தேவதை உலகம்

தேவதை உலகம்

மண்ணில் தோன்றிய தாரகையவள்
மனதை மயக்கிடும் மல்லிகையவள்
மழலை மொழியாலே நம் துயரங்களை
ஒரு நொடியில் தீர்த்து வைக்கும்
தேவதையின் அம்சம் அவள்....

இறக்கை முளைக்காத பால்நிலவு அவள்
சிரிப்பெனும் மந்திரத்தாலே நமை
வசியம் செய்திடும் மாயக்காரியவள்
விழி மொழியாலே கவி மொழி பேசிடும்
வித்தைக்காரியவள்....

இல்லத்தில் இவள் இருந்தாலே
இன்னல்களும் மறைந்திடுமே
இவளின் இன்னிசைக்குரலாலே
மனதின் ஆறாத ரணங்களும் விலகிடுமே...

வானத்து தேவைதைகளும் இவளின்
மறு உருவமோ
தரணியில் தவழ்ந்திடும் இவளும்
தேவதைகளின் வம்சமோ....

பெண் மழலையவள் பிறந்திடும்
இல்லமனைத்திலும் இன்பமயம் சூழ்ந்திடுமே
இவள் வசித்திடும் இடமனைத்தும்
தேவதைகள் வாசம் செய்திடும்
தேவதை உலகமாய் மாறிடுமே....

எழுதியவர் : அன்புடன் சகி (9-Sep-16, 4:16 pm)
Tanglish : thevathai ulakam
பார்வை : 1432

மேலே