பச்சை நல்லா இல்லடா - உரையாடல் குறுங்கதை

ஏண்டா பச்சை உங்க அம்மா, அப்பாவுக்கு வேற நல்ல பேரே கெடைக்கலையா? உங்கப்பா இந்திப் பேராசிரியரா இருந்துட்டு உனக்கு பச்சைமுத்து-ன்னு பேரு வச்சிருக்கிறாங்க?
@@@@@@
அடே ஷ்யாமு கருப்பையா ஏண்டா உங்கப்பா தமிழ்ப் பேராசியரா இருந்துட்டு உனக்கு நல்ல தமிழ்ப் பேரா வைக்காம ஷ்யாம்-ங்கற இந்திப் பேர வச்சிருக்காரு?
@@@@@@@
என்ன ஏண்டா பச்சை கருப்பையா-ன்னு சொன்ன?
@@@@@@
அய்யா, சாமி, உன்னக் கருப்பையா-ன்னு சொன்னதுக்கு என்ன மன்னிசுக்கடா. உம் பேருக்கு அர்த்தம் என்னன்னு உன்னோட தமிழ்ப் பேராசிரியர் அப்பாவுக்காவது தெரியுமா?
@@@@@
இம்..... அவுருக்கும் தெரியாது. சொல்லறதுக்கு இனிமையா இருக்குதேன்னு எனக்கு அந்தப் பேர எனக்கு வச்சாரு.
#######
ஷ்யாம்ன்னா கருப்பானவன்-ன்னு அர்த்தம்டா.
@@@@
அய்யோ அப்ப எம் பேரு கருப்பையாவா? நா நல்லா செவப்பாத்தாண்டா இருக்கறேன்.
@@@@@@
என்னடா செய்யறது உன்னோட தமிழ்ப் பேராசிரியர் அப்பாவோட இந்திப் பெயர் மோகம்! டேய் ஷ்யாம் எங்கப்பா இந்திப் பேராசிரியரா இருந்தாலும் நம்ம செம்மொழியைக் கேவலப்படுத்தக் கூடாதுன்னு எனக்கு பச்சைமுத்து-ன்னு தூய தமிழ்ப் பேரா வச்சிருக்காருடா. ஆமாம் உங்க அக்கா பேரு லதா-தானே.
@@@
ஆமாம்.
@@@@@
லதா-ன்னா கொடி-ன்னு அர்த்தம்டா ஷ்யாம். வெள்ளக்காரங்கூட கிரீன்-ன்னு பேரு வச்சிருக்கறான். நம்ம தமிழர்களுக்கு பச்சை-ன்னா கேவலமான பேரு. ஆனா கொடி-ன்னா அழகான கவுரமான பேரு. எங்கப்பா வீட்டில படிச்சவங்க பேசற நல்ல தமிழ்லதான்டா பேசறாரு. ஏன்னா எங்க தாய் மொழி தமிழ்டா. நீங்க ஒருவேளை வீட்டில இந்தி பேசறீங்களோ என்னவோ?
@@@@@
டேய் பச்சை, நீ சொன்ன உண்மை எம் மனசக் குத்துதடா. இன்னைக்கு வீட்டுக்குப் போயி அப்பாகிட்ட "எனக்கு ஏன் 'கருப்பையா'-ன்னும் அக்காவுக்கு எதுக்கு 'கொடி'-ன்னும் பேரு வச்சீங்க"-ன்னு கேக்கப் போறேன்..

எழுதியவர் : மலர் (1-Oct-16, 7:54 pm)
பார்வை : 237

மேலே