ஜன்னல்

“மிசிசாகா டிரிலியம் “ அரச வைத்தியசாலையானது, இருதையம் , சிறு நீரகம், கண்;, புற்று நோய் சம்பந்தபட்ட நோய்கள் ஆகியவற்றிற்கான மருத்துவத்துக்கு பிரசித்தம் பெற்றது. வட அமெரிக்காவிலும், ஆசியாவிலும் உள்ள டீரிலியம் மலரானது மூன்று இலைகளையும், இதழ்களையும் சமச்சீராகக் கொண்டது. இம்மலரேயே இவ்வைத்தியசாலை சின்னமாகக் கொண்டது. சென்னையில் உள்ள அப்பலோ வைத்தி;யசாலையி;ன் பெயர் தேகநலத்தைப் பாதுகாக்கும் கிரேக்க தெய்வமான அப்பலோவின் பெயரைக்; கொண்டது. அதே போல் கனடா ஒன்றாரியோ மாகாணத்தில் உள்ள மிசிசாகா நகரில், டிரிலியம் வைத்தியசாலைக்கு அம்மலரை சின்னமாக தெரிந்தெடுத்தற்கு காரணமும் உண்டு. மூன்று இதழ்களில் ஒவ்வொன்றும் மனித உணர்வு (Consciousness), உடலோடு இணைவு (Embodiment), பரஸ்பர உறவு (Mutuality) ஆகியவற்றைப் பிரதிபலிக்கும்.

கனடாவில் ஒன்றாரியோ மாகாணத்தில் ஒன்றாறியோ தேகநல காப்புறுதி திட்டத்தின்; கீழ்; வைத்தியம் பெறுவது இலவசம். அதிக செலவாகும்; இருதைய சத்திர சிகிச்சை, சிறு நீரக மாற்றம் , சிறு நீரக டயாலிசிஸ், எம் ஆர் அய் (MRI) போன்றமருத்துவ பரிசோதனைகளின்; செலவும் ஓகிப் (OHIP) என அழைக்கப்படும் காப்புறுதி அட்டையை வைத்திருப்பவர்களுக்கு வைத்திய சேவையும, பல மருந்துகளும் இலவசம். அமெரிக்கா போன்ற நாட்டோடு ஒப்பிட்டுப்;; பார்க்கும் போது பணவசதியில்லாத சாதாரண கனேடிய குடிமகனுக்கு ஒன்றாரியோ மாகாணத்தில் வைத்தியத்துக் தேவையான செலவு அனேகமாக இல்லை என்றே சொல்ல வேண்டும். அதுவும் முதியோர்கள் என்றால் பல சலுகைகள் உண்டு. இதை கனடாவுக்கு புலம் பெயர்ந்தவர்கள் மனதில் கொள்வதில்லை.

******

டிரிலியம் ஆஸ்பத்திரியில், நாலாவது மாடியில் உள்ள வார்டில், 403 ஆம் அறையில் இருந்த இரு நோயாளிகளும்; கனேடியப் பிரஜைகள். அதில் ஒலிவர் என்பவர் இருதைய சத்திர சிகிச்சை செய்தவர்;. நுரையீரலில் நீர். இருப்பதால் அவருக்கு மூச்சு விடுவது சிரமமாக இருந்தது. நேராக நீட்டி நிமிர்ந்து படுககையில் தூங்குவது கடினம். சற்று நிமிர்ந்து இருந்தவாறே தூங்குவார். ஒலிவர் திருமணமாகி சில வருடங்களில் மனைவியை புற்று நோயால் இழந்தவர். இரண்டாம் தடவை தன் பிஸ்னசில் வேலை செய்த எமிலி என்ற பெண்ணைத் திருமணம் செய்தர். அவருக்குப் பீட்டர் என்ற ஒரு மகன் மட்டுமே. ஓலி;வர் பண வசதி படைத்தவர். அவருக்கு நாலறை அறைகள் கொண்ட பங்களா, விலை கூடிய வீதியான மிசிசாகா வீதியில் உண்டு. அடிக்கடி அவர் மனைவி; எமிலியும் மகன் பீட்டரும் தினமும் வந்து ஒலிவரை பார்த்துப் போவார்கள். ஒலிவர் பிறந்து வளர்ந்தது மிசிசாகாவில்.

மற்ற நோயாளியின் பெயர் தோமஸ். பாங்கொன்றில் பல ஆண்டுகள் வேலை செய்தவர். இவர் பிறநதது மிசிசாகாவுக்கு அருகாமையில உள்ள மில்டன் நகரில். எண்பது வயதைத் தாண்டிய தோமஸ, தனிமை காரணமாக தொடர்ந்து புகைபிடித்ததால் நுரையீரலில் புற்று நோயால் பாதிக்கப்ட்டவர். திருமணமாகி சில வருடங்களுக்குள் மனைவியை விவாகரத்து செய்தவர். பிள்ளைகள கிடையாது. முதியோர் இல்லத்தில் வாழ்பவர். அவரை ஒருவரும் பார்க்க வருவதில்லை.

ஒலிவரும்; தோமசும் ஒரே தினத்தன்று வார்டில் உள்ள அறைக்கு வந்தவர்கள். என்றுமே அறிமுகமாகாத இருவரும் அறைக்குள் வந்து அரை மணி நேரத்துக்குள் தங்களை அறிமுகப் படுத்திக் கொண்டார்கள்.

தோமசுக்கு அறையில் உள்ள ஜன்னலுக்கு அருகே படுக்கை கொடுக்கப்பட்டது. அறையில் உள்ள நோயாளிகளுக்கு போழுது போக டிவி வசதி உண்டு ஆனால் அந்தச் சேவைக்கான செiவை தினமும் கொடுத்தாக வேண்டும். பண வசதி படைத்த ஒலிவரின் பொழுது போவதறகு டிவி வசதியை மகன் பீட்டர் ஒழுங்கு செயதிருந்தார். ஒலிவரி;ன் படுக்கை நேரே பெரிய கடிகாரம். எந்த நேரம் போசனம் வரும் என்பதை நேரததை பாரத்தபடியே ஒலிவர் இருப்பார். அவர் ஒரு போசனப் பிரியர்.

“ என்ன தோமஸ், நேரம் பதின்ரெண்டு பத்தாகி விட்டது. இன்னும் பகல போசனம் வரவில்லையே” தோமசிடம் முறைப்பாடு செய்தாhர் ஒலிவர்.

“ இந்த ஆஸபததி;ரியில் காலை போசனம் எட்டு மணிக்கும் , பகல் போசனம் பதின்இரண்டு மணிக்கும், இரவு போசனம் மாலை ஐந்துணிக்கும் கொடுப்பது வழமை. இவர்கள் தரும் போசனம் இலவசம். கொஞ்சம் பொறுமையாக இரும் வெகு விரைவில் பகல் போசனம் வரும்” என்றார் தோமஸ்

தோமசுக்கு எபபோதும் சிந்தித்தபடியே இருப்பார்.

“ என்ன தோமஸ எப்போது பார்த்தாலும் சிந்தித்தபடியே இருக்கிறீர. உமக்குதான் மனைவி பிள்ளைகள் என்று இல்லையா? ஒருவரும்; உம்மை பார்க்க வருவதில்லையே. அப்படி என்ன யோசிக்கிறீர்”?

“ நான் ஒரு காலத்தில எழுத்தாளனாக இருந்தவன். எனது இரு சிறுகதைகளுக்கு பரிசுகள் கிடைத்தது. அச்; சிறுகதைகளில நான் எழுதி பரிசு வாங்கிய தனிமை என்ற கதையைப் பற்றித்தான் யோசித்தனான்” தோமஸ் காரணத்தைச் சொன்னார்.

“ நீர் ஒரு சிறுகதை எழுத்தாளன் என்பதை கேட்டு மகிழச்சி. இப்பவும் எதுகிறீரா”?

“ இல்லை. ஆனால் நடக்கும் சம்பவங்களை பார்த்தோ, கேட்டோ அதை கருவாக வைத்து சிறுகதையை மனதுக்குள் உருவாக்கி மகிழச்சி அடைவேன். இது எனது தனிமையை போக்கும் ஒரு வழி” தோமஸ் சொன்னார்.

“தோமஸ் நீர் கொடுத்து வைத்தனீர் ஜன்னலுக்கு அருகே படுக்கை கிடைப்பதற்கு. இயற்கைக் காட்சிகளைக் கண்டு இரசிக்கலாம். போவோர் வரவோரைப் பார்க்கலாம். நீர் ஜன்னலூடாக பார்த்து இரசித்ததை எனக்குச் சொலமுடியமா? என்றார் ஒலிவர், தோமசுக்க ஜன்னலுக்கு அருகே படுக்கை கிடைத்ததையிட்டு ஒலிவர் பொறாமைப் பட்டார்.

“ ஏன் ஒலிவர், உமக்கு உம் மகன் டிவி பார்க்கும் வசதி செய்து தந்திருக்கிறாரே. அமெரிக்க ஜனாதிபதி எலக்சன் பற்றிய செயதிகளை பார்க்கலாம்;. குனடா நியூஸ் பார்கலாம், கால நிலைபற்றி தெரிந்;து கொள்ளலாம். படங்கள் பார்க்கலாம். இதைவிட வேறு என்ன தேவை” ஒலிவர் கேட்டார்.

“ எனக்கு இயற்கை காட்சிகளைப் பார்த்து இரசிப்பதில் ஆர்வம். பல தடவை நான் என் மனைவியோடும், மகனோடும் ஒன்றாரியொ வட பகுதிக்கு போயிருக்கிறன். அரோரா எனப்படம் வானத்தில தோன்றும் வட துருவ வர்ணக் காட்சியை கண்டு அதிசயித்திருக்கிறன். கனடா அழகான இயற்கை காட்சிகள நிறைந்த இடங்கள் பல உண்டு. ஆறுகள், குளங்கள். மலைகள், பருவ காலத்தோடு நிறம் மாறும் மரங்கள், இப்படி எத்தனையோ காட்சிகள். ஆற்றில் படகில போய் சல்மன் மீன் பிடிப்பது என் பொழுது போக்கு”.

“ அப்படியா? நானும் இயற்கையின் ரசிகன் தான். என்ன ஒற்றுமை பார்த்தீரா”?

“ ஜன்னலூடாக என்ன பார்த்தனீர் என்று எனக்குச் சொல்லமுடியமா தோமஸ்? அதைப் பார்க்க எனக்கு கொடுத்து வைக்கவிட்டாலும், கேட்டாவது நான் மனதிருப்தியடைகிறேன்”.

தோமஸ் சில வினாடிகள் யோசித்தார். “நான் ஜன்னலூடாக பார்க்கும் காட்சி அடிக்கடி மாறிக கொணடிருக்கும். இது இளையுதிர் காலமல்லா. மேப்பில் மரத்தின் இலைகள் நிறம் மாறிக் கொணடிருக்கிறது. பார்க்கில் முயல்கள் தன் குட்டிகளோடு ஒடி விளையாடுகின்றன. கனேடிய வாத்துகள் தன் குஞ்சுகனோமு சிற்றாற்றில் நீந்துகின்றன. சிற்றாற்றின் மேல் உள்ள மரப்பாலத்தில் நின்றவாறு நீந்தும் வாத்துக்களை இருசித்தவாறு ஒரு காதல் ஜோடி இரசிக்கிறார்கள். சக்கர நாற்காலியில் ஒரு கிழவியை வைத்து, இளம் பெண் ஒருத்தி தள்ளிக்கொண்டு போகிறாள். நான்கு குழந்தைகள் மரங்களுக்குப பின்னால்; ஒளித்து விளையாடுகிறார்கள். இருவர் பார்க்கில் உள்ள ஒற்றயடிப்பாதையில் நடந்து செல்கிறார்கள்.” தோமஸ் ஜன்னல் காட்சியை விபரித்தார்.

“தோமஸ் நீர் கொடுத்து வைத்தனீர். ஒவ்வொரு நாளும் எனக்கு நீர் கண்ட காட்சியை விபரிக்க முடியமா? அதைக் கேட்டு; நான் தீருப்தியடைவேன்” ஒலிவர் தோமசைக் கேட்டார்.

“ முடிந்தால் விபரிக்கிறன்” பதில் சொன்னார் தோமஸ்.

அன்றிரவு இருவரும் அரைமணி நேரம் கனடாவின் அழகைப்பற்றி உரையாடினார்கள். அவர்கள் இருவரும் தூங்க இரவு ஒன்பது மணியாகிவிட்டது. “குட் நைட்”; சொல்லி இருவரும் தூங்கினார்கள்.

காலை ஒலிவர் கண் விழித்த போது எட்டு மணியாகிவிட்து. “குட் மோரனிங்”
சொல்ல தோமஸ் படுத்திருந்த கட்டிலைப் பார்த்தார். அவரைக் கட்டிலில் காணவில்லை. நேர்சை அழைத்து தோமஸ் எங்கே என்று ஒலிவர் கேட்டார்.
“நேற்றிரவு தூக்கத்தில் தோமசின் உயிர் பிரிந்து விட்டது. டாகடரகள்; வந்து பரிசோதித்து விட்டு, அவர் உயிர் நித்திரையில் பிரிந்து விட்டதாக சொன்னார்கள். மோச்சரிக்கு தோமசின் உடலை கொண்டு போய் விட்டார்கள்” என்றாள் நேர்ஸ்.

“ என்ன தோமஸ் இறநது விட்டாரா? என்னால் நம்பமுடியவில்லை. நேற்று இரவு நாங்கள் இருவரும்; ஒன்பது மணி வiர் பேசிக் கொணடிருந்தோமே”இ கவலையோடு ஒலிவர் செர்ன்னார்.

“ தோமசுக்கு இருந்தது புற்று நோய். உயிர் எந்த நேரமும் பிரியலாம் என்ற டாக்டர்கள் சொல்லிப்போட்டார்கள். கஷ்டப்படாமல் நித்திரையில் போய்விட்டார்”இ நேர்ஸ் கவலையோடு சொன்னாள். ஓலிவர் அதிர்ச்சியில் மௌனமானார்.

ஓலிவர் பத்து நிமிடங்களுக்குப் பின் நேர்சை அழைத்தார்.

“ நேர்ஸ் எனக்கு ஒரு உதவி செய்ய முடியமா?

“ என்ன உதவி சேர்”?. நேர்ஸ் கேட்டாள்.

“ எனது படுககையை ஜன்னலுக்கு அருகே மாற்றமுடியுமா”?

“நான் ஓபிசீல் கேட்டு அவர்களின் அனுமதி பெற்று உங்கள் படுக்கையை ஜன்னலுக்கு அருகே மாற்ற என்னால் முடிந்ததைச் செய்கிறேன்”இ பதில் சொன்னாள் நேர்ஸ்;.

ஓலிவரின் விருப்பத்தின் படி அவரது படுக்கை ஜன்னலக்கு அருகே மாற்றப்பட்டது. சந்தோஷத்தில் தோமஸ் பார்த்து விபரித்த காட்சியை கண்டு இரசிக்க ஜன்னலூடாக பார்த்தார். அவருக்குப் பெரும் ஏமாற்றம். ஒரு சுவர் மட்டுமே தெரிந்தது. தோமஸ் வர்ணித்த இயற்கைக் காட்சியைக் காணவில்லை. உடனே ஒலிவர் நேர்சை அழைத்தார்.

“ சேர் நீங்கள் கேட்டபடி ஜன்னலுக்க அருகே படுக்கை தந்திருக்கிறன். இனி என்ன வேண்டும் உங்களுக்கு”?, நேர்ஸ் கேட்டாள்.

“எனக்குப் பெரிய ஏமாற்றமாக இருக்கிறது. நான் ஜன்னலூடாக பார்ப்பது தோமஸ் விபரித்த காட்சிகள் அல்ல. அவர் எனக்கு ஏன் பொய் சொன்னார்? எனக்குத் தெரிவது ஒரு சுவர் மட்டுமே” விரக்தியோடு ஒலிவர் சொன்னார்.

“சேர், தோமசுக்கு கண்தெரியாது. அவர் ஒரு எழுத்தாளர் என்று உங்களுக்க சொல்லியிருப்பாரே. அதனால்; ஜன்னலினூடாகத்; தான் கண்;ட காட்சியை தன் கற்பனையில், தான் எழுதிய கதையோடு இணைத்து விபரித்திருக்கிறார் போல இருக்கு “இ நேர்ஸ் சொன்னாள்.

“திறமையான கற்பனை வளம் உள்ள ஒரு எழுத்தாளரை நாம் இழந்துவிட்டோம்” என்றார் கவலையோடு ஒலிவர்’.

*******

எழுதியவர் : பொன் குலேந்திரன் - கனடா (18-Oct-16, 7:15 pm)
Tanglish : jannal
பார்வை : 370

மேலே