அப்பா

அப்பா
=======
நாள்தோறும் வாழ,
நாளெல்லாம்
போராட்டம்...

ஒரு நாளும் ஓய்வின்றி
ஊரெல்லாம்
இவர் ஓட்டம்...

இவர்
வாழ்வும், சாவும்
எனக்கானது அன்றோ,

இவரென்தந்தை
என்று நான்
பெருமைகொண்டேன்...

மறுஜென்ம்என்றால்
மறவாமல் நான் கேட்பேன்
இவர் வேண்டும் என்று....

மனோஜ்

எழுதியவர் : மனோஜ் (21-Oct-16, 2:50 pm)
Tanglish : appa
பார்வை : 707

மேலே