யானை

சிங்கம்மேல் அமரும் யானை
சித்திகள் வழங்கும் யானை
அங்குசம் ஏந்தும் யானை
அரசானை அருளும் யானை
சங்கரி பிடித்த யானை
சங்கரன் தொழுத யானை
பங்கய(ம்) மேவும் யானை
பக்தரைக் காக்கும் யானை
தந்தமே பிடித்த யானை
தமிழ்தரும் தெய்வ யானை
கந்தனே யழைத்த யானை
காதலை இணைத்த யானை
அந்தரர் துதித்த யானை
அம்பலத் தாடும் யானை
சந்திரர் வணங்கும் யானை
சங்கடம் தீர்த்த யானை
அம்மையே துதிக்கும் யானை
அகரமே விரும்பும் யானை
உம்முளே தோன்றும் யானை
உகரமாஞ் சுழிகொள் யானை
இம்மையும் காக்கும் யானை
யாவரும் போற்றும் யானை
கம்மெனும் மவுனத் தானை
கவனகம் வழங்கும் யானை
மகாகவி தொழுத யானை
நான்மணி மாலை யானை
அகவலில் கனியும் யானை
ஔவையார் பணியும் யானை
அகத்தியன் வேண்டும் யானை
அருள்மலைக் கோட்டை யானை
அ(க)வலில் மகிழும் யானை
அருள்தர முந்தும் யானை

எழுதியவர் : சு.ஐயப்பன் (11-Sep-16, 12:38 pm)
Tanglish : yaanai
பார்வை : 425

மேலே