நிமேச்சு தேச்சு

டேய் ரட்டப் பசங்களா நீங்க ரண்டு பேரும் ஊருக்கு புதுசு மாதிரி தெரியுது!
@@@#####

ஆமாம் பாட்டிம்மா, நாங்க சென்னையிலிருந்து எங்க தாத்தா வீட்டுக்கு வந்திருக்கிறோம்.
######
யாருடா உங்க தாத்தா?
######
அதோ அந்தக் கடசி வீடுதான் எங்க தாத்தா வீடு.
#####
அடடே, நீங்க என்னோட கடசித் தம்பி காளியப்பனோட பேரப்பிள்ளங்களா?
#@####
ஆமாம் பாட்டிம்மா.
########
செல்லங்களா நீங்க ரண்டு பேரும் எனக்கும் பேரப்பிள்ளைங்கதாண்டா.
ஆமாம் உங்க பேர என்ன?
######
எம் பேரு நிமேஷ், அவம் பேரு தேஜ்.
#######
என்னடா பசங்களா நிமேச்சு தேச்சு-ன்னு இந்திப் பேருங்கள வச்சிருக்காங்க.
@#@##@#
அதெல்லாம் எங்களுக்குத் தெரியாது பாட்டிம்மா. எங்க அம்மா உங்களப் பாக்க வந்துட்டு இருக்கறாங்க. அவுங்களக் கேட்டுத் தெரிஞ்சுக்கங்க.
@#####
சரிடா செல்லங்களா, நீங்க போயி வெளையாடுங்கடா.
@#####@#########################%%%%%%%%####%%%%%
நகைக்க அல்ல. தமிழ்ப் பற்றை வளர்க்க. பிறமொழிப் பெயர்களின் பொருள் அறிய. பெரும்பாலான தமிழர்களின் வெறித்தனமான இந்திப் பெயர் மோகத்தைச் சுட்டிக்காட்டவே இந்தத் தகவல்.
#####@@@@@@@@@@@@@@@@@
நிமேஷ் = மிகச் சிறிது நேரமே இருக்கக்கூடிய, உள்ளிருந்து கண்காணிப்பவர்.
தேஜ் = ஒளி, பளபளக்கும் ஒளி கொண்ட, ஒளிரும், பிரகாசமான கதிர் ஒளிகள் செலுத்துகிற.

@@############@@@##########
இந்தி, சமஸ்கிருத மொழிகளில் பெயரடை = பண்பைக் குறிக்கும் சொற்களைக்கூட பெயர்ச் சொற்களாகப் பயன்படுத்தும் வழக்கம் நடைமுறையில் உள்ளது. தமிழர்கள் பெயரடைகளை பெயர்ச் சொற்களாகப் பயன்படுத்துவதில்லை.
#########
நன்றி: யுனிவர்சல் டீலக்ஸ் அகராதி
இண்டியாசைல்ட்நேம்ஸ்காம்

எழுதியவர் : மலர் (26-Sep-16, 9:10 am)
சேர்த்தது : மலர்91
பார்வை : 186

மேலே