மழை கடவுள்

வான் எங்கும் இருண்டு
கொள்கிறது..
மெல்ல உன் வாசனை
வெளியே வருகிறது...
பறவைகள் எல்லாம் தன் கூடுகளுக்குள் தஞ்சம்
புகுகின்றன..
ரோட்டோர கடைகள் எல்லாம்
சுருட்டி கொள்கின்றன...
மெல்லிய காற்று மனதை வருடுகிறது...
எங்கோ தூரத்தில் எனக்கான
பாடல் ஒலிக்கிறது...
பாதசாரிகள் எல்லாம் வேகமாக தங்கள் வீடுகளுக்குள் தஞ்சம் அடைகின்றனர்...
மெல்லிய தூரலாய் நீ பூமியில்
பாதம் பதிக்கிறாய்...
பின் வேகமெடுத்து அடை
மழையாய் பொழிகிறாய்..
உன்னை கண்ட விவசாயிகள் எல்லாம் கொண்டாடுகின்றனர்..
குழந்தைகள் எல்லாம் உன்னில் நனைந்து குதூகலிக்கின்றனர்..
நீ சென்ற இடமெல்லாம்
பசுமையாய் மாறியது..
உன் பாதம் பட்ட வறண்ட இடமெல்லாம் வளர்ச்சி
நிலமாய் மாறியது..
உன்னை எல்லோரும் கடவுளுக்கு நிகராய் வணங்கினர்..

எழுதியவர் : கா. அம்பிகா (20-Oct-16, 11:52 pm)
Tanglish : mazhai kadavul
பார்வை : 354

மேலே