இதுதான் காதலா

காதலுக்கு கண் இல்லை என்பர்
ஆனால் தலை உண்டு---ஒருதலை....

திக்கு எட்டிலும் காதலுக்கு உதயம்
அது ஒருதலையானால் சிதையும்....

காதல் இனிக்கும் கசக்கும் புளிக்கும்
அதற்க்கு சுவையும் உண்டு...

காதலுக்கு மரியாதை உண்டு
உண்மை பொருமை
நம்பிக்கை இருந்தால்...

காதலுக்கு வெற்றி தோல்வி உண்டு
காதலரின் நிலைப்பாட்டை வைத்து...

காதல் கடவுள் போன்றது அதற்க்கு
பிறப்பும் இல்லை இறப்பும் இல்லை...

காதலுக்கு தாய்வீடு பெண் இதயம்
அது புகுந்தவீடு ஆண் இதயம்...

காதலுக்கு மருத்துவமும் உண்டு---
அது மனநல மருத்துவம்...

காதலுக்கே காதல் உண்டு
அது இனம் மொழி உயர்வு தாழ்வு பார்க்காதது

எழுதியவர் : செல்வமுத்து.M (27-Sep-16, 9:47 am)
Tanglish : ithuthaan kaathalaa
பார்வை : 347

மேலே