கருநீலம்-ன்னு பேரா

பாட்டிம்மா நேத்து என்னோட அண்ணன் உங்களப் பாக்க வந்தானா?

@########@##
ஏண்டாச் செல்லம்?என்னடா ஆச்சு? உன் அண்ணம் பேரு என்ன?
@#@####
அணில்
##########
அ ணில உன்னோட அண்ணன்னு சொல்லற. உம் பேரு எலியா, பெருச்சாளியா, பாம்பா, பல்லியா, ஓணானா?
@@@@######
போங்க பாட்டி என் அண்ணம் பேரையும் எம் பேரையும் நெனச்சா எனக்கே வெக்கமா இருக்குதுங்க பாட்டிம்மா. எங்க அம்மாவும் அப்பாவும் கொஞ்சங்கூட அறிவில்லாம ஊர்ல இருக்கறவங்க எல்லாம் அவுங்க பிள்ளைங்களுக்கு இந்திப் பேருங்கள வைக்கறாங்களேன்னு இவுங்களும் எனக்கும் என்னோட அண்ணனுக்கும் அணில், சுனில்-ன்னு இந்திப் பேருங்கள வச்சுட்டாங்க பாட்டிம்மா.
@@##########
சரிடாச் செல்லம், உம் பேருக்கு என்னடா அர்த்தம்?
@#########
பாட்டிம்மா 'சுனில்'ன்னா 'கருநீலம்'ன்னு அர்த்தம்.
@#########
கருநீலம்- ன்னு பேரா? ஏண்டா இந்திக்காரங்க எப்பிடி வேண்டுமானாலும் பேரு வச்சுக்குவாங்க. அது அவுங்க விருப்பம். நம்ம மொழி எப்ப உருவாச்சின்னே தெரில. தமிழ் நாடே சினிமா ரசனையினால சீரழிஞ்சுட்டு வருதுடா கருநீலம். நாம என்ன செய்யறது படிச்ச தமிழங்களே சரியில்ல.

@########%%%%%%%%%%%##%%%%#### சிரிக்க அல்ல. சிந்திக்க. மொழிப் பற்றை வளர்க்க.

எழுதியவர் : மலர் (12-Sep-16, 10:11 am)
பார்வை : 208

சிறந்த நகைச்சுவைகள்

மேலே