தல விநாயகர் - நேரிசை வெண்பாக்கள்

‘தல’என்ற நல்வினாய கன்பார்வை நன்றே
சிலபொழுது நாம்பெற்றால் பாவம் - பலகாதம்
நம்மைவிட்(டு) ஓடிவிடும்; நல்லவன் வல்லவனாம்
தும்பிக்கைத் தேவன் துணை! 1

நம்’தல’ நல்வினாய கன்பாதம் நன்றியோடு
எம்மக்கள் தொட்டு வணங்கிடவே - இம்மையில்
மட்டுமின்றி ஏழ்பிறப்பும் மட்டற்ற இன்பமே
கொட்டிக் கொடுப்பான் இனிது! 2

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (9-Oct-16, 8:16 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 51

மேலே