காக்கைக்கு சோறு போடும் உன் ஆலாபனை

நிமிடத்தை அடித்தோட்டினேன்
முந்தைய நொடியிலேயே
தொடங்கிவிட்டிருந்தது அடுத்த நொடி...

*****

அவன் வீதியை
அறுத்தெடுத்துப் போகிறாள்
பக்கத்தூருக்கு வாக்கப்பட்டவள்

*****

முலை சப்பிப் போட்ட பிறகு
பனை மரத்தினுச்சியில்
பிணமொன்று முளைக்கிறது

*****

எல்லாம் தெரிந்தவன் மயிரில்
தொடைச்சந்தும் அக்குளும் புறவழி
கோஷங்களாகின்றன....

*****

ஊறுகாய் சுவைக்கும் உன்முகம்
வாய்த்திருக்கிறது
ஒவ்வொரு பந்திக்கும்...

*****

காக்கைக்கு சோறு போடும்
உன் ஆலாபனைக்கு பாடு பொருளாய்
எப்படியும் ஆகி விடுகிறது
தொடுவானத்தில் தினமொரு
பொன்னிற ஆலிங்கனம்....

*****

கவிஜி

எழுதியவர் : கவிஜி (26-Sep-16, 2:23 pm)
பார்வை : 128

மேலே