இதும் ஒரு வித காதல் தான்

நீ என்ன மரமா?- என் நினைவுகள் உன் இதயத்தை
முட்டி மோதவில்லையா? இன்னும் எவ்வளவு
காலம் சிறையில் அடைபட்டு இருக்கப்போகிறாய்?
உடைத்து வெளி வர மனமில்லையா?- இல்லை
மனமே இல்லையா??? உன்னிடம்
ஆகாயத்தில் மிளிரும் விண்மீன்கள் கூட -தன்
முகம் மறைக்கும் மேகத்தை கிழித்து வெளி வருகிறது -நீ
ஏன் இன்னும் கல்லாகி நிற்கின்றாய்? -உன்னவளின்
கரம்பிடிக்க யார் உதவி நாடி நிற்கின்றாய்? -வா என்றால்
வந்துவிடப்போகிறாள் -ஆனால்
அச்சொல்லோ உன் அகராதியில்
இல்லாத மாதிரி வெகுண்டெழுந்து சீறுகிறாய் - யார் வாழ்விற்காக
யாரிடம் கையேந்தி நிற்கிறாய்?-நான்கு சுவருக்குள் பேச வேண்டிய
விஷியத்தை நாற்புறமும் சிதறிவிட்டாய் -நீ
சிதறியது வெறும் கடும்சொற்கள் அல்ல
உன் கௌரவத்தை ,என் தன்மானத்தை நமது பண்பாட்டை
நீயெல்லாம் என்ன ஆண்மகன்?
உன்னவளை உணரமுடியாமல் உரைக்க கூறுகிறாய் நாசமா போ என்று -
அட பைத்தியக்காரா................
நாசமா போவது நான்மட்டும் அல்ல நம் வாழ்வும் தான்
என்பதை என்று நீ உண( ர்வு ) ர போகிறாயோ?
தெரியவில்லை அது வரையில்....... நமக்கு வாழ்வும் இல்லை .......
கூடி நின்று வசை பாடியவர்களுக்கு என்ன தெரியும்?
நமது நினைவுகளின் ஓசைகள் நமது செவியில் இடியாக முழங்குவதும்
நினைவு அலைகள் சூறாவளியாக சுற்றி சுற்றி இதயத்தை சுழட்டுவதும்
கால்களுக்கு நடக்க பிடிக்காமலும்
கண்களுக்கு இமைக்க பிடிக்காமலும்
நிமிர்ந்து நடந்து ,சிரித்து மகிழ யார் இருக்கிறார்கள்
நம் வாழ்வில் என என்னும் போது
ஆயிரம் நட்சத்திரங்கள் சிரித்தாலும்
ஒற்றை நிலவுக்கு இருக்குற மவுசு தானே அதிகம் என்னும் போதும் -உன்
நிலவுதானே உன்னை சுட்டுவிட்டதே! என்று யாரோ
முழங்குவது அறைகூவலாக என்
இதயத்தை , செவியை ரணமாக அறுக்கிறது -
ஆண்டவா உனக்கும் கருணை இல்லையா
என்னை வாரி அணைக்க உனக்குகூட கரம் இல்லையா?

எழுதியவர் : prabavathi (21-Oct-16, 4:18 pm)
பார்வை : 115

மேலே