ஏன் காவல்துறை என்றால் பெண்கள் போகக் கூடாது என்கிறார்கள் காவல் துறை நம் நண்பர்கள் அல்லவா

நான் சிறு வயது முதலே காவல் துறை என்றால் மிகவும் பயப்படுவேன்.காவல் துறை நம் நண்பர்கள் தான் ஆனால் அனைவரிடமும் நட்பு பாராட்டினால் குற்றவாளிகளுக்கு பயம் வராது. சினிமாத்துறையினர் அவர்களை கெட்டவர்களாகவே காண்பித்து நம்மை அவர்களிடம் இருந்து பிரித்து வைக்கிறார்கள் என்று கூற முடியாது நிறைய படங்களில் காவல் துறையை நண்பர்களாக காட்டிஉள்ளனர் ஒரு சில படங்களை வைத்து கொண்டு சினிமாத்துறையினர் என்று மொத்தமாக கூற முடியாது
அப்படி காவல் துறையை கொடுமையானவர்களாக காட்டிய படங்களில் கூட எதிரிகளிடம் மட்டுமே அப்படி கட்டி இருப்பார்கள் குறிப்பிட்ட அந்த வேடங்களில் அவர் குடும்பத்துடன் பாசமாக இருப்பதை போன்றே கட்டி இருப்பார்கள் மக்களுக்காக எதிரிகளின் மூலம் நிறைய பாதிப்பை அடைந்து இருப்பது போன்ற படங்களும் உண்டு சினிமாவில் இருந்து வாழ்க்கைக்கு தேவையான சில நல்ல கருத்துக்களை மட்டுமே உள்வாங்கி கொண்டு தீயவற்றை விளக்க வேண்டும். நான் தற்போது நீதிமன்றத்தில் தட்டச்சராக பணி புரிகிறேன் முதலில் இந்த துறையை கண்டு பயம் எனக்குள் அதிகம் இருந்தது இப்போது நான் பயம் இல்லாமல் இருப்பதற்கு பெரும் முக்கிய கரணங்கள் காவல் துறை நண்பர்களே உண்மையில் காவல் துறையில் இருக்கும் அவர்களும் நம்மை போன்ற மனிதர்களே அவர்களுக்கும் நம்மை போன்ற குடும்ப பொறுப்புகளும் பாசமும் சகோதரத்துவமும் அனைத்தும் உண்டு. நான் பணியில் சேர்ந்து 5 மாத காலம் முடிவடைந்தது என்னை என்னுடன் பணி புரியும் காவல் துறை நண்பர்கள்" சகோ "என்றே அழைக்கிறார்கள். ஒரு ஆண் காவல் நிலையம் சென்றால் அதன் விளைவு அந்த ஆணோடு முடிந்து விடும் ஆனால் ஒரு பெண் காவல் நிலம் சென்றால் உண்மை நிலவரங்களை விட சில மக்களினால் புரளிகள் மட்டுமே அதிகரிக்கும் அவளையும் சேர்த்து அவள் ஒட்டுமொத்த குடும்பமும் பாதிப்படையும் ஒரு சில நிகழ்வுகளில் தாக்கத்தை உணர்ந்தவர்கள் நமக்கு இது போல நேர கூடாது என்ற எண்ணத்தில் காவல் நிலையம் செல்ல கூடாது என்று சொல்லுவார்கள்.
உண்மையில் காவல் துறை என்னை பொறுத்தளவில் நண்பர்களே ................

எழுதியவர் : சரண்யா (9-Oct-16, 8:37 am)
சேர்த்தது : சரண்யா
பார்வை : 123

மேலே