காஞ்சி பெரியவர்

அறிந்தவர்களும், அறியாதவர்களும்,
மறந்தும் மறக்காத ஞானச் செல்வமே,
புலமையின் திருஉருவமாய்,
எளிமையின் மறு உருவமாய்,
கை காட்டி, குணம் காட்டி,
மணம் காட்டி, தினம் நீ அருள் கூட்டினாய்.
நிறம் மாறா உன் திறத்தாலே தரம் கூட்டினாய்.
கண்ணாறக் காணாத தெய்வத்தை,
உந்தன் எழில் உருவம் கண்டு மனம் பூரித்தோம்.

எழுதியவர் : arsm1952 (6-Oct-16, 11:55 am)
சேர்த்தது : arsm1952
Tanglish : kanji periyavar
பார்வை : 228

மேலே