வறுமை

வறுமை
=======

கந்தல் ஆடை அணிந்து,
கால் வயிறு மட்டும் நிறைஞ்சு,

பள்ளிக்கூடம் போற
பசங்கள பாத்து ஏங்கி,
பாதி இரவு மட்டுமே
இவள் என்றும் உறங்கி,

எல்லாரும் விளையாட
போக இவ மட்டும்
இயந்திரமா ஓட,

இவளோட ஆசை காத்தோட போச்சு,
இவளுக்கு இன்பம் இல்லாம போச்சு,

அம்மாக்கு துணையா
அடுத்து வீட்டுல
பத்து பாத்திரம் தேச்சு,

அப்பா கூலி வேலை
செஞ்சு அலுப்புல வந்த
கை கால் புடிச்சுவிட்டு,

வருஷம் ஒரு முறை
வரும் ஊர் கோவில்
திருவிழாதான் தீபாவளி
அவளுக்கு,

நிலா தான் பல
நேரங்களில் மின்விளக்கு
அவளுக்கு,

மறுபிறவில கடவுள்கிட்ட
அவகேட்டா,
அம்மாக்கு நல்ல சேலை,
அப்பாக்கு நல்ல வேலை,
தம்பிக்கு நல்ல படிப்பு,
தங்கைக்கு நல்ல உடுப்பு,
தனக்கொன்றும் வேணாம்னு
அவள் நினைக்க,

பொருள் கொண்டும் உதவாத
பலர் வாழும் இவ்வுலகில்,
தனக்குன்னு வேறொண்ணும்
கேட்காத இவள் மனசு,
கருமையில் பிறக்கின்ற
வைரம் போல,
வறுமையிலும் மகிழ்கின்ற
பெண்தேவதை....

மனோஜ்

எழுதியவர் : மனோஜ் (21-Oct-16, 3:32 pm)
Tanglish : varumai
பார்வை : 700

மேலே