ஓட்டமெடுத்த கடவுள்

அம்மாவுக்காக எல்லா அடிமைகளும் கடவுளிடம் வேண்டிக்கொண்டு வரம் கேட்டார்கள்.

தீச்சட்டி, பூச்சட்டி எல்லாம் தூக்கி கடவுளை இரங்க வைத்தார்கள். கடைசியில் கடவுள் அவர்கள் முன் தோன்றி கேட்டார்,

"இவ்வளவு பேர் ஒருவருக்காக வேண்டுகிறீர்கள் என்றால் அந்த அம்மா நிச்சயம் மிக முக்கியமானவர் தான். அந்த அம்மாவுக்கு என்ன பிரச்சினை? அதை சொல்லுங்கள்.. அதற்கேற்றார்போல ஒரு வரம் தருகிறேன்" என சொன்னதும்..

முதல் அடிமை, "கடவுளே..! சின்ன காய்ச்சல்னு சொல்லி அட்மிட் பண்ணாங்க."

இரண்டாம் அடிமை, "நீர்ச்சத்து குறைபாடுனு சொன்னாங்க,"

3ஆம் அடிமை, "அப்புறம் ரொம்ப நாளா சத்தமே இல்ல,"

4ஆம் அடிமை, "திருப்பியும் வெறும் காய்ச்சல்தான்,"னு சொன்னாங்க.

5ஆம் அடிமை, "ஐசியுவிலேயே வச்சிருக்காங்க. நுரையீரல்ல ஏதோ பிரச்சினைனு வாட்ஸப்ல வந்துச்சு.

6ஆம் அடிமை, " ரொம்ப சீரியஸ்"னு வாட்சப்ல வந்துச்சு

7ஆம் அடிமை, "காய்ச்சல் சரி ஆயிருச்சு வீட்டுக்கு வந்திருவாங்க,"னு அப்போல்லோ காரன் சொன்னான்.

8ஆம் அடிமை, " ஆனா அடுத்தநாளு இங்கிலாந்து, அமெரிக்கால இருந்து யாரோ டாக்டர் வந்தாரு,"

9ஆம், "வெறும் சுகர் மட்டும் தான் அதிகமா இருக்காம்,"

10ஆம் அடிமை, "இன்னைக்கு ஐசியுல இருந்து சாதா ரூமுக்கு மாத்திட்டாங்கனு விகடன் சொன்னான்," என்று வதந்திகளை எல்லாம் சொல்லிக்கொண்டே போனார்கள்.

கடவுள் சொன்னார், "தம்பிகளா உங்களுக்கு அந்த அம்மா மிக முக்கியமானவராக இருக்கலாம். ஆனால் அந்த அம்மாவுக்கோ, அவரை சார்ந்தவர்களுக்கோ நீங்கள் முக்கியமானவராக தெரியவில்லை. ஒருவேளை அவர் உங்களை எல்லாம் மதிப்பவராக இருந்தால் உங்கள் பழைய தலைவர் எம்.ஜி.ஆர் செய்ததை போல உடல்நிலையை பற்றிய சரியான தகவல்களையும், புகைப்படங்களையும் அவ்வப்போது கொடுத்து உங்களை வதந்திகளில் இருந்து காப்பாற்றியிருப்பார். பதற்றமடைய விட்டிருக்கமாட்டார். என்னிடம் வரம் வேண்டி நிற்கும் உங்களுக்கே என்ன பிரச்சினை என தெரியாதபோது நான் எப்படி வரமளிக்க முடியும்? யோசித்துப்பாருங்கள்," என்றார்.

அடிமைகள் யோசித்தார்கள். தங்களுக்குள் பேசிக்கொண்டார்கள். தீடிரென்று அனைத்து அடிமைகளும் ஒரே குரலில் கத்தினார்கள்.

"டேய் இவன் திமுககாரன்டா... விடாதீங்க... அடித்து கொல்லுங்க...."

கடவுள் தலைதெறிக்க ஓட்டமெடுத்தார். 🏃🏃🏃🏃

குறிப்பு.: படித்ததில் பிடித்ததை பதித்தேன்.

எழுதியவர் : முகநூல் (9-Oct-16, 9:08 am)
சேர்த்தது : குமரிப்பையன்
பார்வை : 497

மேலே