புரட்சிப் பூவே

ஜாதிமல்லியே ...ஜாதிமல்லியே ...
காதலுக்குள் ஜாதியில்லையென்று,
சாதகமாய் ஜாதகம் படை!

ஜாதிமல்லியே ...ஜாதிமல்லியே ...
வரதட்சணை தொற்றுக்கிருமி,
தொட்டுத் தொடர்ந்திராமல்,
புரட்சி கைகளால் கொன்று விடு!

ஜாதிமல்லியே ...ஜாதிமல்லியே ...
ஏழைச் சிறுமிக்கு ஏட்டுக்கல்வி,
இயல்பாய் சென்றிட இயக்கம் உருவாக்கிடு !

ஜாதிமல்லியே ...ஜாதிமல்லியே ...
மாதா, பிதா,குரு,தெய்வம் ,
என்ற வெற்று ஜம்பம் விட்டொழித்து ,
முதியோரில்லங்கள் அகழிகையால் மூடிவிடு!

ஜாதிமல்லியே ...ஜாதிமல்லியே ...,
பிள்ளைகளின் விரல் வேலிக்குள்,
தாய்-தந்தை பூக்களாய் செழித்து மகிழ,
அனுபவப்புத்தகத்தின் பதிப்பொன்றை ,
இளம் தலைமுறைக்கு பரிசு அழித்துவிட்டுப் போ!

ஜாதிமல்லியே ...ஜாதிமல்லியே ...,
இன்னும் நிறைய நீ நிகழ்த்த வேண்டும்,
விடியல் மிதித்து விரைந்து வா...நம் தமிழ்ச் சோலைக்கு !!
கண்ணீர் தொலைத்து வீட்டுக் கண்மணிப்பூக்க காத்திருக்கிறேன் நண்பா...

ஜாதிமல்லியே ...ஜாதிமல்லியே ...,

எழுதியவர் : பாரதி பறவை (15-Oct-16, 4:28 pm)
பார்வை : 185

மேலே