மண்டையோடு-ன்னா பேரு வைக்கறது

ஏண்டா கோபாலு யாராவது தன்னோட மகனுக்கு மண்டைஓடு-ன்னு பேரு வைப்பாரா?
@@@@@@
எந்த மடையண்டா அந்த மாதிரி பேரத் தம் பிள்ளைக்கு வைப்பான்.
@@@@@@@
இந்த கோபாலு தாண்டா அந்த மடையன்.
@@@@@
என்னடா சொல்லறா?
@@@@@
உம் பையன் பேரு என்னடா. எனக்குத் தெரியும். இருந்தாலும் நீயே சொல்லுடா.
@@@###
எம் பையன் பேரு கபால்.
@@@@@#
எதுக்குடா அந்தப் பேர வச்ச?
@@###
டேய் கண்ணப்பா, நா "வந்தே மாதரம்" எழுதன வங்கக் கவிஞரும் நாவலாசிரியருமான பங்கிம் சந்தர சாட்டர்ஜியோட வாழ்க்கை வரலாறப் படிச்சு இருந்தபோதுதான் எம் பையன் பொறந்தான். சாட்டர்ஜி எழுதின ஒரு புத்தகத்தின் பேரு 'கபால் குண்டலா'.
எம் பேரு கோபால்; எம் பையனுக்கு 'கபால்'-ன்னு பேரு வச்சுட்டேன்.
@@####@
அதெல்லாம் சரிடா கோபாலு. கபாலி-ங்கறது மண்டையோட்டைச் சுமப்பவர் என்ற பொருளில் சிவபெருமானைக் குறிக்கற பேருடா. கபால்-ன்னா மண்டை ஓடு-ன்னு அர்த்தம்.
சரிடா கண்ணப்பா. நா அர்த்தம் தெரியாமலே ஒரு பேர வச்சேன். அது நா தெனமும் வழிபடும் எந்நாட்டவர்க்கும் தெய்வமா இருக்கும் அந்தக் கைலாசநாதனோட தொடர்படைய பேருன்னு நீ சொன்னதக் கேக்க எனக்கு ரொம்ப மகிழுச்சியா இருக்குதடா நண்பா.
@@@@@@@@@@@@@@@@@@@@
சிரிக்க அல்ல. சிந்திக்க.

எழுதியவர் : மலர் (28-Sep-16, 10:19 pm)
பார்வை : 230

மேலே