சென்னை நான்முக விநாயகர் - நேரிசை வெண்பாக்கள்

சிங்கார நான்முக நல்விநாய கன்தாளை
பங்கமின்றிப் பாடிப் பணிவோர்க்கு - பொங்கிப்
பிரவகிக்கும் நல்வாழ்வு; நாதனைப் போற்றிப்
பரவசமாய்ப் பாடிப் பணி! 1

சிங்கார நான்முக நல்விநாய கன்தாளை,
சிங்கத்தின் மீது பவனிவரும் - எங்களின்
போதனைப் போற்றிப் பரவசமாய்ப் பாடிவர
ஏதமில்லை என்றும் உனக்கு! 2

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (10-Oct-16, 8:15 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 59

மேலே