கர்ப்பிணி

நித்தம் இரவில் நித்திரை தொலைப்பாள்
பித்தம் பெருகி பிற்பகல் விழிப்பாள்
வாய்நீர் கூட வாந்தியாய் வெளிவரும்
வாரங்கள் செல்ல சற்றே தெளிவுறும்

புளிப்புச் சுவையைப் பிடித்துத் தின்பாள்
துடிப்புத் தெரிகையிலே லயித்துக் காண்பாள்
தலைகைகால் முகம் வளர வயிறும் வளரும்
தலைவன் மடியே தலையணையாய் மாறும்

உருளாது படுத்து ஒருசாய்ந்தே உறங்குவாள்
உண்டாலும் கூட பசியால் கிறங்குவாள்
வடிவம் உருவம் அழகை இழப்பாள்-ஆனால்
வளையல் சிணுங்க கலையாய் இருப்பாள்

கர்ப்பவதி காணும் பெரும் அவதி
காண்பவர்களெல்லாம் சொல்லும் புத்திமதி
தொடர்ந்து வரும் வாந்தி- சிசுவின்
அடர்ந்த கூந்தல் சொல்லும் சேதி
உருண்டை வயிற்றில் பெண் என்பர்
ஊசி வயிற்றில் ஆண் என்பர்

அனுபவித்த மூத்தோர் சொல்லும் உண்டு
அரைகுறை மூடநம்பிக்கையும் உண்டு
அதனை அலசி உண்மை அறியும் கண்டுபிடிப்பு
அதுவே அன்னை என்கிற உன்னத பட்டபடிப்பு

வாங்கிய உணவெல்லாம் உனக்கே தருவர்
வீங்கிய வயிறைக் கண்டு வழிவிட்டு நிற்பர்

நாளும் வாரமும் கடக்கும்
நடுவயிற்றிலே மிதிக்கும்
நடக்கையிலே மூச்சு வாங்கும்
நடக்காவிட்டாலும் பாதம் வீங்கும்
குடைந்து குடைந்து இடுப்பு வலிக்கும்
குழந்தையை நினைக்க வலியும் இனிக்கும்
கடவுள் சொல்லும் நாளில் கருப்பை திறக்கும்
கண்முன் அழகாய் கண்மணி சிரிக்கும்.

எழுதியவர் : சுபாஷினி (7-Oct-16, 3:35 pm)
சேர்த்தது : neshini
Tanglish : karpini
பார்வை : 3071

மேலே