கார் காலமே வருக

கொதித்து கொண்டிருந்த தேகமெல்லாம்
குளிரால் நடுங்க தொடங்குது!!!

செத்து போன கரு வண்டுகளின்
வாரிசுகளெல்லாம் தேன் குளிக்க தயாராகின்றது!!!

இளநீருக்கும் எண்ணெய் குளியலுக்கும்
இன்றோடு முற்று புள்ளி வைத்தாச்சு!!!

முப்பொழுதும் அனலை கக்கி கொண்டிருந்த பரிதையைச் சுற்றி
குளிர் சாதனை அறையை கட்டி கொடுக்க போகுது கரு வானம்!!!

இனி அடிக்கடி மின்சாரம் சண்டையிட்டு
தாய் வீடு செல்லும்!!!

வீட்டின் முற்றத்தில் காகித கப்பல்கள்
மாலுமியற்று குடை சாய்ந்து கிடைக்கும்!!!

ஒவ்வொரு நாளும் பிஞ்சு மனங்கள்
எதிர் பார்த்தே சலித்து போகும் பள்ளி விடுமுறைக்காக!!!

ஆம்!!!

கார் காலம் விரைவாக வருகிறது
வெயிலால் கரிந்த தோலை கனிய வைத்திடவே!!!

எழுதியவர் : அனுஷா தேவி... (21-Oct-16, 2:17 pm)
Tanglish : kaar kaalame varuka
பார்வை : 388

மேலே