தடையைத் தகர்த்து தமிழை உயர்த்து

படிக்கின்ற படிப்பெதற்கு..? – தம்பி
அன்னியர் மொழி வளர்ப்பதற்கின்றி

துடிக்கின்ற இதயமெதற்கு..? – தம்பி
அயலானை அடையாளப் படுத்துவதற்கின்றி

வடிக்கின்ற கைகள் எதற்கு..? – தம்பி
வரலாற்றை பிழை ஆக்குவதற்கின்றி

வெடிக்கின்ற வாணம் எதற்கு..? – தம்பி
இனமிழந்த விழாவை அலங்கரிப்பதற்கின்றி

பிறக்கின்ற கொள்கை எதற்கு..? – தம்பி
மொழி பற்றின்றி வாழ்வதற்கின்றி

திறக்கின்ற விழி எதற்கு..? – தம்பி
தாய்மொழி அழிவை ரசிப்பதற்கின்றி

கொழிக்கின்ற பணம் எதற்கு..? – தம்பி
ஒளிர்கின்ற தமிழர் பண்பாடு ஒழிப்பதற்கின்றி

செழிக்கின்ற உன் சந்ததி எதற்கு..? – தம்பி
தாய்மொழியைத் தவிடு பொடியாக்குவதற்கின்றி

கொண்டுள்ள உயிர் எதற்கு..? – தம்பி
பொருள் எண்ணத்தில் ஓன்று அதிகரிப்பதற்கின்றி

தமிழர் பரம்பரைக் வீரக்குருதி எங்கே..? – தம்பி
வீரம் உன் உடல், போர் உன் தொழில்
தமிழ் உன் உயிர் வாகை உன் மலர்
பறையடிக்கிறேன் பயணப்படு
மறு பிறப்பிலேனும் மறந்து விடாதே
தடையைத் தகர்த்து தமிழை உயர்த்து..!

எழுதியவர் : செ.பா. சிவராசன் (26-Sep-16, 8:35 pm)
சேர்த்தது : செ.பா.சிவராசன்
பார்வை : 203

மேலே