நம்பிக்கை

#நம்பிக்கை

மனம் உருகி

பிரார்தித்தேன்

இறைவனிடம்

என் குறைகள்

யாவும்

தீர்ந்துவிடும்

என்று சொன்னதை

நம்பி

சன்னிதியின்

உள்ளே பூசாரியின்

மந்திர உச்சரிப்பில்

என் வேண்டுதல்

அவன் காதில்

விழுந்ததோ

இல்லையோ

தெரியவில்லை

அனைத்தும்

உணர்ந்தவன் அவன்

என் தேவை எதுவென

அறிவானே என்றே

சமாதானமாகி

என்முன் நீட்டிய

ஆரத்தி தட்டை தொட்டு

வணங்கும் பொழுது

கண்டேன் தட்டில்

சில்லறை காசுகளை

காலையும்,மாலையும்

தவறாது பூஜிப்பவனுக்கு

தட்டில் விழும்

"தட்சினையில்"

தான் ஜீவனம்

என்றால்

என் கஷ்டம்

போக

கஷ்டப்படாமல்

கையெடுத்து

கும்பிட்டு

கஷ்டத்தைபோக்க

குறுக்குவழியில்

முயற்சித்து சில

நொடிகள் மட்டும்

கையெடுத்து

கும்பிட்டால் என்

கஷ்டம் தீர்ந்திடுமா?

காலம் காலமாய்

கடவுளுக்கு

தீபாராதனை

காட்டும் பூசாரிக்கே

கஷ்ட ஜீவனமெனில்

என் கஷ்டத்தை

இங்கே சொல்லி

என்ன பலன்

என்றே நினைத்து

விலகினேன்

முயற்சித்தால்

கஷ்டங்கள்

விலகும் என்ற

நம்பிக்கையோடு.#sof #சேகர்

எழுதியவர் : #Sof #sekar (29-Sep-16, 11:49 am)
சேர்த்தது : நா சேகர்
Tanglish : nambikkai
பார்வை : 1125

மேலே