அன்வர் பின் அகமது

துபாய் ஐக்கிய அரபு எமிரேட்சில் உள்ள ஏழு எமிரேட்சுகளில் ஒன்று. துபாய் மிகவும் பிரபல்யமான நாடு. தமிழ் சினிமாவிலும் அப்பெயர் அடிக்கடி வரும். சுமார் 2.1 மில்லியன் சனத்தொகையைக் கொண்டது. அதில் 53 விகிதம் இந்தியர்களும் 14 விகிதம் பாக்கிஸ்தானியர்களுமாவார்.; துபாய் எமிரேட்ஸ் வாசிகள் 17 விகிதமே. துபாய் வணிகத்துக்குப் பெயர்பெற்றது. துபாய் மிகவும் குறுகிய காலத்தில் மிகுந்த வளர்ச்சி பெற்றுள்ள நகரமாக திகழ்கிறது. ஒரு காலத்தில் முத்துக்குளிப்பை தொழிலாகக் கொண்டவர்கள் அவ்வூர் மக்கள். பனியாஸ் எனும் அரபு இனக் குழுவினர், அல்-மக்தூம் என்ற குடும்பத்தின் தலைமையில் துபாயில் குடியேறினர்.

பாலைவனத்துப் பருவநிலையினால், துபாயில் கோடைக்கால நாட்களில் வெப்பம் அதிகம்.. வெப்ப நிலை 45 பாகை மட்டும் எட்டும். மழை பெய்வது அருமை. இந்த சூழ்நிலையிலும் பல தேச மக்கள் துபாயில் வேலை செய்கிறர்கள். எல்லாமே பணத்துக்காக. அவர்களில் நானும் நானும் ஒருவன். தொலை தொடர்பு சேவைவழங்கும் ஸ்தாபனம் ஒன்றில் வர்த்தக நடவடிக்கைகளுக்கு பொறுப்பான மனேஜராக கடமையாற்றி போது எனது உதவியாளராக அன்வர் பின் அகமத் என்ற துபாய் நாடடில் பிறந்து, வளர்ந்து, அமெரிக்கா சென்று படித்துப் பட்டம் பெற்ற அரேபியர் ஒருவர் வேலை செய்தார். அவரின் தந்தை, துபாய் நாட்டினை உருவாக்கிய அகமத் அல் மக்தூம் குடும்பத்தின் தூரத்து உறவினர். அன்வர் நல்ல பண்பாளர். ஆங்கிலம் சரளமாகப் பேசுவார். தான் ஒரு அரேபியர் என்ற பெருமை அவருக்கு எள்ளவுக்கும் கிடையாது. அவரை நான் அன்வர் என்று அழைப்பேன்.

அன்று ஜுலை மாதத்தில் வெப்பம் அதிகமான நாள். வேப்பநிலை 41 பாகையை காட்டியது. அலுவலகத்;தில்; எயார் கொண்டிசனர் முழு மூச்சாக வேலை செய்து கொண்டிருந்தது. அன்று மாலை மூன்று மணிக்கு மேலிடத்துக்கு அறிக்கை ஒன்றை நான் சமர்பிக்க வேண்டும். அதைத் தயார் செய்து கொண்டிருந்தேன்.
“ அஸ்ஸலாமு அலைக்கு ராஜ்” என்ற குரல் கேட்டது. தலையை நிமிhந்து பார்த்தபோது அன்வர் என்ற அரேபிய இளைஞன் புன்னகையோடு என் முன்னே நின்றார். டிஷ் டாஷ் என்று அழைக்கப்படும் அரேபியர்களுக்கு உரித்தான, நீண்ட கைகளையுடைய கணுக்கால் வரையுள்ள வெள்ளை நிற “தோப்” என்ற ஆடை அணிந்திருந்தார். பாலைவன மணற்காற்றிலிருந்து பாதுகாத்துக்கொள்ள தலையில் குத்ரா என்ற துணி. குத்ரா துணி நகராமல் இருக்க “அகல்” என்ற இரட்டடிப்பாக சுற்றப்பட்ட தடித்த கறுப்புநிற வளையக் கயிறு.
பதிலுக்கு “அலைக்கும் சலாம்” என்றேன். அஸ்ஸலாமு அலைக்கும் என்பதன் அர்த்தம் “ உங்கள் மீது சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக” என்பதாகும். தமிழர்கள் சந்திக்கும் போது கூறும் வணக்கத்தைப் போன்றது. துபாயில் பல வருடங்கள் வேலை செய்ததினால் அரேபிய மொழியையும், கலாச்சாரத்தையும் நான் ஒரளவுக்குத் தெரிந்து வைத்திருந்தேன்.
அன்வர் உடனே ஆங்கிலத்துக்கு தன் பேச்சை மாற்றினார்.
”எனது பெயர் அன்வர் பின் அகமத். நான் புதிதாக ஒப்பிரேசன் கொன்டிரோலராக வேலைக்குச் சேர்ந்தவன். உங்களிடம் ரிப்போர்ட் செய்ய வந்திருக்கிறன் என்று ஆங்கிலத்தில் தன் பேச்சை மாற்றிபடி ஒரு கடிதத்தை நீட்டினார். அரேபியர்களுக்கு உரிய வாசனையின் மணம் அவரிமிருந்து வீசியது.
“எடிசலாத்” ஸ்தாபனத்துக்கு உமது வருகை நல்வருகையாகட்டும். உமது வருகையைப் பற்றி எச்.ஆர் மனேஜர் ஹசன் எனக்கு ஏற்கனவே அறிவித்துவிட்டார். என் முன் இருந்த ஆசனத்தில் அவரை அமரும்படி சொன்னேன். “தாங்கியூ” என்று மரியாதையாக அவரிடம் இருந்து பதில் வந்தது.
“ராஜ் நான் ஏற்கனவே தேவையான டிரெயினிங்கை சார்ஜாவில் முடித்துவிட்டேன். வேலை ஆரம்பிக்க நான் தயார்” என்றார் நம்பிக்கையோடு;. அச்சமயம் அவரது கையிலிருந்த செல் போன் மணி அடித்தது.
“ நான் பேசலாமா என்று என் அனுமதி கேட்டார். வழமையில் அரேபியர்களிடம் அந்த பழக்கம் இல்லை. வெளிநாட்டில் படித்ததாலோ என்னவோ அவருக்கு அந்த பழக்கம் வந்துவிட்டது. என் அனுமதியோடு செல் போனில் அரபிக் பாஷையில் பேச ஆரம்பித்தார். பேசி முடிந்தவுடன், “ அழைத்தது என் மனைவி. என்ன நேரத்துக்கு வந்து என்னை காரில் எற்றி செல்வது என்று கேட்டாள். அவளுடைய கார் கராஜிலை. என் காரைப் பாவிப்பதற்கு கொடுத்திருந்தேன்” என்றார் அன்வர்.

“ அன்வர், நீர் ஆங்கிலம் பேசும் போது அமெரிக்க வாசைன வீசுகிறது. அங்கு படித்தீரா?”

“ ஆம் புளோரிடா யூனிவர்சிட்டியில் 4 வருடங்கள் படித்துப பட்டம் பெற்றனான்”

“ அது தான் ஆங்கிலம் சரளமாகப் பேசுகிறீர். அன்வர் உமக்கு வேலை சம்பந்தப்பட்ட உதவி தேவையானால் என்னோடு தொடர்பு கொள்ளத் தயங்காதீர்.”

“நிட்டசயமாக ராஜ்”.
தேனீh அருந்திவிட்டு இருவரும் “கொமேர்சல் ஒப்பரேசன்” பகுதியில் வேலை செய்யும் மற்றைய ஊழியர்களுக்கு அன்வரை அறிமுகப்படுத்தி வைக்க அழைத்துச்சென்றேன். வர்த்தகப் பகுதிக்கு உதவி மனேஜரான ஜுமைத் என்ற அரேபியருக்கு அறிமுகம் செய்து வைத்த போது, இருவரும் அரேபிய பாஷையில் உரையாடத் தொடங்கிளார்கள். இது சீனர்களைப் போல், அரேபியர்களிடையே உள்ள கலாச்சாரம்.

“ அன்வர். உமக்கு ஜுமைதை ஏற்கனவே தெரியுமா”,

“ தெரியும். ஜுமைத்தின் வீடு என் வீட்டுக்கு ஐந்து வீடு தள்ளியிருக்கிறது. இவருக்குச் சொந்தமாக டெய்ராவில் பிஸ்னஸ் வேறு இருக்கிறது. இவரது பூர்வீகம் இரான்”

“ என்ன ஜுமைத் இரானியாரா? அப்போ உம்மைப் போல் அரேபிய உடை அணிந்திருக்கிறாரே?.

“ இரான் அண்டைய நாடு. ஒருகாலத்தில் இரானியர்கள் வியாபாரம் நிமித்தம் துபாய் வந்து குடியேறியவர்கள். நாளடைவில் துபாய் வாசிகளாகிவிட்டார்கள்.

“பலூச்சி” என்று அழைக்கப்படும் பலுச்சிஸ்தானைச் சேர்ந்;தவர்களும் இரானியர்களை போல துபாய்வாசிகளாக வாழ்கிறார்கள்.”

“அது சரி உமது பூர்வீகம் துபாய் தானே”?

“பெடுயின் அரபு இனத்தைச் சேர்ந்த என் மூதாதையர்கள் வாழ்ந்தது “வாடி ஹட்டா” என்ற துபாய் எமிரேட்டில் உள்ள பள்ளத்தாக்கு. துபாயில் இருந்து கிழக்கே 120 கிமீ தூரத்தில் ஹட்டா உள்ளது. கோடைகாலத்தில் கடுமையான வெப்பத்தில் இருந்து தப்புவதற்கு பல துபாய் வாசிகள் ஹட்டாவுக்குப் போய் விடுவார்கள். ஓரு நாள் உங்களையும் வாடி ஹட்டாவுக்கு அழைத்துப் போகிறன். சிற்றாறுகள் உள்ள அழகான மலைப் பகுதி. ஹட்டாவில் அளவான வெப்ப நிலை.”

“நல்லது அன்வர். வாரும் என்ஜினியரிங் செக்சனுக்குப் போவோம். பிரதம என்ஜினியர் கீத் மில்லர் , இங்கிலாந்து நாட்டவர். அங்கு பல வருடங்கள் பிரிட்டிஷ் டெலிகொம்மில் வேலை செய்தவர். அனுபவம் வாய்ந்தவர். பல இந்திய, பாக்கிஸ்தானிய என்ஜினியர்களும் அவருக்கு கீழ. வேலை செய்கிறார்கள். அவர்களையும் உமக்கு அறிமுகப்படுத்தி வைக்கிறேன். அவர்கள் உமக்கு வேலையில் உதவியாக இருப்பார்கள்.” இருவரும் என்ஜினியரிங் பகுதிக்கு சென்றோம்.

******

சில மாதங்களில் அன்வர் என்னோடு நெருக்கமாகி விட்டார். ஒரு நாள் துபாய் பொலீசில் மேஜராக இருக்கும் தனது தமையன் அமீரை எனக்கு அறிமுகப் படுத்திவைத்தார். அவரும் அன்வரைப்போல ஆங்கிலம் சரளமாகப் பேசக் கூடியவர். அன்வரைப்போல் அவரது தமையனும் அமெரிக்கன் டெக்சாஸ் யூனிவர்சிட்டியில படித்து பட்டம் பெற்றவா. அமிரின் தந்தை அல் மக்தூமின் நெருங்கிய உறவினர். “ என் தந்தை ஒரு கவிஞர். அரேபிய மொமியில் பல கவிதைகள் இயற்றி இருக்கிறார். அவை பெரும்பாலும் துபாயை ஆட்சி புரிபவரைப்பற்றி போற்றி எழுதுப்பட்டது” என்றார் அன்வர்.

“ இது ஓரு காலத்தில தமிழ் நாட்டில் வாழந்த அரச கவிஞர்கள் மன்னரைப போற்றி கவிபாடினார்கள். அவர்களுக்குப் பொன்னும் வெள்ளியும் மன்னர்கள் கொடுத்தாhகள்;. அந்தக் கலாச்சாரம் துபாயிலும் இருக்கிறது போல . அது சரி நீரும் கவிதை எழுதுவீரா”

“ சிறு வயதில் எனது தந்தையின் வழிகாட்டலில் எழுதினேன். இப்போ எழுதுவதுஇல்லை” என்றார் சிரித்தபடி அன்வர்.

; அன்வரோடு கூடப் பிறந்தவர்கள் இரு சகோதரர்கள். அகமத் குடும்பத்தில் இவர் இரண்டாவது மகன். அன்வரின தம்பி ரசீட் மேல்படிப்புக்காக அமெரிக்காவுக்கு சென்றுவிட்டார். அகமத் குடும்பத்தில் கடைசியாகப் பிறந்தது ஒரு பெண். பெயர் பபிதா. குடும்பத்தில் ஒரு பெண் எள்ற படியால் எல்லோரும் பபிதா மேல் அன்பைப் பொலிந்தனர். ஏழுவயதாக இருக்கும் போது எதிர்பாராத விதமாய் பபிதாவுக்கு போலியோவந்து ஒரு கால் முடமாயிற்று. அவளைக் காட்டாத டொக்டர்கள் இல்லை. எல்லோரும் கைவிரித்து விட்டனர். அது குடும்பத்தில பெரும் தாக்கத்தை உண்டு பண்ணியது. பபிதா படிப்பில் வெகு கெட்டிக்காரி. தான் முடமானவள் என்ற தாழ்வு மனப்பான்மை அவளுக்கு கிடையாது. அவளை அபுதாபி எமிரேட்டில் உள்ள அலேயின் யூனிவர்சிட்டியில் படிக்க வைத்தனர். அவளும் படித்து பொருளாதாரத்தில் பட்டம்; பெற்றாள். அன்வரின் வற்புறுத்தலினால் துபாய் வங்கியில் உதவி மனேஜராக பபிதா வேலை செய்யத் தொடங்கினாள்.

ஓரு நாள் தனது பிறந்த நாளுக்கு வீட்டுக்கு வரும்படி அன்வர் என்னை அழைத்திருந்தார். என்னோடு நெருங்கிப பழகியபடியால் என்னை குடும்பத்தினருக்கு அறிமுகப்படுத்தி வைக்கு ஆசைப்பட்டார். என்னால் அவர் அழைப்பை மறுக்க முடியவல்லை. அரேபியர்கள் விருந்தோபலுக்கு பெயர் பெற்றவர்கள். பணக்காரர்கள் வாழும் பகுதியான ஜுமைராவில் அன்வருக்கு ஒரு அழகான பங்களா இருந்தது. அன்வருக்குப் பூந்தோட்டம் செய்வதில் பிரியம் இருப்பதற்கு சான்றாக விட்டின் முன் தோட்டத்தில் ரோஜா, போகன் வில்லா, மல்லிகை மற்றும் பலதரப்பட்ட பூச் செடிகள். என்னால் நம்பமுடியவில்லை. எப்படி துபாயின் வெப்பமான கால நிலையில் அவை வளர்கிறது என்று. வீட்டிற்கு முன்னால் குறைந்தது ஆற கார்களை நிறுத்த இடமிருந்தது.

எனது காரை நிறுத்திவிட்டு நான் இறங்கிய போது என்னை வரவேற்க அன்வரும் அவர்; மனைவியும் காத்திருந்தனர். அன்வரின் மனைவியைக் கண்டதும் என்க்கு ஒரே ஆச்சரியம். என்ன அன்வர் வெள்ளை இனப்பெண்மணியை மணந்திருக்கிறாரா என்ற கேள்வி எனக்குள் தோன்றியது.

“ ஹாலொ ராஜ் வெலகம்டு அவர் ஹவுஸ் என்று பிரிட்டிஷ் உச்சரிப்பில் என்னை அன்வரின் மனைவி வரவேற்றாள். “
அன்வர் தன் மனைவியை “மலிகா” என்று எனக்கு அறிமுகம் செய்துவைத்தார். “மலிகா என்பது அரசியை அரேபிய மொழியில் குறிக்கும். இவ என் வீட்டுக்கு அரசி. இவவுடைய உண்மைப் பெயர் எமிலி. துபாய் வாசியானதும் பெயரை மாற்றி விட்டோம்.” என்றார் அன்வர் சிரித்தபடி.
“ அருமையான பெயர் அன்வர். தமிழில் மல்லிகா என்பது மல்லிகை மலரைக் குறிக்கும். இப்போது புரிகிறது உமக்கு ஏன் மல்லிகை மலர் மீது விருப்பமென்று” என்றேன் சிரித்தபடி.
இங்கிலாந்துக்கு பயி;ற்;சிக்காக சென்றிருந்த போது எமிலையை லண்டனில் சந்தித்தாகவும,;. நாளடைவில் தங்கள் நட்பு காதலாக மாறியதாகவும், அதுவே திருமணத்தில் முடிந்ததாக விபரம் சொன்னார் அன்வர்.
“ நீர் வெளிநாட்டுப் பெண்ணை திருமணம் செய்வதற்கு உமது குடும்பம் எதிhப்பு தெரிவிக்கவில்லையா” என்றேன் ஆச்சரியத்துடன்.
“ இல்லை. என் தந்தை ஒரு முற்போக்குவாதி பழமையில் இருந்து விளகிப் போகிறவர். பிள்ளைகளின் விருப்பம் தான் அவருக்கு முக்கியம்”
அன்வரின் வீடு நிறம்ப உறவினர்கள். அன்வர் தனது சகோதரி பபிதாவை எனக்கு அறிமுகம் செய்து வைத்தார். பபிதா சுமாராக ஆங்கிலம் பேசுவாள். அமைதியான கூச்சமுள்ள பெண். அதிகம் பேசமாட்டாள். கடவுள் இந்தப் பெண்ணுக்கு; ஏன் இந்த தண்டனையைக் கொடுத்திருக்றிறது என்று மனதுக்குள் நினைத்து கவலைப்பட்டேன்.

“அன்வர், நீர் எல்லோரையும் அறிமுகப்படுத்தினீர். உம் அம்மாவை எனக்கு அறிமுகப்படுத்த வில்லையே” என்றேன்.

“ அம்மா ஒரு பழமையான அரேபியப் பழக்க வழக்கங்களை கடைப்பிடிப்பவள். தனக்கு தெரியாத ஆண்களிடமிருந்து ஒதுங்கி இருப்பாள். எப்பவும் சமையல் அறைக்குள் தான் வேலை. சுவையாகச் சமைப்பாள். அதோ அந்த உணவுகள் பல அவள் தாயாரித்தது. சாப்பிடவுடன் தெரியும் அதன் சுவை” என்று மேசையில் இருந்த பல அரேபிய உணவுகளைச் சுட்டிக் காட்டியபடி அன்வர். அந்த உணவுகளில் எனக்குப் பிடித்தமான “பாபாகனூஜ“ இருந்தது.,
சிறு கோப்பையில் ஏலக்காய் போட்ட கோப்பியை ஒரு உயரமான அரேபிய இளைஞன் எல்லோருக்கும் பரிமாரிக் கொண்டிருந்தான். எனக்கு இருதடவை கோப்பிபரிமாறப்பட்டது. எனக்கு இனி போதும் என்பதை கோப்பையை அசைத்து, சமிக்கை மூலம் தெரிவிப்பது அரேபியர் கலாச்சாரம். இல்லாவிடில் தொடர்நது கோப்பி வந்தபடியே இருக்கும். இதை பக்கதில் இருந்த அன்வரின் இனத்தவர் ஒருவர் சொல்லித்தான் எனக்குத் தெரியவந்தது. துபாயில் பல வருடங்கள் வேலை செயதபடியால் அரேபுpய மொழியை சற்று பேசக்கற்றுக்கொண்டேன். அரேபிய கலாச்சாரத்தைப் பற்றி கற்க இன்னும் எவ்வளவோ இருக்கிறது என்பதை உணர்ந்தேன். வந்திருந்த சிலரோடு அவர்கள் மொழியில் பேசினேன். அது அவர்களுக்கு ஆச்சரியமும் மகிழ்சிiயும் கொடுத்தது. அடிக்கடி “சுக்கிரன்” என்ற அரேபிய வார்த்தையை பாவித்ததேன். சுக்கிரன் என்றால் நன்றியாகும்.
ஒருபெரிய மேசையில் பலவிதமான அரேபிய உணவுவகைள் தயாராக இருநத்து. ஒரு பெரிய கிடாயையும் , மூன்று கோழிகளையும. இருபெரிய ஹமூர் மீன்களையும் ரோஸ்ட் செய்து வைத்திருந்தனர். இன்னோரு மேசையில் பல பழவகைகள். ஆதில் அன்வரின தந்தையின் வாடி ஹட்டா தோட்டத்து பேரீச்சம் பழமும் இருந்தது. விரும்பியவர்கள் குடிப்பதற்கு ஒட்டகப்பால் வேறு இருந்தது. அரேபியர்கள உணவு உண்ணும் போது ரொஸ்ட் செய்த ஆட்டிறச்சியை எல்லோரும் கைவைத்து பகிர்ந்து உண்பதைக்கண்டேன்.

“இந்;த வழக்கம் சகோதர தத்துவத்திற்கு ஒரு எடுத்துக்காட்டு” என்றார் அன்வர்
.
“ ரோமில் இருக்கும் போது ரோம்வாசிகள் செய்வது போல செய்”; என்ற ஆங்கிலச் சொற்றொடருக்கு இணங்க நானும் அவர்களோடு சேர்ந்து கைவைத்து, இறைச்சியைப் பகிர்ந்துண்ண தீhமானித்தேன்.

“சாப்பாடு ரெடி. சாப்பிட வரலாம்” என்று அழைத்தபடி எனக்கு கோப்பி பரிமாறிய இளைஞன்; என்னை வந்து ஆங்கிலத்தில் அழைத்தான்.

“ ராஜ் இவரை உமக்கு அறிமுகப்படுத்த மறந்துவிட்டேனே. இவர் வெகு விரைவில் எங்கள் குடும்பத்தில் ஒருவராகப் போகிறார். இவர் தான் எனது தந்தையின் ஹட்டாவில் உள்ள பெரீச்சம்பழத் தோட்டத்தையும் . ஒட்டகங்களையும் கவனித்துக் கொள்பவர். பெயர் சகீட். இவரும் பக்தாத் யூனிவர்சிட்டியில் விவசாயத்தில் பட்டம் பெற்றவர். சிறுவயது முதற்கொண்டே பபிதாவுடன் ஒன்றாக விளையாடினவர். சகீட்டின் பெற்றோருக்கு பெண் குழந்தைகள் இல்லை. பபிதா மேல் அவர்களுக்க பாசம். “. சகீட்டை எனக்கு அறிமுகப்படுத்தி வைத்தார். சகீடும் சுமாராக ஆங்கிலம் பேசினார்.

” உங்களைச் சந்தித்ததில் மகிழ்ச்சி” என்றார் ஆங்கிலத்தில் சகீட் .

“ சகீட்டை எங்கள் குடும்பத்தில் ஒருவாராகவே மதிக்கிறோம். பதினாறு வயதில் பெற்றோரை இழந்தவர். அதன் பின் எஙகள் வீட்டில் வளர்ந்தவர். என் பெற்றோரினதும்; எங்களதும்; அன்புக்கு பாத்திரமானவர்” என்றார் அன்வர்.
அன்வர் எதைச் சொல்ல வருகிறார் என்று எனக்குப் புரிந்துவிட்டது.

“பபிதாவுக்கு சகீட்டை திருமணம் செய்து வைக்கலாம் என்ற யோசனையை நான் என் தந்தைக்கு எடுத்துச்சொன்னேன். அவருக்கு எனது ஆலோசனையைக கேட்டு மகிழ்ச்சி. சகீட்டும் பபிதாவும்; சம்மதித்தால் தனக்கு ஆட்சேபனை இல்லை என்றார் என் தந்தை.
“ அவர்கள் சம்மதம் தெரிவித்தார்களா?”
“ இல்லாமலா. வெகு விரைவில் பபிதாவுக்கும் சகீட்டுக்கும் திருமணம் நடக்க விருக்கிறது” என்றார் புன்சிரிப்போடு அன்வர்.
உங்கள் தந்தையை நினைக்க எனக்குப் பெருமையாக இருக்கிறது. இது போன்ற திருமணம,; சிறீலங்காவில் தமிழர்களிடையே நடப்பது மிகக் குறைவு. சாதி, மதம், பதவி. கல்வி, பொருளாதாரம் என்று பலவற்றை திருமணத்தின் போது அலசி ஆராய்வார்கள். அதுவும் தோட்டத்தைக் கவனிப்பவன், தன் முதலாளியின் மகளைத் திருமணம் செய்யப்போவதைக் கேட்கும் போது உமது குடும்பத்தின் மெல் எனக்கு உள்ள மரியாதை மேலும் உயர்ந்துவிட்டது என்றேன்.

*******

எழுதியவர் : (பொன் குலேந்திரன்- கனடா). (17-Sep-16, 10:38 pm)
பார்வை : 162

மேலே