இயற்கையில் உருமறைப்பு

ஏமாற்று வித்தை
போரில் மறைந்திருந்து தாக்குவது ஒரு வகை யுக்தியாகும். இம்முறை புரட்சியாளர்களிடையே பிரபல்யமானது. கெரில்லா போர் முறையில் தம்மை இலை குழைகளால் மூடியவண்ணம் முகத்துக்கு பச்சை கறுப்பு அரிதாரம் பூசி போரிடும் முறை பல யுத்தங்களில் கடைப்பிடிக்கப்டுவதை நாம் அறிந்ததே. இந்த யுக்தி காட்டுக்கள் கெரில்லா யுத்தம் புரியும் போது அவர்கள் இலை குழைகளுக் கிடையே மறைந்து நின்று தாக்குவதுக்கு உதவுகிறது. இதனை ஆங்கிலத்தில் ஊயஅழரகடயபiபெ என்பர். பிரென்சு மொழிச் சொல்லில் இருந்து இந்த ஆங்கிலச் சொல் பிறந்தது. இதன் பொருள் உண்மைத் தோற்றத்தை மூடி மறைப்பது அல்லது பார்ப்பவர்களுக்கு வித்தியாசமான தோற்றத்தைக் கொடுப்பது என்பதாகும். 1800ம் ஆண்டு அமெரிக்க ஓவியரான அபொட் தாயர் என்பவர் இயற்கை மிருகங்களின் உடம்பில் உள்ள வர்ணங்கள் உரு மறைப்புக்கு உதவுகிறது என்பதைச் சுட்டிக்காட்டினார். குறிப்பாக திருக்கை மற்றும் மீன் வகைகளில் இதை அவதானிக்கலாம். நீருள் மேலிருந்து பார்க்கும்போது கீழ்ப்பகுதி கருiமாகவும் மேற் பகுதி ஒளிமயமாக வெள்ளையாகவும் இருப்பதால் இவை தப்பிக்க ஏதுவாகிறது. அவ்வாறே மிருகங்களின் மேற் பகுதியான முதுகுப் பகுதி கருமையாகவும், படிப்படியாக நிறம் மாறி அடிவயிற்றில் வெள்ளை நிறத் தோற்றம் உள்ளமை என்பதாம். இந்த முக்கிய நிறமாற்றத்தின் பண்பு மிருகங்களின் உரு மறைப்புக்கு உதவுகிறது. கருமையில் இருந்து வெண்மைக்கு படிப்படியாக நிறம் மாறும் போது மிருகத்தை அவதானிக்க கடினமாகிறது.; 1915ல் பிரான்ஸ் தேசத்து இராணுவத்தினால் உரு மாற்றம் கொண்ட வீரர்களை அடங்கிய பகுதி ஒன்று அமைக்கப்பட்டது. இராணுவம் ஓவியர்களை வரவழைத்து முதலாம் உலக யுத்தத்தின் போது உரு மாற்றத்துக்கு தேவையான ஆலோசனைகளைப் பெற்றது.

இராமாயணத்தில் உரு மறைப்பு
இராமாயணத்தில் கூட உரு மறைப்பு இடம் பெற்றிருக்கிறது. மாரீசன் என்ற அரக்கன் இராவணணின் வற்புறுத்தலின் பெயரில் பொன் நிற மான் உருவம் எடுத்து மாயமானாக இராமரும் சீதையும் இலக்கமணனும் வாழ்;ந்த பஞ்சவடி என்ற காட்டுப் பகுதியில் உள்ள மாடத்துக்கு சென்றான். அதன் நோக்கம், உரு மாற்றத்தின் மூலம் சீதையை தன் மேல் ஆசை கொள்ளுமபடி செய்து இராமனையும் இலக்குமனையும் அவளிடம் இருந்து பிரித்து இராவணன் சீதையைக் கடத்த உதவுவதே. மாய மானின் தோற்றத்தைக் கண்டு அவள் மயங்கினாள். மானின் குளம்புகள் நீல மாணிக்கக்கல்லின் நிறத்திலும், இரு கன்னங்களில் ஒன்று செந்தாமரை நிறம் போன்றும் மறு கன்னம் நிலத்தாமரை நிறம் போன்றும் முகத்தின் சில பகுதிகள் வெள்ளைநிறமும், அதன் கழுத்தும் வயிறும் நீல மாணிக்கக் கல் நிறமாகத் தோற்றமளித்தது என்கிறது இராமாயணம். அரக்கர்களின் தோற்றத்தில் இருந்து முற்றிலும் மாறுபட்ட தோற்றமது. பூ பறிக்க வந்த சீதை அந்த மானின் தோற்றததைக் கண்டு மயங்கினாள். மான்pன் பல மாணிக்ககற்கள் பதிக்கப்பட்ட தோற்றத்தைக் கண்டவுடன் சீதை அதிசயப் பட்டாள். அந்த அதிசய மானை பிடித்துத் தரும்படி கணவனிடம் வேண்டினாள். மனைவியின் ஆசையைப் பூர்த்தி செய்யும் பொருட்டு மானை பிடிக்க இராமன் சென்றான். மான் விலகி ஓடியது. அதைத் தொடர்ந்து வெகு தூரம் இராமன் ஓடினான். இராமன் அதிக நேரம் சென்றும் வராததால் அவனைத் தேடிச்செல்ல இலக்குமணனை சீதை அனுப்பினாள். அதுவே சீதையை இராவணணன் கடத்திச் செல்ல உதவியது என்கிறது இராமாயணம். இதில் வரும் உரு மாற்றம் இன்னொருவருக்கு உதவுகிறது. இந்த முறை தற்போது யுத்தக்களங்களில் பாவிக்கப் படுகிறது.

வரிக் குதிரை வரிகளின் வித்தை
வரிக் குதிரையின் உடம்பில் உள்ள கறுப்பும் வெள்ளையும் கலந்த வரிகள் அதனை கூட்டமாக நிற்கும் போதோ அல்லது தனித்து நிற்கும் போதோ சிங்கம், புலி பொன்ற எதிரிகளின் தாக்குதலில் இருந்து பாதுகாக்கிறது. வரிக் குதிரைகள் அருகருகே கூட்டமக நின்று புல் மேயும் பொது உரு மறைவினினால் பாதுகாப்பு அதிகரிக்கிறது. அவற்றில் உள்ள வரிகள் ஒரு பொய்த் தோற்றத்தை தாக்கவரும் எதிரிகளுக்கு கொடுக்கிறது. பார்க்கும் போது வரிகள்; ஒன்றோடு ஒன்று பிணையும் தோற்றத்தைக் கொடுப்பதால் எதிரியின் மனதில் குழப்பத்தை உருவாக்கி குதிரைகளை தனித்தனியாக பிரித்து அடையாளம் காணமுடியாதவாறு செய்கிறது. குதிரைகள் எல்லாம் அடிக்கடி திசை மாறி ஓடுவதினால் வரிகளின் அசைவு கொடுக்கும் தோற்றம் மேலும் குழப்பத்தை உருவாக்குகிறது. அதனால் சிங்கத்திற்கு ஒரு தனி வரிக்குதிரையை தேர்ந்தெடுத்து தாக்கிக் கொல்வது கடினமாகிறது. மனிதனின் விரல் அடையாளத்தைப் போல் வரிக்குதிரையின் உடம்பில் உள்ள வரிகள் குதிரைக்கு குதிரை வித்தியாசப்படும். இவ்வரிகளை வைத்தே தனித்தனியாக குதிரைகளை அடையாளம் காணமுடிகிறது. தாய் வரிக்குதிரை இந்த வரிகளை வைத்து தன் குட்டிகளை அடையாளம் கண்டு, கூடி வாழ்கிறது.
புலிகளின் மேல் உள்ள வரிகள் கூட ஒரு விதத்தில் அடர்நத புற்பற்றைக்குள் மறைந்திருந்து தாக்க உதவுகிறது.

மீன்களின் உருமாற்றம்
கடலில் வாழும் மீன்கள் செய்யும் உரு மறைப்பு அதிசயமானது. மீன்கள் மறைந்திருந்து வேட்டையாடவும், ,எதிரிகளின் தாக்குதலில் இருந்து தம்மை பாதுகாத்துக் கொள்ளவும் இந்த உரு மாற்றம் பயன்பெறுகிறது. கல்மீன்(கலவாய்) என்ற ஒரு வகை மீன் கடலின் அடித்தளத்தில் கற்பாறையின் தோற்றத்தில் அசையாது தன் இரை தன்னருகே வரும் வரை நிற்கும். இரை அருகே வந்தவுடன் கண்சிமிட்டும் நேரத்தில் லபக் என்று வாயைத் திறந்து பிடித்துண்ணும். சில மீன்கள் கடல் மண்ணுக்குள் புதைத்து இருக்கும். சமயம் வரும் போது இரையைப் பிடிக்கும்.

மூன்று வால் மீனின் மூளைத்திறன்
மூன்று வால் ( Triple Tail) என்ற ஒரு வகை மீன் உருமாற்றம் செய்யும் தனிச் சிறப்பான பண்புடையது. இந்த மீன், தான் இணைந்துள்ள சூழ்நிலைக்கேற்ப தன் உடம்பின் நிறத்தை உடனடியாக மாற்ற வல்லது. கடும் மஞ்சள் நிறத்திலிருந்து கருமை, வெள்ளி நிறம், பச்சை, அல்லது வெள்ளை நிறம் போன்ற பல வர்ணங்களைப் பெறக்கூடியது. அதுவுமன்றி இலைத்தொகுதி, குப்பை ஆகியவற்றைப்போன்ற தோற்றத்தையும் பெறக் கூடிய திறமை அதுக்குண்டு. தனக்கு அருகே நீந்தும் மீனைப் போன்று தானும் உருமாறும் தன்மை பெற்றது.

ஆராச்சியின் போது விஞ்ஞானிகள் மூன்று வால் மீன் ஒன்றையும் பறக்குடா என்ற சாதி மீனையும் தண்ணீர் நிரம்பிய போத்தில் ஒன்றினுள் விட்டனர். பறக்குடா என்ற சாதி மீன் மற்றைய மீன்களை தாக்கி உடனே இரையாக்கும் குணம் படைத்தது. போத்திலுக்குள் மாவிலைகளும் மிதக்கவிடப்பட்டது. மூன்று வால் மீன் தன் நிறத்தை மாவிலையின் நிறத்துக்கு மாற்றி பறக்குடா மீனின் தாக்குதலில் இருந்து தப்பித்துக் கொண்டது. ஒரு கடுகளவு மூளையைக் கொண்ட மூன்று வால் மீன் எவ்வாறு தனது நிறத்தை சூழ்நிலைக்கு ஏற்றவாறு 6 நிறங்களாக மாற்றுகிறது என்பது விஞ்ஞானிகளுக்கு புரியாத புதிராகயிருக்கிறது.

எண்காலியின் மை நடனம்.
எண்காலி எனப்படும் ஒக்டொபஸ் ( Octapus); கடல் வாழ் ஜந்து. மூன்று வால் மீனைப் போன்று மாநிறம், வெள்ளை, பச்சை, நீல நிறங்களாக தான் இருக்கும் சுற்றாடலுக்கு எற்றவாறு தன் நிறத்தை மாற்றும் தன்மை படைத்தது. சில சமயம் பல வர்ணங்களாக ஓரெ நேரம் தோற்றமளிக்கும். தன் உருவத்தை விதவிதமாக மாற்றிக் கொள்ளும். தன்னை எதிரிகள் தாக்கவரும் போது பயம் காரணமாக ஒரு வகை கருப்பு நிறமுள்ள மையை வெளியேற்றும். அதைச்சுற்றியுள்ள நீர் உடனே கருமை நிறமாகி எதிரிக்கு தன் இரையான எண்காலியை பார்க்க முடியாதவாறு செய்து விடும். மையினால் தோன்றும் மேகத்தைப் போன்ற தோற்றம் எண்காலியின் உருவத்தைப்போன்று ஒரு மாயைத் தோற்றத்தைக் கொடுக்கும். அதானல் தாக்க வரும் ஜந்து எமாற்றப்படுகிறது. அதுவுமன்றி வேட்டையாட வரும் ஜந்து அந்த மையினால் நுகரும் சக்தியை இழக்கிறது. . எண்காலியின் உடம்பின் தோலானது வரிகள், புள்ளிகள், திண்மமாக மாறக்கூடியது. வாய்க்கருகே இரு பெரிய பிதுங்கிய விழிகளுண்டு.

நண்டுச் சிலந்தி (Crab Spider)
நண்டு சிலந்தியானது தான் உட்காரும் மலர்களின் நறத்திற்கேற்ப தனது மேலாடையை மாற்றிக் கொள்ளும். உதாரணத்துக்கு வெள்ளை நிற மலர் மேல் அது அமரும் போது வெள்ளையாக மாறும் அதே போன்று மஞ்சள் பூவின் மீது அமரும் போது அந்நிறத்தைப் பெறும். நண்டைப்போல் அசைவதினால் அப்யெரைச் சிலந்தி பெற்றது. தான் இருக்கும் சுற்றாடலுக்கு ஏற்றவாறு தனது நிறத்தை மாற்றுவதினால் பறவைகளின் பார்வையில் பட்டு இரையாகமல் தப்பித்துக் கொள்ளும். தான் இரை தேடும் போது இலைக்கு கீழ் அல்லது மலரின் இதழ்களுக்கு கீழ் அந்நிறத்துடன் மறைந்திருந்து தாக்கும்.

முதலைக் கண்ணீர் (Crocodile Tears)
நீலிக் கண்ணீர் வடிப்பதை முதலைக் கண்ணீர் வடிக்காதே என்று சொல்வதுண்டு. முதலை தன் இரையைப் பிடிக்கமுன் கண்ணீர் வடிக்குமாம் என முற்காலத்தில் ஆங்கிலேயா,; பிரென்ச் எழுத்தாளர்களிடையே ஒரு நம்பிக்கையிருந்தது. அந்த நம்பிக்கையை வைத்தே “முதலைக் கண்ணீர்” என்ற சொற்பதம் உருவாகியது. ஆனால் உண்மையில் முதலை, கண்ணீர் விடுவதில்லை. தண்ணீருக்கள் பெரும்பாலும் தன் நேரத்தைக் கழிப்பதால் அந்த அவசியம் அதற்கில்லை. தண்ணீருக்கு வெளியே வரும் சமயத்தில் கண்களை நனைக்க ஒரு வித தண்ணீர் பசையொன்றை வெளியேற்றுகிறது. தண்ணீரில் நீந்தும் போது அதன் கண்கள், மூக்கின் துவாரங்கள், காதுகள் நீருக்கு வெளியே இருக்கும். ஒவ்வொரு உணவுக்கு இடையேயும் பல காலம் காத்திருக்கக் கூடியது. சில சமயம் சேற்றில் தன் உடம்பை நனைத்து அந்நிறத்துடன் இரை தன்னைத் தேடி வருமட்டும் அமைதியாக ஆடாது அசையாது படுத்திருக்கும். தண்ணீருக்குள் ஒரு மணித்தியாலத்துக்கு மேல் இருக்கக் கூடியது முதலை. அதன் ஆயுள் ஒரு நூற்றண்டுக்கு மேற்பட்டது. தண்ணீரில் சிறு சல சலப்பு ஏற்பட்டால் கூட அதை உணர்ந்து அசைந்து இரையை தாவிப் பிடிக்க வல்லது.

முள்ளுப் பூச்சி
முள்ளுப் பூச்சிக்கும் இலைகள் காய்ந்த மரத்தடிகளுக்கும் வித்தியாசம் கண்டுபிடிப்பது கடினம். பலர் முள்ளுப் பூச்சியைப் பார்த்து தடி என் நினைத்ததுண்டு. நிறம், அமைப்பு எல்லாம் தடியைப் போன்றது. அதை அறியாது அதன் மேல் அமர்ந்த சில சிறு புச்சிகள் அதற்கு இரையாவதுண்டு. தன்னையும் பறவைகளின் பார்வையிலிருந்து ஏமாற்றி அது காப்பாற்றிக் கொள்ளும். முள்ளுப் போன்ற அதன் உருவ அமைப்பினால் பறவைகள் அதை உணவாக உண்ணத் தயங்கும்.

பச்சோந்தி(chamelion)
பச்சோந்தி போல் நேரத்துக்கு நேரம் உன்னை மாற்றி வாழாதே என்று பேசும் போது பாவிக்கப்படும் உவமைச் சொல் “பச்சோந்தி”. பச்சோந்தி ஓணான் வர்க்கத்தைச் சேர்ந்தது. மால்டீஸ் தீவில் இவற்றை அதிகமாக காணலாம். உணவைத் தேடும் போது தன் உடலை சூழ்நிலைக்கு ஏற்றவாறு மாற்றக் கூடியது. மரத்தில் அதன் பச்சை நிறத்தோடு ஒட்டிக் கொண்டு தன் இரைக்காக காத்திருக்கும.; பச்சோந்தி கீழே இறங்கி வருவது மிக அரிது. அதன் அசைவுகள் மிக மெதுவானது, ஆனால் சில சமயம் விரைவாக ஓடினாலும் தப்பித்துக் கொள்ளும் அளவுக்கு அதன் வேகம் இருக்காது. பச்சோந்தியின் தோலானது கறுப்பு, சிகப்பு, மஞ்சள் நிறக் கலங்களைக் கொண்டது. பார்க்க பயங்கரத் தோற்றததைக் கொண்ட படியால் அதன் அருகே செல்ல மக்கள் சற்று அஞ்சுவார்கள். இலைகளில் மறைவாக இருக்கும் போது பச்சை நிறமும். நிலத்தில் இருக்கும் போது மண்ணின் நிறத்தையும் கொண்டிருக்கும். பச்சை நிறத்தில் அது சாந்தமாக தோற்றமளிக்கும்.. கோபம் வரும் சமயம் அதன் உடல் நிறம் மாறி வாயை பிளந்தபடி ஓசையைக் கிளப்பும். சிலர் நினைப்பார்கள் பச்சோந்தி நிறம் மாறுவது இரையைப் பிடிக்கவோ அல்லது எதிரிகளிடம் இருந்து தப்புவதற்காகவோ என்று. ஆனால் உண்மையில் சூரிய ஒளி அதன் தோலில் உள்ள கலங்களில் பட்டுத் தெறித்து நரம்புகளைப் பாதிப்பதினால் நிறத்தை கொடுக்கிறது. இந்த நிறக் கலங்கள் விரிவடைந்து சுருங்கக் கூடியவை. அதனால் நிற மாற்றம் அடைகிறது.

தொட்டாச் சிணுங்கி
தாவரங்கள் கூட சில உரு மாற்றத்தினால் இரையைத் தேடிக் கொள்கிறது;. தொட்டாச் சிணுங்கியைத் தொட்டவுடன் அது சிறு பூச்சிகளை இரையாகக் தன்னை மூடிக்கொள்கிறது. ;றே நெபந்தஸ் என்ற செடியானது ஒரு தொப்பியைக் கொண்ட விழு விழுப்பான குழாயைக் கொண்டது. பூச்சிகள் அந்த குழாயில் உள்ள பசையின் மணத்தால் கவரப்பட்டு அதன் விளிம்பில் போய் அமர்ந்தவுடன் குழாயின் மூடி மூடிவிடும். பூச்சியானது அத்தாவரத்துக்கு இரையாகிறது. இது போன்று தம் கவர்ச்சியையும் மணத்தையும் காட்டி ஏமாற்றி இரையைத் தேடும் தாவரங்கள் பலவுண்டு. அதே போன்று தான் விலை மாதர்களும். நாம் தூண்டிலில் சிறு மீன் போட்டு பெரிய மீன் பிடிப்பது போலத்தான் மரங்களும் செயலாற்றுகின்றன.

ஊனுண்ணித் தாவரங்கள்.
(Utricularia) என்ற தாவரம் தண்ணீருக்குக்கீழ் கண்ணியை உருவாக்கி நுளம்பு, ஈ, மீன் குஞ்சுகள் , மற்றும் தண்ணீருக்குக்கீழ் வாழும் பூச்சிகளை இரையாக்கிக் கொள்கிறது. ஊனுண்ணி தாவரங்கள் சத்தில்லாத மண்ணிலும் வளரக் கூடியவை. அவை பெரும்பாலும் உயிரினங்களை இரையாக்கி வாழ்வதே இதற்குக் காரணமாகும். நான்கு விதமான கண்ணி முறைகளைத் தாவரங்கள் பாவிக்கின்றன. மூடும் கண்ணி , கதவைப் போன்று இயக்கும் கண்ணி , வீழ்த்துப் பொறி, ஈ ஒட்டும் பசைக் கண்ணி ஆகியன. வீழ்த்தும் பொறியை யானை, புலி போன்ற மிருகங்களைப் பிடிக்க மனிதர்கள் பாவிப்பார்கள். எலிப் பொறியின் இயக்கத்தையும் தாவரங்களின் கண்ணி முறையில் இருந்து கண்டுபிடித்தான். மனிதர்;களையும் பிடித்துண்ணும் செடிகள் இல்லையென்று கூற முடியாது. பெரிய வால்போன்ற தண்டினால் பெரிய மிருகங்களையும் மனிதர்;களையும் கூட சுற்றிப் பிடித்து இவை இரையாக்குகின்றன.

முடிவுரை
மனிதன் பூச்சிகளையும் , நீரில் வாழும் உயினங்களையும் , பறவைகளையும். மிருகங்களையும் தாவரங்களையும் பாhத்து செயற்கையான உரு மாற்றம் செய்து தனது எதிரியைத் தாக்கவும் அவனிடம் இருந்து தன்னைப் பாதுகாத்து கொள்ளவும் வழிவகைகள் வகுக்கிறான். ஆனால் அதே சமயம் அந்த முறைகளைப் பயன் படுத்தி, இயற்கையின் சிருஷ்டிப்புகளையும் அழிக்கிறான். தவிர உலகம் என்ற நாடக மேடையில் வேஷமெனும் உருமாற்றத்தையும் போடுகிறான். பொதுவாக சிவாஜி போன்ற மேடை நடிகர்கள் தம் வாழ்வில் நடிப்பதில்லை. ஆனால் மேடையில் திறமையாக நடிக்க முடியாதவர்கள் வாழ்வில் உருமாறி நடித்து விடுகிறார்கள். ஆக மொத்தத்தில் உருமாற்றம் என்பது தாவர விலங்கு வகைக்குள் அடங்கும் அனைத்து ஜீவராசிகளிற்கும் வேண்டிய ஒரு அம்சமாகிவிட்டது. அது இயற்கையானதா செயற்கையானதா என்பதைவிட அதன் நோக்கம் சமூக நலன்; நிறைந்ததாக இருப்பது வரவேற்கத்தக்கது.

*******

எழுதியவர் : பொன் குலேந்திரன் - கனடா (17-Oct-16, 4:19 am)
பார்வை : 2233

மேலே