பெண்ணிய அருள்

பெண்ணிய அருள் நமக்கு
நல்லவழி காட்ட,
நாம் விரும்பும் திரை
அழகிகள் போல்
காண்பவர் கண்களுக்கு விருந்தளிக்கும் ஆடைகளை கச்சிதமாய் அணிந்து
மேலைநாட்டு பெண்களும்
வியந்து நம்மைப் பாராட்டும்
அழகிகளாய்த் தோன்றி
பேரானந்தம் கொள்வோம்;
ஆண்டுக்கு ஒருமுறையாவது
'பெருசு'களை மகிழ்விக்க
வெறுப்பை வெளிக்காட்டாமல்
புடவை அணிந்து
போலிப் புன்னகையை
உதிர்க்கலாமே!
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
ஒரு நாள் கோடை வெயிலில் மக்கள் நடமாட்டமுள்ள சாலையில் ஒலிபெருக்கி ஒன்றை ரிஷாவில் கட்டி தரையில் நின்றுகொண்டு பெண்ணுரிமை பற்றிப் பேசிக் கொண்டிருந்த ஒரு இளம்பெண் “ பெண்கள் அவர்கள் விரும்பு எந்த உடையை வேண்டுமானாலும் உடுத்துவர்கள். அதைக் குறைசொல்ல யாருக்கும் உரிமை இல்லை” என்று முழங்கினார். அதே போல தொலைக்காட்சியிலும் பிரபலமான பெண்களும் அடிக்கடி சொல்கிறார்கள். இளம் பெண்களில் சிலர் கவர்ச்சி நடிகைகளைப் போல அநாகரிகமாக உடை அணிந்து பொது இடங்களிலும் நடமாடுகிறார்கள். திரைக் காட்சிகளிலும் விளம்பரங்களிலும் பெண்களை அவர்கள் பெருமையைக் குலைக்கும் வகையில் ஆடைகளை அணிவித்துக் காட்டுகிறார்கள். இதனால் கெடும் இளஞர்கள் முதல் நடுத்தர வயதுள்ளவர்கள் வரை பாலியல் வன்கொடுமைகளில் ஈடுபடுகிறார்கள். சுடிதார் அணிபவர்களில் பலர் துப்பட்டாவை தோளில் தொங்கும் துண்டு போலப் பயன்படுத்துகிறார்கள். அல்லது துப்பட்டாவைத் தவிர்த்துவிடுகிறார்கள். சிலர் நைட்டியை அணிந்து கொண்டு பக்கத்துத் தெருவில் உள்ள கடைகளுக்கும் வருகிறார்கள். அருகில் உள்ள பள்ளிகளுக்கும் நைட்டியை அணிந்த பெண்கள் குழந்தைகளை அழைத்துக்கொண்டு வருகிறார்கள். சில மாணவிகள் சீருடையுடன் பொது இடங்களில் பல பையன்களிடம் அநாகரிகமாக நடந்து கொளவதையும் பலமுறை பார்த்த எரிச்சலே இந்த படைப்பின் வெளிப்பாடு. மேலே உள்ள படம் குமரிப்பையன் அவர்கள் தன் படைப்பு ஒன்றுக்கு பதிவு செய்திருந்தது. ****** இது நீக்கப்படவேண்டியதெனில் தெரிவித்தால் நீக்கிவிடுகிறேன்.

எழுதியவர் : மலர் (10-Oct-16, 3:34 pm)
Tanglish : pennea arul
பார்வை : 99

மேலே