காதல் - பொய்யா மெய்யா

எல்லாருக்கும் வணக்கம்,

காதல்,

காதல்,ஒரு அழகான வார்த்தை,குறிப்பா 14 வயசுல இருந்து ஒரு 30 வயசு வரை இன்னிக்கு இருக்குற தலைமுறைக்கு ரொம்ப புடிச்ச வார்த்தை அப்படினு சொல்லாம். ஆனா அது என்ன? எத காதல்னு சொல்றது,இல்ல யாராவது இதுதான் காதல்,காதல்னா இப்படித்தான் இருக்கும்னு சொல்ற மாதிரி எதாவது உதாரணம் இருக்கா,என்ன கேட்டா அப்படி எதுவும் இல்லனு தான் சொல்லுவேன்.நம்ம காதலை எங்க இருந்து தெரிஞ்சுக்கிட்டோம் நெறையா கதை படிச்சு அதுல இருந்து கொஞ்சம் கத்துக்கிட்டோம், அப்பறோம் சினிமா பாத்து கொஞ்சம் தெரிஞ்சுக்கிட்டோம். அப்படி நாம பாத்த,படிச்ச சம்பவங்கள் நம்ம வாழ்க்கைல வரும் போது நாமளும் அந்த வலைல மாட்டிக்கிறோம், அது மட்டுமில்லாமா நமக்கு புடிச்சதா நெனச்சு அந்த பொன்னையோ (பசங்களுக்கு) ,அந்த பையனையோ (பொண்ணுங்களுக்கு) தொல்லை பண்ண ஆரம்பிச்சிறோம். நம்மளும் நிம்மதியா இல்லாம அவங்களையும் நிம்மதியா இருக்க விடாம நம்மள ஆட்டி படைக்க நமக்கு வந்த ஒரு மன நோய் தான் காதல்.

கொஞ்சம் விவரமா பாப்போம்.


ஒருத்தன் இருக்கான் அவனுக்கு ஒரு நல்ல வேலை கை வசம் இருக்கு ஆனாலும் அது அவனுக்கு பத்தல ஏனா அவனுக்கு தேவைகள் நெறயா இருக்கு .தினமும் ஆபிஸ் வரதுக்கும் போறதுக்கும் சரியா இருந்த நேரம், ஒரு நாள் ஒரு அழகான பொன்னால மாற ஆரம்பிச்சுது, அவன் அவள பாத்ததுக்கு அப்புறம், "படத்துல வர மாதிரியே நடக்குதே, இவதான் அவளோனு", நெனச்சு அவளை துரத்தி துரத்தி காதலிச்சான், ஆனா கொடுமையை பாருங்க, இவளை பாத்த போதெல்லாம் இவனுக்குள்ள ஆயிரம் மாற்றம், ஆனா அந்த பொண்ணுகிட்ட ஒரு மாற்றமும் இல்ல.அவனுக்கு என்ன பண்றதுனு தெரில. அவளுக்கோ துளி கூட அவன் மேல காதல் நோய் வரல.

காதல்னா ரெண்டு பேரோட கண்ணுலயும் ஒரு பிம்பம் விழுந்தாதானே அது காதலா இருக்க முடியும், ஆனா இங்க இவன் கண் பார்த்த அவளோட பிம்பம் ஏன் அவ கண்ணுல விழல . அப்போ சும்மா ஒரு மனுஷனுக்கு எப்படி ஒரு பொண்ணு மேல காதல் வருது, அத தூன்ற காரணி என்ன?

பாப்போம் கொஞ்சம் விலாவாரியா பாப்போம்.அவளை அடிக்கடி ஏற்கனவே நெறையா தடவ நம்மாள் பாத்துருக்கான்,அப்போ அவளோட அழகுல லேசா மயங்கி கொஞ்ச நாள்ல நெறையா மயங்கி அவ மேல இருந்த அந்த ஈர்ப்ப காதலாக்கிருக்கான் அவன் மனசுக்குள்ள.இது முழுக்க முழுக்க இவனோட சொந்த முடிவு,இதுக்கும் அவளுக்கும் சம்பந்தம் சுத்தமா இல்ல. அப்போ ஒரு பையனுக்கும் பொண்ணுக்கும் எப்போ காதல் பிறக்குது? அது ஏன்? எப்படி? பாப்போமா ?

இதுல பிரச்சினை, இவன பத்தி ஒண்ணுமே அந்த பொண்ணுக்கு தெரியாது,வெறும் மொகத்த மட்டுமே பாத்து முடிவு பண்ண இவ ஒன்னும் arrange marriage பண்ண போறதில்ல. அதனால முதல்ல இவன் அவகிட்ட பழகிருக்கணும் அப்பறோம் பிரண்டா இருக்கணும் அதுக்கு அப்புறம் போய் சொல்லிருந்தா ஒரு வேளை consider பண்ணி பாத்திருக்க வாய்ப்பு இருக்கு.
இப்படி இருக்கும் போது இவங்களுக்குள்ள இனிமே காதல் பொறந்தா எப்படி இருக்கும்,அது உண்மையிலேயே காதல் தானா. உண்மையிலேயே காதல் உண்மையான ஒரு உணர்வு தானா.

அவள பாத்தோன இவனுக்குள்ள வந்த மாற்றம் இன்னிக்கு நேத்து வந்தது இல்ல, புதுசும் இல்ல, இருந்தாலும் அதையும் தாண்டி ஏதோ ஒன்னு அவன அவகிட்டயே கட்டி போட்டு வச்சிருந்தது, அவள பாத்தாலே மொத்தமா ஒடஞ்சு போற மனசு, இளகி போற உசுரு, அப்படி நெறையா மாற்றம், சொல்ல முடியாத ஒரு வகை மாற்றம் மன ரீதியா. "அவ இல்லாம நமக்கு இந்த உலகத்துல எதுவும் தேவை இல்லை" அப்படி ஒரு சிந்தனை வர யார் காரணம். இதெல்லாம் இன்னும் கொஞ்ச நாளைக்கு மட்டும் தான் இருக்குமா? இல்ல சாகர வரை அப்படியே இருக்குமா? பாவம் அவனோட இந்த கேள்விகளுக்கு நம்மளால பதில் சொல்ல முடியாது.இப்போ இத என்னனு சொல்றது இது காதலா,அந்த இனம் புரியாத இந்த தவிப்புக்கு பேர் தான் காதல்னா நிச்சயம் இவன் காதல் நோயால ரொம்ப மோசமா பாதிக்க பட்டுருக்கான். கண்டிப்பா இத காதல்னும் சொல்லலாம் ,ஏனா காதல் இப்படி தான் அப்படினு நெறையா கதைகளும் சினிமாக்களும் சொல்லிருக்கு.

இப்போ ஒரு வேளை அந்த பொன்னும் இவன் கேட்ட ஒடனே சரி சொல்லி, இவளுக்கும் அதே உணர்வுகளும் சிந்தனையும் வந்து இருந்தா ஒரு வேளை அது ரெண்டு பேரும் சம்பந்தப்பட்ட காதலாகி இருக்கும் ,அவங்களுக்குள்ள ஒரு நல்ல புரிதலும், அதுக்கு அப்புறோம் ஒரு தெளிவும் இருந்திருக்கும் வாழ்க்கைலயும் காதல்லயும். அப்போறோம் ரெண்டு பேரும் அவங்களோட முடிவு சரின்னு நிரூபிக்க காலம் முழுக்க ஒண்ணா இருந்திருக்கலாம். இடைல சின்ன சின்ன சண்டை சகஜம் தான் ஆனா அது அவங்க விட்டு கொடுத்து போற பக்குவத்துல இருக்கு.

ஆனா அவளுக்கு இவன புடிக்கல ,இந்த உதாரணத்துல காதல் ஒரு பக்கம் மட்டும் பூத்ததாலயோ என்னவோ அது கிட்டத்தட்ட முழுதாய் வளராத கருவாய் உருப்பெறாமல் கரைந்து விட்டது அவனுடைய கண்களில் கண்ணீராய் ,இதுவும் அவளுக்கு புரிய போறது இல்ல ஏனா அவளுக்கு கொஞ்சம் கூட அந்த ஒரு interest இல்ல,அது அவ தப்பும் இல்ல. மொத்தத்துல எங்கயோ படிச்ச கதையும்,பாத்த படமும் நம்ம ஆழ் மனசுல பதிஞ்சு நமக்கே தெரியாம நம்மள ஒரு சில எடத்துல ஒரு சிலர்கிட்ட தொலைச்சுட்டு அப்புறோம் எப்படி வெளிய வரதுனு தெரியாம முழிச்சி கிட்டே இருக்கோம்.

உண்மையா பொய்யானு விசாரிக்க காதல் ஒன்னும் குற்றம் இல்ல.அது ஒரு இயற்கையின் வெளிப்பாடு ,நமக்கு யாரோட முகமும் குணமும் புடிக்குமோ அந்த மாதிரி ஒருத்தர் நம்ம வாழ்க்கைல நம்ம பக்கமா வரும் போதோ இல்ல நம்மல கடந்து போகும் போதோ அவங்க மேல நமக்கு ஒரு வித ஈர்ப்பு வரத்தான் செய்யும். அப்படி நடக்கும் போது நம்ம தேர்ந்தேடுத்தவங்களுக்கு நம்மள புடிக்கலான அது ஒன்னும் பெரிய குற்றம் இல்ல.நிலை இல்லாத இந்த உலகத்துல எதுமே நிலை இல்ல. நிச்சயம் காதல்னு ஒன்னு எல்லார் வாழ்க்கைலயும் இருக்கும்,இருந்திருக்கும். அதுல ரெண்டு பேருக்கும் ஒத்து போயி அப்பறோம் அது கல்யாணத்துல முடிஞ்சு நல்லா வாழ்ந்தவங்களும் இருக்காங்க,கல்யாணத்துக்கு அப்பறோம் தப்பான முடிவு எடுத்துட்டேன்னு divorce பண்றவங்களும் இருக்காங்க.So இது முழுக்க முழுக்க தனி மனிதன் சார்ந்த விசயம். ஒவ்வொரு மனுஷனும் ஒவ்வொரு மாதிரி. உனக்கு இருக்கிற சிந்தனையோட நிச்சயம் ஒத்து போற ஒருத்தர் இருப்பாங்க அவங்களால மட்டும் தான் இப்படி சிக்கலான பிரச்சினைக்கு தீர்வு சொல்ல முடியும். தேடுங்க தேடுங்க தேடிகிட்டே இருங்க உங்களோட ஜோடிய கண்டு புடிக்கறவரைக்கும்.

"காதல் அர்த்தமற்றதாய் ஆகிறது
நம்மிருவரும் ஒருவொருக்கொருவர்
புரிந்து கொள்ள தயாராய் இல்லாத பொழுது!!!!"

எழுதியவர் : சதீஷ் குமார் தங்கசாமி (26-Sep-16, 11:44 pm)
சேர்த்தது : சதீசுகுமரன்
பார்வை : 426

சிறந்த கட்டுரைகள்

மேலே