ஒரு பக்கக் காதல் கதை பாகம் -09

ரெகார்டிங் தியேட்டரில் :

"It's all over karthik" என தொடங்கி ..சண்டையிட்டு..மண்டியிட்டு..அழுது..கண் துடைத்து வெளிவந்தால் ஜெஸ்ஸியாக

அவன்: கண்ணுல இவ்வளவு ஈரம் இருக்கா?

அவள்: அது ஜெஸ்ஸியோட வலி என்னோடதுயில்ல

அவன்: அழுறதுதான் உங்களுக்கெல்லாம் ரொம்ப சாதாரணமாச்சே

அவள்: அதுதெரிஞ்சும் அழவெக்க எப்படித்தான் மனசுவருதோ உங்களுக்கு

அவன்: எல்லாத்துக்கும் அழுதா அதுக்கான மரியாதை இல்லாம போயிடும்

அவள்: எல்லாத்தையும் உள்ளுக்குள்ளேயே வெச்சுக்கிட்டா மனிதம் இல்லாம போயிடும்

அவன்: சாக்லேட் ல தொடங்கி பொம்மை, டிரஸ், ஐ-போன், ஸ்கூட்டி..லேந்து காதலிக்கிற பைய்யன் வரைக்கும் அழுதே சாதிக்கிறீங்க

அவள்: உங்களுக்கு இறக்கமே நாங்க அழுதாதானே எட்டி பாக்குது..அதுவும் மத்தவங்க. ..."என்னடா உன் பொண்ண/பொண்டாட்டிய/அம்மாவை/தங்கைய..அழவிடுறியே"ங்கிற சொல்லுக்கு பயந்து


அவன்: சில விஷயம் பழக்கமாயிடுச்சுனா விடறது கஷ்டமாயிடும்..அதனாலேயே அந்த விஷயம் தப்பா இருந்தாலும் சரின்னு பேசுவோம்

அவள்: அதே தான் உங்களுக்கும்..நாங்க எதுசெஞ்சாலும் தப்புன்னு தான சொல்லுவீங்க

அவன்: உங்கள அழவெக்க கூடாதுன்னு நாங்க ஒவ்வொரு காரியமா பாத்து பாத்து செஞ்சாலும்..சின்ன விஷயத்துக்கெல்லாம் அழும்போதுதான் தோணுது .."அழவும் ஆண்களை அதனால் அழவைக்கவும் பிறந்தது பெண்மை.." ....சில வளந்த குழந்தைகளுக்கு கள்ளிப்பால் இன்னும் தேவப்படுது

அவள்: தாய்ப்பால் குடிக்காம வளந்த நீங்க கள்ளிப்பால் கொடுத்துதான் கொல்ல பாப்பீங்க

அவன்: தாய்மையும் தாய்ப்பாலும் அழகு குறைகளா நீங்க பாத்தப்பவே ..கற்புக்கும் காதலுக்கும் அழிவு ஆரம்பமாயிடுச்சு

அவள்: திட்டுறதுக்கும், அடிக்கிறதுக்கும், கொல்றதுக்கும் ..உங்களோட அன்பவிட அதிகமா வர்ற எல்லாத்தையும் எங்கமேல தான திணிப்பீங்க ..புராண இதிகாசத்துலேந்து ..ப்ரொபைல் பிக் ..டிபி வரைக்கும் எங்கள பேச்சுலயும்..நடத்தைலையும்..உடையிலையும்.. நிர்வாணப்படுத்துறதுல அதீத ஆனந்தம் .இல்ல?
(என கண்கள் ஓர கண்ணீர் ததும்ப கரைய முற்பட்டால் அவள்)

அவன்: நிர்வாணப்படுத்த ஆயிரம் கௌரவர்கள் வந்தாலும் நேரத்துக்கு உதவ 1 க்ரிஷ்ணனாவது வருவான்
(என தன் கைக்குட்டை நீட்டினான்)

அவள்: நீங்க வருவீங்கன்னு நம்பி நிர்பயாவும், ஜீஷாவும்..ஸ்வாதியும் ஏமாந்து போனாங்க..உங்களுக்கு அந்த கௌரவர்கள் எவ்வளவோ பரவாயில்ல..(எனக்கூறி கைக்குட்டையில் கண்ணீர்த்துடைத்தாள்)

எழுதியவர் : வெங்கடேஷ் நாகராஜன் (4-Oct-16, 9:17 pm)
சேர்த்தது : வெங்கடேஷ்
பார்வை : 260

மேலே