திருப்பூர் தங்க விநாயகர் - நேரிசை வெண்பாக்கள்

சாந்தமாய் உட்கார்ந்தே சங்கடங்கள் எப்பொழுதும்
பாந்தமாய்த் தீர்த்தேதான் வைக்கின்ற - சாந்தமூர்த்தி
தங்க விநாயகனைத் தங்கு தடையின்றி
பங்கமின்றி பாடித் துதி! 1

தங்கநிற மேனியனை தங்க விநாயகனை
எங்கும் நிறைஎங்கள் ஏந்தலை - பொங்கும்
பரவசமாய்ப் பாடிப் புகழ்ந்தேத்த அப்பன்
அரசனவன் காப்பான் கனிந்து! 2

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (9-Oct-16, 11:52 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 44

மேலே