நள்ளிரவு தாகம்

அனிதா கையில் புத்தகமும் தோளில் பையுமாக கையில் உள்ள கடிகாரத்தை நோட்டமிட்டபடியே ஓட்டமும் நடையுமாய் பேருந்து நிலையித்தை நோக்கி ஓடி கொண்டிருந்தாள். ஏற்கனவே நேரம் ஆகிவிட்டது கல்லூரிக்கு செல்ல என்று சற்று பதற்றத்துடன் வந்து சேர்ந்தால் பேருந்து நிலையத்திற்கு.

அவள் வந்து சேரவும் பேருந்து வரவும் சரியாக இருந்தது. அவள் பேருந்தில் ஏறி நிம்மதி மூச்சுடன் இருக்கையில் அமர்ந்தாள். அவள் கல்லூரிக்கும் சரியான நேரத்தில் வந்து சேர்ந்தாள். அனிதா பேருந்தை விட்டு இறங்கி கல்லூரிக்கு ஓடோடி வந்து தன் இருக்கையில் வந்தமர்ந்தாள். சற்று நேரத்தில் அவள் பெயருக்கு ஒரு கடிதம் வந்தது. பிரித்து படித்தால் அதில் நேற்றிரவு விடுதியில் தங்கவில்லை என்று ஒழுங்கீன நடவடிக்கை எடுக்க போவதாக குறிப்பிட்டு இருந்தது.

அந்த பெரிய மாளிகை போன்ற வீட்டில் இரத்த வெள்ளத்தில் பிணம் ஒன்று கிடக்க பார்த்து அலறினாள், அந்த வீட்டு வேலைக்காரி. அவள் எப்போதும் போல் வேலைக்கு வந்த பொழுது. நள்ளிரவில் கொலை செய்ய பட்டிருக்க வேண்டும் என்று நினைக்கிறேன் என்றான் துப்பறியும் இலாகாவில் புதிதாக இணைந்திருக்கும் சஞ்ஜய் சொன்னான். அவன் விசாரிக்க போகும் முதல் வழக்கும் இதுதான். தன்னுடைய மேலதிகாரியான தெய்வேகன் தலைமையில் அவர் ஆலோசனை படி விசாரித்தான். பல தடயங்கள் அவன் சேகரித்தான். விசாரணையில் கொலையுண்டவன் ஒரு தொழிலதிபர். சொல்லவே வேண்டாம் எதிரிகள் பலர் இருப்பர். அவன் எதிரிகளில் முதல் நபராக இருப்பவர் ஒரு பெண். அவள் வேறு யாரும் இல்லை அவள் கொலையானவனின் மனைவிதான்.

கணவன் இறந்த செய்தியை அவளிடம் தெரிய படுத்தி அவளுடைய நடவடிக்கை எப்படி இருக்கிறது என்று சோதிப்பதற்காக அவளை சந்தித்து விசாரிக்க சென்றான். கதவை தட்டினான் ஒரு நடுத்தர வயது மாது கதவை திறந்தாள். அம்மா நீங்கள் என்று குரலை யோசனையோடு நிறுத்தினான். என் பெயர் கல்பனா என்றால் அவள். அப்படியா என்று மன்னித்து விடுங்கள் அம்மா என்றான். உங்கள் கணவரை யாரோ கொலை செய்து விட்டார்கள். எதிர்முனையில் எந்தவொரு துக்கமும் இல்லாமல் "அப்படியா" என்றாள் கல்பனா.

சிறிதும் நேரம் கடத்தாமல், சஞ்சய் கல்பனாவை பார்த்து ஏன் உங்கள் கணவரை கொலை செய்தீர்கள் என்று கேட்டான். "ஹலோ" இது உங்களுக்கு தேவையில்லாத விஷயம் என்றாள் கல்பனா. எது தேவையில்லாத விஷயம் நான் சஞ்சய் துப்பறியும் இலாகா. தயவு செய்து என்னுடன் ஒத்துழைக்க வேண்டும், இல்லையேல் சந்தேகத்தின் பேரில் உங்களை கைது செய்ய வேண்டியிருக்கும் என்றான்.

கல்பனாவுக்கு தூக்கி வாரி போட்டது. இப்போது உள்ளே வரலாமா மேடம் என்றான். உண்மையை சொல்லுங்கள் என்ன நடந்தது. உங்களுக்கும் கணவருக்கும் என்ன பிரச்சணை சொல்லுங்கள், கல்பனா மேடம். சொல்றேன் சார், நானும் என் கணவரும் கல்யாணம் ஆகி பதினைந்து வருஷம் ஆச்சு. வீட்டுலே பாத்து வச்சுதான் கல்யாணம் பண்ணினோம், ஆனால் அவர் என்னை கண்டு கொள்வதில்லை. பணத்தின் மேல் இருக்கும் மோகம் கூட என் மேல் இல்லை. வியாபாரத்தில் இருக்கும் கோபதாபங்களை என் மேல் தான் காட்டுவார். நான் இவ்வளவு நாளா என் அப்பா அம்மாவுக்காக தான் எல்லாத்தையும் பொறுத்து கிட்டு இருந்தேன். ஒரு நாள் அவங்களுக்கும் நான் அனுபவிக்கும் சித்திரவதை அறிந்து என்னை கூட்டி கொண்டு வந்து விட்டார்கள். நீதிமன்றத்தில் விவாகரத்து கேஸ் நிறுவையில் உள்ளது. அதற்குள் இப்படியாகி விட்டது.

இந்த கொலையை கல்பனா செய்து இருக்க மாட்டாள், என்று விசாரித்ததில் தெரிந்தாலும். அவள் மேல் இன்னும் சந்தேகமாகத்தான் இருந்தது அவனுக்கு. லிஸ்டை எடுத்தான் இரண்டாவது பேரை பார்த்தான். ராஜா என்ற பெயர். அவர் கொலை செய்யப்பட்டவரின் முன்னாள் நண்பன் இந்நாள் பகையாளி. ராஜாவை சஞ்சய் விசாரித்த விதமே வேறு. ராஜா காலையில் "ஜாகிங்" செய்வதற்காக காரை நிறுத்தி விட்டு இறங்கிய போது அவனின் நண்பன் ஒருத்தன் "ஹாய்" ராஜா எப்படி இருக்கீங்க? "I'm fine ". அப்புறம் ராஜா சொன்ன மாதிரியே அவனை கொலை செய்து விட்டீர்களே. மெதுவா பேசுடா; யாரவது கேட்டிர போறாங்க. அவன் என்னை பண்ணாத கொடுமை இல்லை என்றான் ராஜா. இந்த கொலை விசயத்தை மாலையில் சொல்றேன் என்று அவ்விடத்தை விட்டு நகர்ந்தான்.

அவன் போன பிறகு சஞ்சய் அங்கே வந்தான். எதாவது சொன்னானா அந்த ராஜா? இல்லை சார். மாலையில் அதைப்பற்றி சொல்வதாக சொன்னான். எனகென்னோமோ ராஜாதான் இந்த கொலையை செய்திருக்கே வேண்டும் என்று தோன்றுகிறது என்றான். சரி. உங்கள் உதவிக்கு நன்றி என்றான். சரி சார். மாலையில் எதாவது என்னிடம் சொன்னால் உங்களுக்கு தெரிவிக்கிறேன் என்றான். சஞ்சய் ராஜாவுக்கு தெரியாமல் விசாரணை செய்தான்.

சஞ்சய் அந்த லிஸ்டில் உள்ள மூன்றாவது பெயரை எடுத்தான், பார்த்தான் அந்த பெயரை மட்டும் அவன் அழித்தான். அப்படி ஒரு நபரின் மேல் சந்தேகம் வந்ததின் ஆதாரத்தை இல்லாமல் செய்தான். மேலதிகாரி தெய்வீகன் அவர்களை போய் சந்தித்தான். விசாரணையில் நடந்ததை சொன்னான். கொலை செய்யப்பட்டவரின் மனைவி மற்றும் ராஜாவை மட்டும் பற்றி சொல்லிவிட்டு மூன்றாவது நபரை அவரின் பார்வைக்கு கொண்டு வரவில்லை. சார். இந்த கொலையை செய்தது ராஜாவாகத்தான் இருக்கும் என்று என் விசாரியில் தெரிகிறது. ஆதாரமும் நோக்கமும் கிடைத்து விட்டால் கைது செய்து விடலாம். இன்று மாலையில் தெரிந்து விடும் என்றான். மேலதிகாரி தெய்வீகன் வாழ்த்துக்கள் சஞ்சய் என்று கைகுலுக்கி பாராட்டினார். முதல் விசாரணையிலே இவ்வளவு விவேகமாக செயல்படுகிறீர்கள், தொடர்ந்து செயல்படுங்கள் என்றார்.

ஆனந்தத்துடன் சஞ்சய் அவர் அலுவலதிலிருந்து வெளியேறி வெளி பகுதியிலிருந்து தன் அலைபேசியை எடுத்து அந்த மூன்றாவது நபரை அழைத்தான். எதிர்முனையில் "ஹலோ" என்றதும், "ஹாய்" அனிதா என்றான். அலைபேசியில் அவளிடம் பேசிவிட்டு ராஜாவை சந்திக்க சென்றான். ராஜா அங்கே வந்து நண்பரை தேடிய பொழுது, சஞ்சய் அவர் முன்னாள் வந்து அவரை பார்த்து, சொல்லுங்க ராஜா ஏன் கொலை செய்தீங்க? நான் கொலை செய்யலே சார். அப்புறம் எந்த உண்மையை சொல்வதற்காக இப்ப இங்கே வந்திருக்கீங்க. அது வந்து சார். என்று ராஜா இழுக்க, சட்டென்று அறைந்தான் சஞ்சய். இதை சற்றும் எதிர்பாக்காத ராஜா தடுமாறி விழுந்தான். சொல்லுங்க ராஜா, ஏன் கொலை செய்திங்க?ராஜாவின் பின்புறம் இருந்து மற்றொரு குரல், "யு ஆர் அண்டர் அர்ரெஸ்ட்" என்றதும் அதிர்ச்சியாக இருவரும் யாரென்று திரும்பி பார்த்தனர். தலைமை அதிகாரி தெய்வீகன் சஞ்சயை கைது செய்ய வந்தார். அவர் சஞ்சயை பார்த்து சொல்லுங்க சஞ்சய் ஏன் அவரை கொன்னிங்கே? நானா சார்? என்றான். ஆமாம் சஞ்சய் நீங்களும் உங்கள் காதலி அனிதாவும் மிக சாமர்த்தியமாக கொலை செய்து விட்டு நாடக மாடுகிறீர்களா? நீங்களும் அனிதாவும் அலைபேசியில் பேசி கொண்டிருந்ததை கேட்டேன் சஞ்சய். உங்கள் காதலியின் பெயர் அந்த சந்தேக லிஸ்ட் லிருந்து என்னிடம் மறைத்தது முதல் எனக்கு தெரியும். . உங்கள் காதலி அனிதாவையும் நாங்கள் கைது செய்துள்ளோம், எந்த உண்மையும் மறைக்க நினைக்காதீர்கள் சொல்லுங்கள் mr சஞ்சய்.

சொல்றேன் சார். நானும் அனிதாவும் ஒரே கல்லூரியில் படித்தோம். என்னுடைய ஜூனியர். இருவரும் ஒருவருக்கொருவர் காதலித்தோம். அனிதாவின் அப்பா அவரிடம் வட்டிக்கு கடன் வாங்கிருந்தார். அதை திருப்பி செலுத்த முடியாமல் கால தாமதம் ஆனதால் பல தடவை தகாத வார்த்தையால் திட்டியும் அடித்து உதைத்தும் இருக்கிறார். இதெல்லாம் அனிதா என்னிடம் கூறி அழுது இருக்கிறாள். ஒரு வருடத்திற்கு முன் தான் அனிதாவின் அப்பா தற்கொலை செய்து கொண்டார். இந்த இழப்பை தாங்க முடியாத அனிதா அவளை எப்படியாவது பழி வாங்க என் உதவியை நாடினாள். ஒரு வருடம் திட்டத்துக்கு பின் அன்றுதான் வெற்றிகரமாக முடித்தோம் என்றான்.

அப்புறம் ஏன் கல்பனா மற்றும் ராஜாவின் மேல் பழி போட நினைத்தீர்கள்.

சார் அதை ராஜாவே சொல்வார். சொல்லுங்க ராஜா என்றான் சஞ்சய்.

அந்த நள்ளிரவு நேரத்தில் நான் தான் சார் கொலை செய்தேன்.

ஆச்சரியத்துடன் தெய்வீகன் நீங்கள் கொலை செய்திங்களா. நீங்கள் எதற்காக கொலை செய்திங்கே?

அவன் என் முன்னாள் நண்பன்தான். நானும் அவனும் கடன் கொடுத்து வட்டியை தகாத முறையிலும் அநியாய வட்டி போட்டும் வசூலித்தோம். அப்படி இருக்கையில் அவன் என் மனைவியை அடைய முற்பட்டான். அதனாலே எனக்கும் அவனுக்கும் பகை ஏற்பட்டு பிரிந்து விட்டோம். இருந்தாலும் அவனை உயிரோடு விட்டு விட்டால் ஆபத்துதான். அதனால் அன்று நள்ளிரவில் அந்த வீட்டின் சுவரில் ஏறி உள்ளே இறங்கி நாற்காலியில் உறங்கி கொண்டிருந்த அவனை நான்தான் கத்தியால் குத்தினேன்.

சற்று நேரத்தில் தெய்வீகனின் அலைபேசி அடித்தது. அவர் எடுத்து பேசினார். எதிர்முனையில் "சார் கல்பனா மேடம் தான் தான் இந்த கொலையை செய்ததாக வாக்குமூலம் கொடுத்துள்ளார். நீங்கள் உடனே வாங்க சார். என்றார் காவல் அதிகாரி.

அப்படியா இதோ உடனே வருகிறேன்; அவங்களை அங்கேயே சிறை படுத்தி வையுங்கள். ராஜா, சஞ்சய் மற்றும் அனிதாவையும் துப்பறியும் இலாகாவிற்கு கொண்டு வரப்பட்டனர்.

காவல் நிலையத்தில் கல்பனா அழுது கொண்டிருந்தாள். தெய்வீகன் முன் கல்பனா. தெய்வீகன் கேட்கும் முன்னமே அனைத்தையும் சொல்ல தொடங்கினாள். நள்ளிரவு நான் அவரை காண வந்தேன். எனக்கும் அவருக்கும் வாக்கு வாதம் முற்றி கத்தியால் அவர் நெஞ்சு பகுதியில் குத்தினேன். அவர் நாற்காலியில் சாய்ந்தார். அப்பொழுது யாரோ வீட்டு பகுதியில் குதித்து வந்தது போல் சத்தம் கேட்டது. நான் விளக்குகளை அணைத்து விட்டு ஒளிந்து கொண்டேன். அப்பொழுதுதான் சஞ்சய் மற்றும் அனிதாவும் அங்கே வந்தார்கள். ஏற்கனவே கொலையுண்ட உடலை அனிதா குத்த சொன்னால் சஞ்சயும் குத்தினான். பிறகு அந்த இடத்தை விட்டு சென்ற சில நேரத்தில் ராஜா அங்கே வந்தார். அவரும் அந்த கொடியவனின் நெஞ்சில் குத்தினார்.

தெய்வீகன் இதை எதிர்பார்க்கவில்லை. மூன்று பேர் ஒருவருக்கொருவர் அறியாமலே கொலை செய்தது. பிறகு கல்பனாவிடம் கேட்டார். ஏன் முதலில் உண்மையை மறைத்தீர்கள். முதலில் நான் மறைத்து விடலாம் என்று தான் நினைத்தேன். ஆனால் சஞ்சய் தான் தான் கொலை செய்ததாக எண்ணி கொலை பழியும் ராஜா மேல் சுமத்தி விட்டு தப்பி விட எண்ணினார். அதுவும் நிரபராதிகள் தண்டனை பெறுவது என் மனம் ஏற்று கொள்ளவில்லை. அதான் உண்மையை ஒப்பு கொண்டேன்.

தெய்வீகன் யார்தான் குற்றவாளி என குழம்பி நால்வரையும் கைது செய்தார். குற்றவாளியை நீதிமன்றம் முடிவு செய்யட்டும் என்று.

எழுதியவர் : பவநி (6-Oct-16, 5:24 pm)
Tanglish : nalliravu thaagam
பார்வை : 861

மேலே