தினம் ஒரு தத்துவ பாட்டு - 42 = 233

பாரம் சுமக்கும் மனிதா! நீ பட்டினி கிடப்பதா..?
பாழும் வயிற்றுக்காக நீ பாரம் சுமக்கிறாய்..!
ஏழைவீட்டு அடுப்பில் தூங்கும் பூனையே..
எஜமான் வீட்டு நெருப்பில் வேகும் ஏழையே

எரியும் விளக்கைப்போல உன்வாழ்க்கை ஒளிக்கவில்லையே
சரியும் சாம்பல்போல உன்வாழ்க்கை விளங்கவில்லையே
மிளிரும் வைரம்போல உன்வாழ்க்கை ஜொளிக்கவில்லையே
கரியும் உப்பும்போல உன்வாழ்க்கை துளங்கவில்லையே

ஓட்டுக்காக காலைபிடிக்கும் காக்கா கூட்டங்கள் - நாம்
சோத்துக்காக அலைவதைப்பார்த்து டாட்டா காட்டுங்கள்!
நாட்டுக்காக நன்மை விளைக்கும் மெகா திட்டங்கள்
ஆட்சிமாற்றம் ஏற்பட்டால் கிடப்பில் ஆரப் போடுங்கள்

பிஞ்சுகளின் கைகளில் பிச்சைப் பாத்திரம் – கொடுத்து
பிச்சையெடுக்கச் சொல்வது நமக்கு தத்திரம்!
படிக்கும் வயதில் இரும்படிக்கும் கோர சம்பவம் – இந்த
பாழும் நாட்டில் நடக்கின்ற தின உற்சவம் !

பால் வடியும் முகங்களில் சீழ் வடியுது
சீழ் வடிய காரணம் - கடின உழைப்பு !
சான் வயிறு வளர்க்கவே ஊன் உருகுது
தாய் மடியில் படுத்துறங்கி இளைப்பாறுது !

ஆங்கில நாட்டில் அனைவருக்கும் ஆடம்பர வாழ்க்கை – அங்கு
ஆட்சிக் கட்டிலில் எவர் அமர்ந்தாலும் விளம்பர பிரியரில்லை…
தாய் நாட்டில் நாற்காலிக்கு நாளும் சண்டை – அது
கோயாபல்ஸ் ஆட்சி நடத்த மூளும் சண்டை…!

வாக்குச்சாவடி வரும்வரைக்கும் வரவேற்பு உபசரிப்பு
வாக்களித்துப் போகும்போது வாயெல்லாம் புன்சிரிப்பு
வெற்றிவாகை சூடிவிட்டால் தெருவெல்லாம் சரவெடிப்பு
வாக்காளர் யாவருக்கும் நன்றியென்பது கண்துடைப்பு

அய்ந்தாண்டுக்கு ஒருமுறை அரசியல்வாதிக்கு சுயப் பரிசோதனை
தேர்ந்தவர்களின் தலையெழுத்தை தீர்மானிக்கும் தேர்தல் தேவதை
தோல்விமுகம் காணாத தலைவர்களும் இங்குண்டு – அவர்களுக்கு
பொதுமக்கள் மனங்களிலே எப்போதுமே நிலையான இடமுண்டு..!



கோட்டை கொத்தளத்தில் கொடி பறக்கவிட்டால் மட்டும் போதாது
நாட்டை கொள்ளையடிக்கும் வேலைகளை அடியோடு நிறுத்து…!
வேட்டை ஆரம்பம் வேட்பாளர்களே உசார்..! – உங்களை
வாக்காளன் வெள்ளையடிக்க காத்திருக்கான் உசார்..!

ஓட்டுக் கேட்கும்போது மட்டும் ஓயாத வானொலிகள்
ஒட்டுக்கேட்டு ஜால்ட்ரா போடும் கைக்கூலிகள்
ஒத்தாசி கேட்டுப்போனால் ஓடவிரட்டும் ஒக்காலிகள்
ஒருகடுதாசி போதுமடா உங்களை கிழித்துவிடும் மீடீயாக்கள்!

எழுதியவர் : சாய்மாறன் (24-Sep-16, 12:05 pm)
பார்வை : 441

மேலே