அண்ணா

அண்ணா என்ன ஒரு மந்திரச்சொல்
அந்த வார்த்தையை உதிர்த்த உடனே வலி யாவும்
நொடியில் காணாமல் போய்விடுகிறதே...
என்னுடன் பிறந்த தோழன் என்பதா.....
தந்தை என்பதா....

அண்ணன் என்கிறேன்
அதில் யாவும் அடங்கிவிட்டதே.....
உன்னை காணும்
வேளை தான்
நிம்மதி பிறக்குமே
என் அண்ணன் அருகில்
இருக்கிறார் என்றே.....

என் செந்நீரை பார்த்து பயந்து கண்ணீர் வடித்தவர்.....
என் செல்ல எதிரி..... விளையாட்டுக்காட்டும் தோழன்.....
பயமுறுத்தும் இராட்சசன்.....
பாதுகாக்கும் இரட்சகன்......
கோபத்தில் தந்தை.....
அணைப்பில் அன்னை.....

உன்னை ஒவ்வொரு வார்த்தையில் சொல்வதை விட அண்ணன்
என்னுயிர் எனலாம்

என் செந்நீருக்கு
தீர்வு காண
கால் வலிக்க
மருத்துவமனையில்
எனக்காய் நின்றவர்...

உயிர்க்குருதியை
தந்தது நீ
உயிரோடு வாழ்கிறேன் உன்னால்...

~ உன் தங்கை (முதல் தோழி இரண்டாவது எதிரி) பிரபாவதி
சந்திரசேகர் வீரமுத்து

*******************************

அண்ணா ........
மொக்கையாகத் தான்
இருக்கும்.....
நான் எழுதியது......
என்ன செய்வது
எனக்கு வந்தது இவ்வளவே.....
இது உனக்கே உனக்கானது அண்ணா.........

இவ்வளவு பாசமாக ஒரு நாளும் பேசியதில்லை
அதனால் நம்ப முடியாது தான்.....
பாசத்தை தான்
நாம் அர்த்தமான
சண்டையாக வெளிக்காட்டுகிறோமே....

பாசமலர் என்று
சொல்வார்கள்
சொல்லி விட்டு
போகட்டும்....

(பாசத்திற்காகத் தான் எழுதுகிறேன் எப்பொழுதும்.....
பரிசிற்காக அல்ல.....)

உன் மடியில்
ஓர் வரம் கேட்பேன் நான்.....
நிரந்தரமான நிம்மதியான நித்திரை
வேண்டுமென்றே.....

அண்ணா...............................


~ உன் தங்கை
பிரபாவதி வீரமுத்து

எழுதியவர் : பிரபாவதி வீரமுத்து (23-Oct-16, 11:58 pm)
Tanglish : ANNAA
பார்வை : 3865

மேலே