லார்வி கார்வி

ஒரு அமைதியான வாழ்க்கை,சாந்தோசம் மிகும் வாழ்க்கை,பத்து மரங்களை கொண்ட அழகான,ஆபத்தான அந்த இடத்தில் எவரும் வசிக்க மாட்டார்கள் ஆனால் அதற்கு அருகமையிலே அடர்த்த காடு போலத் தோற்றம் அளிக்கும் ஆலமரம் அதில் தான் அனைத்து பறவைகளும் தங்கின பார்ப்பதற்க்கு தாய்வீடு போல் இருந்தது.அதில் உடல் குறைகொண்டும் உள்ளத்தில் நிறைகொண்டும் கால்கள் இல்லை என்றாலும் தன் கணவரின் உதவியல் வாழ்ந்து கொண்டு இருந்தது ஓர் பறவை அவளின் பெயர் தமிழ்கவி. அதற்க்கு இரண்டு குட்டி பறவைகள் தவி,கவி என இருந்தது அதில் குரும்புத் தனம் மிக்க பறவை கவி அம்மா தமிழ்கவி சொல்வதை கேட்கவே கேட்காது. ஆனால் அந்த பத்து மரத்தை பற்றி சென்னால் மட்டும் கேட்கும்….கவிக்கு அருமையான நண்பன் பூனை,இரண்டும் நல்ல நண்பர்கள் எங்கு சென்றாலும் ஒன்றாகவே செல்வார்கள்.
கவியின் அம்மா அந்த மரத்தின் பக்கம் போகாதே என்று செல்வார்கள் ஆனால் சில தினங்களுக்கு பிறகு சொன்னதை கேட்காமல் இரண்டும் சென்றன.முன்புறம் பார்த்தால் அழகாய் இருந்தது உள்ளே செல்ல செல்ல மரங்கள் காற்றில் அசைந்தன ஆந்தையின் அலறல் அவர்களை பயப்படுத்துவதாக இருந்தது அந்த சத்ததை கேட்டு பூனை அந்த பறவை கவியின் பின்புறம் ஒழிந்து கொண்டது,அதாவது எறும்பின் பின் யானை ஒழிந்தது போல் இருந்தது.பயந்துக்கொண்டே உள்ளே சென்றது திடீரொன இரு உருவம் கண்ணாடியில் தெரிந்தது அதை கண்டு பயந்தது திரும்பவம் உள்ளே சென்றது ஐந்தவது மரத்தில் பல ஆண்டுக்கு முன் வாழ்ந்த இரண்டு பறவைகளின் வாழ்க்கை எழுதபட்டு இருந்தது அதை நம்ம கவி குட்டி பறவை படிக்க தொடங்கின.பறவையின் பெயர் லார்வி(பெண்) கார்வி(ஆண்) அழகான அன்பான காதல் ஜோடி அயல்நாட்டைச் சேர்ந்தவர்கள் அங்கு அவர்களை வாழவிடவில்லை அதனால் இந்தியாவை நோக்கி வந்தனர் அழகும் அன்பும் பார்த்து வியந்தன
பத்து மரங்களை பார்த்து ஆச்சரியப்பட்டன இந்தியாவா? இது என்று லார்வி பறவை நாம் இங்கேவே தங்குவோம் என்று கார்வி பறவையிடம் சொன்னது தங்களுடைய வாழ்க்கைய தொடங்கின சில நாட்கள் பிறகு அதற்கு அழகான குட்டி பறவை பிறந்தது இரண்டிற்க்கும் அளவில்ல சாந்தேஷம் சில நாட்கள் பிறகு பெயர் வைத்தனர் இந்து என மெதுவாக நடக்க தொடங்கின திடீரென குட்டி பறவை இரத்த வெள்ளத்தில் மிதந்தன.........

எழுதியவர் : சண்முகவேல் (15-Sep-16, 9:03 pm)
சேர்த்தது : ப சண்முகவேல்
பார்வை : 404

மேலே