்டி நிற்கின்றது. தம்மைத்தூய்மைப் படுத்த எண்ணற்ற பிறவிகளை எடுப்பதை சிவநடனம் தத்ரூபமாக விளக்கி நிற்கின்றது. முழுமுதற் கடவுளாகிய சிவன் முழு உலகத்தையுமே தனது சத்தியால் ஆக்கியவன். அவனுடைய நடனம் சத்தியின் இயக்கத்தை காட்டுகின்றது. ஒவ்வொரு பிறவியும் பிறவிச் சக்கரத்திலே சுழன்று கொண்டிருப்பதை சிவ நடனம் காட்டுவதை இந்து மதம் மிக அழகாக உருவகித்து விளக்குகின்றது என ஆனந்தக்குமாரசுவாமி கூறுகின்றார்.
சிவ நடனம் ஐந்தொழில்களை மட்டுமின்றி உலகின் நிலையாமையையும் எடுத்து விளக்குகின்றது.
விஞ்ஞானமும் பிரபஞ்ச நடனமும்
பருவகால மாற்றங்களும் உயிர்களின் பிறப்பும் இறப்பும் மட்டுமன்றி சடப்பொருட்களின் மூலக உறுப்புகளுக்கிடையே நடைபெறும் தாக்கங்களும் உலகிலே எல்லாமே மாற்றமடைவன நிலையற்றன என விஞ்ஞானம் கூறுகின்றது. இவற்றின் இயக்கமே சிவ நடனம். இச்செயற்பாட்டின் போது பொருட்கள் தேவையற்றனவற்றை வெளியேற்றி தேவையானவற்றை சூழலிலிருந்து பெற்றுக்கொள்க்pன்றன. இதனாலேயே பொருட்களின் இயல்புத்தன்மையும் சம நிலையும் பேணப்படுகின்றது. இச்செயற்பாட்டின்போது சத்தி வெவ்வேறு அளவில் பயன்படுத்தப்படுவதோடு குறிப்பிட்ட பொருளின் தன்மையும் பேணப்படுகின்றது.

நவீன பௌதீகவியலாளரும் பொருட்களின் நுண்ணிய துணிக்கைகளின் இயக்க்கமே சிவ நடனம் எனக் கூறுகிறார்கள். தொழில்நுட்பம் மூலம் வெற்றுச்சாடியில் மிக நுண்ணிய கூறுகளின் இயக்கத்தைப் பரீட்சித்துள்ளார்கள். .இதன் முடிபுகளும் சிவநடனத்தின் இந்துமத விளக்கமும் உடன்பாடாக இருப்பதை வியந்து கூறியுள்ளார்ள்.

இந்து மதம் இயற்கை அறிவு.
இந்து மதம் பிரபஞ்சத்தை இரண்டு வகையாக வகைப்படுத்தியுள்ளனர். ஓன்று ஐம்புலன்கள் வழியாக அறிவது மற்றையது உணர்ந்து அறிவது. இக்கருத்து ஒரு குழப்பமாக இருந்தாலும் இயற்கை மனிதனுக்கு மிக உதவியாக உள்ளது. பிறந்த உடனேகூட அதுவே கை கொடுக்கின்றது. புவனங்களுக்கு அப்பாற்பட்ட மெய்ப்பொருளை உணரலாம். செய்யும் தியானத்திற்கு உடல் ஆரோக்கியம் அவசியம் ஏனெனில் தியானப்பயிற்சி சில காலம் எடுக்கும். எனவேதான் இந்துமதம் வழிபாட்டுக் கிரமக் கிரியைகளில் நீர்இ நிலம்இ காற்றுஇ நெருப்புஇ ஆகாயம் ஆகிய ஐம்பூதங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றது. இவற்றிற்கு தெய்வ மரியாதை கொடுத்து சிவலிங்கமாக வழிபாடு செய்கின்றனர்.

பெரு வெடிப்புக் கோட்பாடு (Big Bang Theory)
அயன்ஸ்ரீனுடைய சார்புக்கொள்கையின் படியும் கிறிஸ்ரியன் னொப்லரின் கோட்பாட்டின்படியும் உலகம் விரிவடைந்து செல்வது உறுதியர்ககப்பட்டுள்ளது. பெருவெடிப்புக் கோட்பாட்டின்படி ஒரு சிறு புள்;ளியிலிருந்தே உலகம் ஆரம்பமானது. இச்சிறு புள்ளியில் பிரமாண்டமான சத்தி அடங்கி இருந்ததாகவும் அதுவே வெடித்து உலகம் விரிவடைய ஆரம்பமானது என்றும் கூறுகிறது. இப்புள்ளியே பிரபஞ்சமுட்டை என அழைக்கப்பட்டது. இவ்விரிவாக்கத்தின்போது நட்சத்திரங்களை ஒன்று சேர்க்கும் விசைக்கும் (Attractive force) அவற்றைத் தூர வைத்துக்கொள்ளும் (Repulsive force) விசைக்கும் இடையேயான போரால் இப்பபிரபஞ்சத்தின் விரிவாக்கம் சிறிது தடைபட்டு பின் நட்சத்திரங்களை தூர விலக்கி வைத்துக் கொள்ளும் விசை வென்றது. இதன்பின் பிரபஞ்ச விரிவாக்கம் தொடர்ந்து நடைபெறுகின்றது. இப்பெரு வெடிப்பின்போது ஏற்பட்ட பெருவெப்பம் மிக வேகமாக தணிந்தது. இக்காலத்தில் ஏற்பட்ட சத்தி பொருட்களாக மாற்றமடைந்தன. ஐதரசன்(Hydrogen) ஹீலியம் (Helium)) என பிரபஞ்சத்தை ஆக்கும் இரசாயன மூலப்பொருள்களாகின. மிகத்தொகையான பொருட்கள் ஒன்றுகூடி நட்சத்திர மண்டலங்களாகின. 250 மில்லியன் வருடங்களின்பின் இவை பிரபஞ்சத்தை ஆட்கொண்டன. காமோவின் (Gammov_ இக்கருத்து சரியானது என இப்போ ஏற்றுக்கொள்ளப்படுகின்றது. தங்க முட்டையில் இருந்து பிரம்மா தோன்றினார். அவர் ஓம் என்ற மந்திரத்தை ஒலித்து பெருமளவிலான சத்தியை உண்டாக்கி பிரபஞ்சத்தை ஆக்கினார் என்ற இந்துமதக்கருத்தும் இங்கே குறிப்பிடப்பட வேண்டும்.

“ஓம்” என்ற நாதமே ஆரம்ப ஒலி.
பிரபஞ்சம் அவ்வொலியலிருந்தே தோன்றியது. இவ்வொலி எக்காலத்திலும் எம்மொழியிலும் முதல் ஒலிப்பதை நாம் காணலாம். ஆமென் எனக் கிறிஸ்தவர்கள் கூறும்போது இது முதல் ஒலிப்பதை அறிகின்றோம். இஸ்லாமியரும் இம்முதல் ஒலிக்கு முக்கியத்துவம் கொடுக்pன்றார்கள். இப்பதத்தை நாம் ஒலிக்கும்பொழுது முடிவில் அதன் சத்தம் குறைந்துnhண்டு போவதைக் காண்கின்றோம். இறைவனை நாம் அழைக்கும ;பொழுதும் இறுதியி;;ல் அமைதியாக ஒலிக்கவேண்டும்.

அப்பரம்பொருளை மனதிலே இருத்தி ஓம் எனும் மந்திரத்தை ஓர் அமைதிஇ நிசப்தம்; மனதிலே ஏற்படும் வரை தொடர்ந்து ஓதிக்கொண்டே இருப்போமேயானால் அவன் எமக்குக் காட்சி தருவான் என சத்திய சாயி பாபா கூறுகின்றார்.

பிரபஞ்ச முட்டை (Cosmic Egg).

படைத்தல் தொழிலைப்புரியும் பிரம்மா இப்பிரபஞ்ச முட்டையிலிருந்து தோன்றி உலகத்தையே உருவாக்கினார் என்ற இந்துமதக் கருத்தும ;பெரிய ஒலி கோட்பாடும் கருத்திலே ஒன்றாக உள்ளன. தாமரை இறைவனுடைய அருளுக்கும் சத்திக்கும் அடையாளமானது. இக்கமலத்திலே சயனித்துக்கொண்டிருக்கும் பிரமா கண் விழிக்கும்பொழுது உலகம் இயக்கமடைகின்றது. கண்களை மூடும்பொழுது உலகம் மறைந்து விடுகிறது என யேசேப் காம்பெல் கூறுகின்றார்.
விஞ்ஞானிகள் உலகம் விரிவடைந்து செல்வதை ஏற்றுக் கொண்டுள்ளார்கள். ஆனால் இவ்விரிவாக்கம் தொடருமா அல்லது விரிவாக்கம் நின்று சுருக்கம்
பெற்று பழையபடி முட்டைக்கருவாகிவிடுமா என்ற வினாவுக்கு அவர்கள் பதில் கூறமுடியாது நிற்கின்றார்கள. இந்துமதக் கருத்துப்படி இப்பிரபஞ்சம் தோற்றுவதும் மறைவதுமான சுழற்சி வட்டம் பல முறை ஏற்பட்டுவிட்டது. இதுவே பிரமாவின் இரவும் பலும். பிரமா தோற்றுவிக்கிறார்;. விஷ்ணு காக்கிறூர் சிவன் அழிக்கின்றான்.

பிரபஞ்ச வட்டம்.
பெருவெடிப்புக் கோட்பாட்டு மாதிரிப் பிரபஞ்சத்தில் முடிவு தெரியப்படவில்லை அதன் ஒடுக்கம் இயக்கச்சத்தியிலும் நிலைச்சத்தியிலுமே தங்கியுளது. வேதக் கருத்துப்படி பிரபஞசம் தொடர்ச்சியாக விரிவடைந்து செல்லமுடியாது. ஓரு திசையில் அது மீண்டும் சுருக்கமடைந்து பழைய நிலையை அடையும். இக்காலம் கல்பா எனப்படுகின்றது. இரு கல்பாக்;கள் ஒரு பிரம நாளாகும். இரு கருத்துகளும் ஒரு தொடக்கம் இருந்ததை ஒத்துக்கொள்கின்றன.ஆனால்; இந்து மதக் கோட்பாடு பிரபஞ்சம் எதுவித சத்தியும் இல்லாத ஒரு குளிர் நிலையிலேயே ஆரம்பமானது எனக் கூறுகிறது. ; ;
யுகங்கள்
மிகச்சிறிய சுழற்சி வட்டம் ஒரு மகா யுகம் ஆகும். ஓருமகா யுகம் நான்காக வகுக்கப்பட்டுளது. இவை 4:3:2:1 என்ற விகிதத்தில் உள்ளன.
கிரித யுகம்
இந்த முதல் யுகம் 1,728, 000 மனித ஆண்டுகளை உடையது. இது பொற்காலம் அல்லது சத்திய யுகம் எனக் கருதப்படும். இதன் குண இயல்புகள் சத்தியமே ஆட்சி புரியும். இறப்பு விருப்பத்தின்பேரில் நிகழும்.
இது இரண்டாவது நிலையாகும். 1,296,000 மானுட வருடங்கள் கொண்டது. இது வெள்ளியுகம் முக்காற்பங்கு புண்ணியகாலமும் காற்பங்கு பாவகாலமும் உடையது.
மூன்றாம் பருவமாகிய இக்காலம் 864,000வருடங.கள். இது வெண்கல யுகம். புhதிக்காலம் புண்ணியமும் மீதிக்காலம் பாவமும் ஆட்சி புரியும். வுhழ்க்கைக்காலம் 1000 ஆண்டுகள்.

கலியுகம்
நான்காவதும் இறுதியுமானது. 432,000 ஆண்டுகளுடையது. இது இரும்புக்காலம். இதுவே நம் இக்காலம். இங்கே காற்பங்கு சிறப்பானதாகவும் முக்காப் பங்கு பாவங்கள் நிறைந்ததாகவும் இருக்கும். இதன் இறுதிக் காலம் நிறைந்த குழப்பங்களும் அழிவுகளும் உள்ளதாக இருக்கும். இதன் முடிவில் உலகம் மறைந்து ஒரு விதையினுள்ளே அடங்கிவிடும்.
பிரம்மா நாட்கள் (கல்ப்பா)
ஓரு பிரம்மா நாள் ஒரு கல்ப்பா ஆகும். இரு கல்ப்பாக்கள் ஒரு பிரம்ம நாளும் ஒரு பிரம்ம இரவுமாகும். ஓரு கல்ப்பா 1000 மகா யுகங்களை உடையது. எனவே ஒரு கல்ப்பா 4.32 பில்லியன் மானிட வருடங்ளாகும்.
பிரம்மாவின் வாழ்க்கை.
பிரம்மாவின் வாழ்க்கைக் காலம் 100 பிரம்ம ஆண்டுகள்அல்லது 72,000 கல்ப்பாக்கள் அல்லது 311.4 றில்லியன்(Trillium) மானிட வருடங்களாகும்.
மனுவந்தரம்.
இது வேறு ஒரு கால அளவு. ஓவ்வொரு கல்ப்பாவும் 14 மனுக்களால் ஆளப்படும். ஓருவருடைய ஆட்சிக்காலம் மானவந்தரம்; ஏறக்குறைய 71 மகா யுகங்கள். ஓவ்வொரு மானவந்தர காலமும் ஒரு பிரளயத்திலே முடிவுபெறும். இப்பிரளயம் உயிர்வாழ்வன எல்லாவற்றையும் விழுங்கி விடும். ஓரு சிலர் மீண்டும் உயிர்கள் தோன்றுவதற்காக பாதுகாக்கப் படுவர்.

சூரியன் சந்திர - மனித உடல்
இந்துக்கள் பிரபஞ்சதினைக் கண்டு அறிந்திருந்தார்கள் என நூல்கள் கூறுகின்றன. முற்காலத்து ஆலயங்களிலும் தற்காலத்தில் நிர்மாணிக்கப்படும் ஆலயங்களிலும் சூரிய மண்டல மாதிரி அமைப்பில் சூரியன் மையத்திலேயும் பிற கோள்கள் அதைச்சுற்றி வருவதும் காணப்படுகின்றது. சந்திரனை புத்திக்குரிய கடவுளாக இந்து மதம் கருதுகின்றதுஇ இது சிறிது குழப்பமாக இருந்தாலும் முழுநிலாக் காலத்தில் கடல் பெருகுவதையும் தேய்பிறை காலங்களில் கடல் வற்றுவதையும் காண்கின்றோம். உலகத்தின் பரப்பளவில் மூன்றில் இரண்டு பங்குக்கு மேல் நீராகும். எனவே சந்திரனின் தாக்கம் உடலிலேயும் இருக்கும். முன் நோய் வைதிதியர்கள் முழு நிலாக்காலங்களில் வழக்கத்துக்கு மாறாக மன நோயாளர் செயற்படுவதை அறிந்துள்ளார்கள். ஆதிகால இந்துக்களும் சந்திரனின் தாக்கங்கள் உடலில் ஏற்படுவதை கண்டறிந்துள்ளார்கள். இதனாலேயே உடலில் நீரின் அளவைக் குறைக்க முழுநிலாக் காலங்களில் விரதம் இருக்கிறார்கள்.

நடனக்கலை இந்தியர்களுடைய வாழ்வில் முக்கியமானது. இறைவனுடைய உயிர்நடனம் ஆனந்தத் தாண்டவம் எனப் பரதம் கூறும் சிவனுடைய நடன பாவங்கள், முத்திரைகள், ஆன்மா தன்னைப் பாவங்களினின்றும் நீக்க எண்ணற்ற பிறவிகள் எடுப்பதையும் சிவன் அருள் மழை பொழிந்து ஈடேற வைப்பதையும் காட்டி நிற்கின்றது. இந்த அருமையான நடனத்தைக் காண்பதற்கே கண்களைப் பெற்றோம்.

சிவன் இடக்கையிலே ஏந்திய தீப்பந்தம் அழிவைக்காட்டுகின்றது. அழிவே ஆக்கத்திற்கும் காரணம். அக்க்pனி ஆன்மாவையும் தூய்மைப் படுத்துகி;ன்றது. மேலிரு கரங்களும் தோற்றத்தையும் அழிவையும் சமநிலைப் படுத்துவதைக் காட்டுகின்றது. தீவட்டம் ஆன்மா எடுக்கும் எண்ணற்ற பிறப்பையும் இறப்பையும் கீழ் வலக்கை அஞ்சுவதற்கு எதுவுமில்லை என அபய கரம் நீட்டுவதையும் கீழ் இடக்கை இவற்றிலே இருந்து தப்புவதற்கு வழி உன்டு வாருங்கள் நான் இருக்க பயமேது என்பதையும் தூக்கிய இடது பாதம் பிறவித்துன்பத்திலிருந்து விடுபட்டு மோட்ச கதியடைவதையும் முயலகன் எனும் ஆணவ மலத்தை அழித்து இறைவனின் மறைத்தற் தொழிலை காட்டி நிற்கிறது வலப்பாதம். மேலும் இருபாதங்களும் ஆன்மா மெய்ப் பொருளை அறியாது அலைவதையும் பின் அறிந்துகொள்டவதையும் காட்டி நிற்கின்றன. அவருடைய விரித்த சடை அவர் ஒரு துறவி என்பதையும் கங்கை ஆறு இயற்கையை கட்டுப்பத்தும் வல்லமை நிறைந்தவர் என்பதையும் அவரின் கருணையில் வடிவமான முகம் காலத்தாலோ அன்றி தனது சத்தியைச் செலவு செய்து நித்தம் ஆடும் நடனத்திலாலோ சலனமடையாது அமைதியையும் சந்தத்தையும் காட்டி நிற்கின்றது. நாகம் ஓருவர் தன் அகங்காரம் மமதைகளினின்றும் விடுபட வேண்டும் என்பதையும் பிறைச் சந்திரன் இறையை உணர்ந்து அறிந்துகொள்ள ஞான ஒளி கிடைக்கப் பெறுவதையும் காதில் காணப்படும் குண்டலங்கள் பெண்ணாகவும் ஆணாகவுமிருந்து இருபாலாரையும் சமமாகப் பரிபாலிப்பதையும் அவர் தாங்கியு;ள்ள உடுக்கு ஒலியை உருவகிக்கின்றது. ஒலியிலிருந்தே உலகம் தோன்றியது என்பதையும் காட்டிநிற்கின்றது.

இந்த அற்புதமான கவின் கலை அர்த்தம் நிறைந்தது இயற்கையை இறைவனை தத்ரூபமாக விளக்கி நிற்கின்றது. முயலகன் எனும் ஆணவ அரக்கன்மேல் சிவன்ஆடும் நடனம், நான், எனது என்ற மமதைகளில் இருந்து விடுபட்டாலன்றி இறைவனைக்காணவோ அடையவோ முடியாது என்பதைத் தெளிவாக விளக்குகின்றது. எல்லாம் சிவன் செயல் நம்மால் ஆவது ஒன்றுமே இல்லை என்பதுக்கே இறைவன் காட்சி கொடுப்பான் அபயம் அளிப்பான்.


*******

எழுதியவர் : ( பொன் குலேந்திரன் –கனடா) (8-Sep-16, 8:12 pm)
பார்வை : 497

மேலே