என் சிருஷ்டியில் நீ இல்லை

சூல் கொண்டு
திறவது பின்
சூழ்ந்தே திறப்பது
என்னுரு பூட்டுக்குள்
உன்னிரு மொட்டுக்கள்
பிறை செதுக்கி
வரை நெருக்கும்
சிறை உடைத்தல்
நீவீர் தானும்
தேனும் பா வும்
கடையச் செய்த
காட்டருவி களித்தலில்
உன் புறம் தெரிய
உன் நிறப்பச்சையில்
நீர் விட்டு நினையே
பருகினேன்...
கரைந்தோடி கலைந்தோடி
மீண்டும் ஆகும் மோகத்தில்
உனது அத்தனை சூடல்களும்
சூல் கொண்டே சொட்டுகிறது...
உயிர் கசியும்
உறை பசியும்
மேவிய பொல்லாத
தீவுக்குள்
முக்கி முணகி
முத்தெடுக்கவே திறக்கிறது...
மரண சம்பவ
சம்போக யாத்திரையில்
தத்துவ தழுவலை
கொத்திய நழுவலை
எங்கனம் பறிக்க...
சிருஷ்டிக்கு முன் பின்னான
வளைவுகளில் ஆழ் துளிகள்...
பொந்துக்குள் சூழ்ந்திட்ட
சூல் உனது யோனி..
கருமம் கரை சேர காத்திடத்தான்
கால் இறுக
பின்னிப் பிணையும்
பெரும்பாம்புக் காடெனவே
ஆதி
செய்த நானும்
அதற்கு பின் இல்லை
நீயும்...!

கவிஜி

எழுதியவர் : கவிஜி (19-Sep-16, 8:08 pm)
பார்வை : 68

மேலே