மோத்தி

பாட்டி அண்ணிக்கு ஆண் கொழந்தை பொறந்திருக்குதாம். முத்து அண்ணன் கொஞ்ச நேரத்துக்கு முன்னாடிதாம் தொலைபேசில சொன்னாரு.
@@@#@
ரொம்ப சந்தோசண்டி பூவழகி.சரி முத்து, கனியமுது, கொழந்தை எல்லாம் நல்லா இருக்கறாங்களாமா?
@@@##
நல்லா இருக்கறாங்கலாம் பாட்டிம்மா. கொழந்தைக்கு மோத்தி-ன்னு பேரு வச்சிட்டாங்களாம்.
@@####
என்னடி பூவழகி, கொழந்தைக்கு மோத்தி, போத்தி, சாத்தி-ன்னெல்லாம் பேரு வைக்கறதா?
@@@@@$$
பாட்டிம்மா தமிழ வளர்ச்சிக்கு உதவவேண்டிய தமிழாசிரியர்கள், தமிழ்ப் பேராசிரியர்கள், தமிழர்களில் 98% பேர் அவுங்க பிள்ளைங்களுக்கெல்லாம் இந்திப் பேருங்களத்தானே சூட்டறாங்க. பீகார்ல சிறப்பு மருத்துவ நிபுணரா இருக்கற எங்க அண்ணன் அவரோட பையனுக்கு இந்திப் பேர வைக்கமா தமிழப் பேரா சூட்டுவாரு?
@@@@@@#
அதெல்லாம் சரிடி பூவழகி. அந்த மோத்தி-ங்கற பேருக்கு என்னடி அர்த்தம்?
@@###
அண்ணஞ் சொன்னாரு மோத்தின்னா முத்து-ன்னு அர்த்தமாம்.
@@@###
என்னடி அவம் பேரு முத்து, அவங் கொழந்தை பேரும் முத்து. நல்லவா இருக்கும்? பேசாம அவங் கொழந்தைக்கு சின்னமுத்து-ன்னு பேர மாத்தச் சொல்லுடி பூவழகி.
@@@##
சரிங்க பாட்டிம்மா.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@
சிரிக்க அல்ல; சிநதிக்க . மொழிப் பற்றை வளர்க்க.

எழுதியவர் : மலர் (11-Sep-16, 2:13 pm)
பார்வை : 106

மேலே