பக்கவாதத்தை முன்கூட்டியே தெரியப்படுத்தும் அறிகுறிகள் இவைகள்

உலகில், ஆறு பேரில் ஒருவருக்கு பக்கவாதம் வருகிறது. நிமிடத்திற்கு பத்து பேர் இறக்கின்றனர். வயதானவர்கள் மட்டுமல்லாமல் இளம் வயதினரையும் இந்த பக்க வாதம் தாக்கும்.

பக்கவாதம் என்பது கை கால் செயலிழந்து, பேச்சு குழறும் ஒரு வியாதி. மூளைக்கு தேவையான ஆக்ஸிஜன் மற்றும் ரத்தம் கிடைக்காத போது, மூளை கட்டளையிட முடியாமல் உடல் தன் கட்டுப்பாடை இழக்கும். இதனால் பேச்சு குழறி, கைகால் மரத்து போய், கண் பார்வை மங்கலாகி விடும்.

இந்த வியாதியை முன்கூட்டியே அறியலாம். பிரச்சனைகள் உண்டாகும்போது நமது உடல் சில சமிக்ஞைகளை நமக்கு அளிக்கிறது. இதனை நாம் கண்டறிந்து முன்னெச்செரிக்கையாக சிகிச்சை அளித்தால் நம்மால் பக்கவாதத்தை தடுக்க முடியும்.

தற்காலிக பக்கவாதம் மூளைக்கு செல்லும் ரத்தக் குழாய்கள் சுருங்குவதால் அல்லது அடைபட்டால் , மூளைக்கு தேவையான ரத்த ஓட்டம் குறையும். இதனால் உண்டாகும் பாதிப்பு தற்காலிக பக்க வாதம்.

இதில் ரத்தக் குழாய்களில் ரத்தக் கசிவு உண்டாவதால் அல்லது ரத்தம் உறைந்து விடுவதால் உண்டாகும் பாதிப்புதான் தொடர் பக்கவாதம்.

உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், இதய நோய்கள், அதிக கொழுப்புச்சத்து, ரத்தக்குழாயில் கொழுப்பு படிதல், அதிக பருமன், புகைப் பழக்கம், மது அருந்துதல், ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கம், சோம்பலான வாழ்க்கை முறை, மன அழுத்தம், உடற்பயிற்சி இன்மை மற்றும் நாட்பட்ட தொற்று கிருமி பாதிப்பாலும், பக்கவாதம் வரலாம்.

இந்த நோய் வந்த 3 மணி நேரத்திற்குள் கொண்டு சென்றால் சிகிச்சை பலனளிக்கும். அதேபோல் வருவதற்கு ஒரு மாதம் முன்னரே சில அறிகுறிகளை நமது உடல் காண்பிக்கும்.

மூச்சு விடுவதில் சிரமம் இருக்கும். அடிக்கடி தொடர் விக்கல் உண்டாகும். அடிக்கடி மயக்கம், உடல் சோர்வு, தலைவலி, உடல் மெலிதல், வலிப்பு வருவது, ஆகியவைகள் பக்கவாதம் வருவதற்கான அறிகுறிகள்.

இவைகள் அடிக்கடி தென்பட்டால் பக்கவாதத்திற்கான ஆபத்து நெருங்கவுள்ளது என்று அர்த்தம். உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.

எழுதியவர் : செல்வமணி (பகிர்வு) (27-Sep-16, 8:29 am)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 110

மேலே